|
295.
(வி-ரை.)அருள்வகையால்
முன் தொடர்ந்து வரும் காதல்
முறைமை - திருமலைச் சருக்கத்திற் கூறியவாறு திருக்கயிலாயத்தின்
நிகழ்ச்சியினாலே சிவபெருமானது ஆணை வழியே தொடர்புபற்றி வருவது
என்றபடி. நம்பி தொடக்குண்டமை அருள்பற்றிய தொடர்பே யன்றிப் பிற
ஆன்மாக்கள்போலப் பிறவித் தொடக்கல்ல என்று அவரது தன்மை
உணர்த்தியவாறு.
நினைந்து - தொடக்குண்டு - உண்மகிழ்ந்து - சென்று
போய்ப்புக -
என்று கூட்டி முடிக்க.
தொடக்குண்டார்க்கு வருந்தலே முறையாயினும் தம்மை
ஆட்கொண்ட
பெரியானை நினைக்கவே அது மகிழ்ச்சி உண்டாக்கியது என்பார்
உண்மகிழ்ந்து என்றார்.
நன்று எனை ஆட்கொண்டவர் - நன்றாக - எனது நன்மையின்
பொருட்டே - என்னைத் திருவெண்ணெப் நல்லூரில் ஆளாகக் கொண்டவர்.
ஆள்களுக்குத் தமக்கென்று செயல் செய்துகொள்ளும் உரிமையும் வலிமையும்
இல்லையாதலின் ஆளாய்க் கொண்டவுடன் ஒரு மணம் விலக்கப்பட்டது;
ஆயின் அருட்குறிப்பின் வழி நிகழ்ந்த இவ்வேட்கையினையும் உள்ளிருந்தே
அறிபவனாகிய என்னை ஆளாகக்கொண்டவனே முற்றுவிக்க உரியவன்
என்பது குறிப்பு. ஆளுக்கு வேண்டுவனவற்றை, அவனை ஆளாக்
கொண்டவனே செய்தல் வேண்டும் என்ற முறையைக் குறிக்க
எனையாட்கொண்டவர் பால் நண்ணுவன் என்றார்.
உடைய நம்பி
- ஆளுடைய நம்பி. பெருமானுக்கு
ஆளாந்தன்மையுடைய நம்பி (285). ஆட்கொண்டவர் என்றதற்கேற்ப (ஆள்)
உடைய நம்பி என்றார். இறைவனைத் தோழமையாகப்பெற்ற உரிமையுடைய
நம்பி என்றலுமாம் (273).
நம்பியும்
- பரவையார் புகுந்ததுபோல நம்பியும் புக. இறந்தது
தழுவிய எச்ச உம்மை. இருவருக்கும் பற்றுக்கோடு அவ்வொருவரே என்பது
குறிப்பு.149
296.(வி-ரை.)
ஒருமருங்கு - ஒரு - வேறு ஒரு. நம்பி புகுந்த
மருங்கு
அல்லாமல் வேறொரு மருங்கு என்க. வேறு - வருவித்துரைக்கப்பட்டது.
பின்னர்க் கோயிலில் இருவர்க்கும் காட்சிநிகழவில்லை ஆதலின்.
(முன்னர்க்கூறிய காட்சித்துறை தொழுது சென்ற நம்பிகள் தொழச்செல்லும்
பரவையாரை மறுகிலே கண்டபோது நிகழ்ந்ததாம்.)
மெல்லியலார் தமைவேண்டி
- முன்னரே போற்றினர் (தமது
நியதிப்படி) தொழுது சென்றாராதலின், பின்னர் வந்து மெல்லியலார்
தமைவேண்டிப் பணிந்தார் என்றார். முன்னர்ச்செய்தது நிட்காமிய வழிபாடு
என்றும், பின்னர் நிகழ்ந்தது காமியத்தின் பாற்பட்டது என்றும் கூறுப.
இறைவனிடத்துக் காமியவழிபாடு செய்யலாகாது என்பாரை நோக்கி, அவரருள்
வகையால் முன் தொடர்ந்து வந்து விரவிய பெருங்காதல் காரணத்தால் இஃது
ஆம் என்று குறித்தார் என்க. 150
புரவலனார்
- புரத்தலிலே வல்லவர். தம்மை எம்மையினும் காப்பவர்
இதனினும் காத்தளிப்பார் என்ற குறிப்பு.
| 297.
|
அவ்வாறு
பணிந்தேத்தி யணியாரூர் மணிப்புற்றின்
|
|
| |
மைவாழுந்
திருமிடற்று வானவர்பா னின்றும்போந்
“தெவ்வாறு சென்றாளென் னின்னுயிரா மன்ன“
மெனச்
செவ்வாய்வெண் ணகைக்கொடியைத் தேடுவா
ராயினார்.
|
151 |
(இ-ள்.)
வெளிப்படை.. மெல்லியலார் தமை வேண்டிய அவ்வகையிலே
வணங்கித் துதித்து, அழகிய திருவாரூரில் மனிப் புற்றிலே யிடங்கொண்ட
திருநீலக்கண்டப் பெருமானிடத்திலிருந்து சென்று, “எங்கே சென்றனள் எனது
இனிய உயிர்போன்ற அன்னமாகிய பரவை“ என்று, அந்தச் சிவந்த
வாயையும், வெள்ளிய நகையையும் உடைய கொடிபோன்ற பரவையாரைத்
தேட முற்பட்டார் நம்பிகள்.
|