| 182 | திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும் |
Periya Puranam
நீண்டதொல்
புகழார் - இவர்களது புகழ் இடத்தாலுங் காலத்தாலும்
பரந்துள்ளது என்பதாம். இடத்தால் நீளமும் காலத்தால் தொன்மையும் ஆகிய
புகழ் ஆதலின் நீண்ட என்றும், தொல் என்றும் கூறினார். சொல்லிலடங்காது
நீண்ட என்க.
நிலைமை
- நிலைபெற்றிருக்கும் தன்மை. அது “ஓதுகாதல் நெறியின்
நிற்றல்.“
வாழ்த்துக்கேன் - ஏத்துகேன் - வாழ்த்துகேன்
வினையாலணையும்
பெயர். வாழ்த்துவேனாகிய யான் - ஏத்துகேன் என்னும் பயனிலை கொண்டு
முடிந்தது. 10
| 146.
|
இந்த
மாதவர் கூட்டத்தை யெம்பிரான் |
|
| |
அந்த
மில்புக ழாலால சுந்தரன்
சுந்த ரத்திருத் தொண்டத் தொகைத்தமிழ்
வந்து பாடிய வண்ண முரைசெய்வாம். |
11 |
(இ-ள்.)
வெளிப்படை. (மேலே பொது இலக்கணத்தாலும் சிறப்பிலக்க
ணத்தாலும் எடுத்துக் கூறப்பெற்ற) இந்த மாதவர்களுடைய திருக்கூட்டத்தை
எமது பெருமானாகிய அளவில்லாத புகழையுடைய ஆலால சுந்தரர்
இவ்வுலகிலே வந்து சுந்தரத் திருத்தொண்டத்தொகைத் தமிழ் பாடிய
வரலாற்றை மேலே சொல்லத் தொடங்குகின்றோம்.
(வி-ரை.)
இந்த - இந்தப் பகுதியில் 3 முதல் 10 வரை
திருப்பாட்டுக்களிற் கூறப்பெற்ற. மாதவர்
- தவஞ் செய்வோரில்
தலைமையானவர்.
ஆலாலசுந்தரன் வந்து கூட்டத்தைத் தமிழ்பாடிய வண்ணம்
என்று
கூட்டுக.
வண்ணம்
- வரலாறு, வந்து பாடிய வரலாற்றை இனிச் சொல்வோம்
என்று அடுத்துக்கூறும் தடுத்தாட்கொண்ட புராணத்திற்குத் தோற்றுவாய்
செய்தவாறு.
வந்து பாடிய வண்ணம்
- வந்த வண்ணமும் - பாடிய வண்ணமும்
என்று பிரித்து உரைத்துக்கொள்ளத் தக்கது. முன்னர்த் திருமலைச் சிறப்பிலே
29-வது திருப்பாட்டில், “நம்பிமற்றத் திசை, தங்கு தோற்றத்தில்“ என்றமட்டில்
உபமன்ய முனிவர் தம்மைச் சூழவிருந்த சுத்தயோகியர்களுக்குச்
சொல்லியருளினார். ஆலாலசுந்தரர் இப்பூவுலகில் அவதரிக்கக் காரணமாய்க்
கயிலையில் நிகழ்ந்த நிகழ்ச்சிகளை மட்டும் அங்கு விரித்துக்கூறினார்.
ஆலாலசுந்தரர் உலகில் அவதரித்துப் பாடியருளிய
திருத்தொண்டத்தொகையில் துதித்த அடியார்களை அதையே பின்பற்றித்
துதிக்கின்றேன் என்று ஆசிரியர் தொடங்கிக்கொண்டனர். ஆதலின்
கயிலையிலிருந்து வந்து அவதரித்த பின்பு திருத்தொண்டத்தொகை பாடுகின்ற
வரை இங்குப் பாயிரத்துடன் சேர்த்துச் சொல்லவேண்டியது அவசியமாயிற்று.
அதனைத் தடுத்தாட்கொண்ட புராணத்திலே இங்குப் பாயிரப்பகுதியில்
வைத்துக் கூறிப் பின் நூல் தொடங்கி ஓதுவதற்குக் காரணம் கூறியவாறு.
முன்பாட்டிலே “ஈண்டு வாழ்த்துகேன்“ என்று தமது விரிநூலைத் தொடங்கிக்
கொண்ட ஆசிரியர், நூல் சொல்வதற்கு முன்னர்த் தடுத்தாட்கொண்ட
புராணத்தை அமைத்ததற்குக் காரணம் இது என்கின்றார். மேலும் ஈண்டு
‘வாழ்த்துகேன்' என்று முன் பாட்டில் தொடங்கிக் கொண்டதையே
அனுவதித்துத் தடுத்தாட்கொண்ட புராணத்தின் இறுதியில் “எம்பிரான்
தமர்கள் திருத்தொண்டேத்தல் உறுகின்றேன்“ என்று பின்னரும் தோற்றுவாய்
செய்து விரிநூல் தொடங்கிக் கூறப்புகுகின்றதும் காண்க.
‘வந்து பாடிய வண்ண' மென்றதற்கு மேலே கூறியபடி வண்ணத்தை
என்று கொள்ளாது வண்ணத்தின்படி கொண்டு - என்னறிந் தேத்துகேன்?
அவர் வந்து பாடிய வண்ணத்தின்படிச் சொல்லுவேன் என்று முன் பாட்டோடு
கூட்டி உரை செய்வாருமுண்டு. மேற்காட்டியவாற்றால் அது
பொருளன்றென் றுணர்க.
வந்து -
(1) திருக்கயிலையிலிருந்து இதன் பொருட்டு இத்தென்றிசைக்கு
வந்து என்க. (2) “பண்ணையாரூரில் வருக நம்பால்“ எனத் தில்லையிற்
கூத்தப்
|
|
|
|