பக்கம் எண் :


372 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
  பரந்த வெம்பகற் கொல்கிப் பனிமதிக் கரங்க டீண்ட வலர்ந்த கயிரவம். 161

     (இ-ள்.)அரந்தை செய்வார்க்கு அழுங்கி - துன்பம் செய்யும் புல்லர்க்கு
வருந்தி; தம்.......போல் - தமது உயிர்க்காதலர் தம்மைத் தொட்டபோது
மலர்ச்சி யடையும் குல நலம் படைத்த பெண்கள்போல்; பரந்த.......ஒல்கி -
எங்கும் பரந்து வெம்மை செய்யும் சூரியன் கதிர்க் கைகள் படும்போது
மலராது வாடிக்குவிந்து; பனி........கயிரவம் - குளிர்ந்த சந்திரனுடைய கதிர்
கைகள் தீண்டியபோது ஆம்பல்கள் மலர்ந்தன.

     (வி-ரை.) பின்மாலையும் - முன்னிலாவும் முறையே கூறிய ஆசிரியர்
அவற்றின் பின் நிகழ்வனவாகிய ஆம்பல் மலர்தலும் நிலா முதிர்தலும்
அம்முறையே கூறுகின்றார்.

      கயிரவம் - ஆம்பல் மலர்கள். இவை பகலிற் குவிந்து இரவில்
மலரும் இயல்பு கொண்ட பூக்கள். மேற்பாட்டிற் கண்டவாறு, அன்று இரவு
வந்து, நிலா முகிழ்க்கவே ஆம்பல் அலர்ந்ததை இவ்வாறு குலமாதரின்
உவமான முகத்தால் ஆசிரியர் அழகுற வருணித்தல் காணத்தக்கது.
செய்வார்க்கு என்ற இடத்துச் செய்வார் கை தீண்டற்கு என்றும், பகற்கு என்ற
இடத்துப் பகலவன் கரங்கள் தீண்ட என்றும் இடநோக்கி வருவித்துரைத்துக்
கொள்க.

செய்வார்க்கு - செய்வார் செய்யும் அரந்தைகட்குஎன்க.
வரன் - தன்னாலே வரிக்கப் பெற்றவன் - மணமகன்.
குலமாதர் - குலம் என்பது இயல்பு குறித்து நின்றது.
பகற்கு - பகலைச் செய்யும் சூரியன் கதிர் தீண்டலுக்கு

                                ஆகுபெயர்.161

308. தோற்று மன்னுயிர் கட்கெலாந் தூய்மையே  
  சாற்று மின்பமுந் தண்மையுந் தந்துபோ
யாற்ற வண்டமெ லாம்பரந் தண்ணல்வெண் ணீற்றின் பேரொளி போன்றது நீணிலா.
162

     (இ-ள்.) தோற்றும்.........தந்து - இவ்வுலகில் பிறக்குமாறு இறைவன்
காட்டும் உயிர்களுக்கெல்லாம் தூய்மையையும், பலராலும் எடுத்துச் சொல்லப்
பெறும் இன்பத்தையும், குளிர்ச்சியையும் கொடுத்துச் செல்வதே யன்றி;
போய்.......பரந்து - பிற எல்லா அண்டங்களிலும் சென்று பரவி நிலவுகின்ற;
அண்ணல்........நீள்நிலா - பெருமையுடைய இறைவனது திருநீற்றினது
வெள்ளிய பெரிய ஒளிபோன்று நீண்ட ஒளிவிடும் நிலவு விளங்கலாயிற்று.

     (வி-ரை.) நிலா - தூய்மையே சாற்றும் இன்பமும் தண்மையும்
தந்து - போய் - பரந்து - நீற்றின் பேரொளி போன்றது என்று கூட்டுக.
நிலாவுக்கும் நீற்றுக்கும் உவமம். நம்பிகளது சிவக்கண்ணிற்கு நிலவின் ஒளி
சிவவொளிவீசும் திருநீற்றை நினைவு கூர்விக்கு மாதலின் இங்குத்
திருநீற்றொளியினை உவமை செய்தார் என்க.

      திருஞான சம்பந்தப் பெருந்தகையார் திருநெல்வாயில் அரத்துறையில்
முத்துச் சிவிகை பெற்றபோது அதன் ஒளி வெண்ணீற்றின் ஒளியை
ஒத்திருத்தலின் அதனைப் போற்றினார் என்று பின்னர்க் காண்போம்.

“சோதி முத்தின் சிவிகைசூழ் வந்துபார்
மீது தாழ்ந்துவெண் ணீற்றொளி போற்றிநின்
றாதி யாரரு ளாதலின் அஞ்செழுத்
தோதி யேறினா ருய்ய வுலகெலாம்“
- திருஞா - புரா - 216

      திருப்புகலூரிலிருந்து திருஞானசம்பந்த நாயனார் திருநாவுக்கரசு
நாயனாரது வரவுகேட்டு அடியார்களுடன் எதிர்கொண்டபோது இருதிறத்துத்
திருநீற்றுத் தொண்டர் குழாமும் ஒன்று கூடிய செயல் “இரண்டு நிலவின்
கடல்கள் ஒன்றாகி அணைந்தன