|
பயனாகப் பெற்ற அவரது
திருவருளின் மூமம்) கணவனை மேலே பெறுபவள்
போல; இனம் கொண்ட.......பரவையாரும் - தம்மோடு ஒத்து வாழும்
தன்மையுடைய தோழியர்கள் தம்மைச் சுற்றி வரவும், தம்மிடம் புதிதாய்
வந்தடைந்த காதலுடனே தனபாரங் கொண்டு தளர்வுற்ற இடையையுடைய
பரவையாரும்; வன்றொண்டர்பால்........சார்ந்தாள் - வன்றொண்டராகிய
நம்பிகளிடத்தே தம்மையும் சேடியரையும் விட்டுத் தனியாகப் போய்த்
திரும்பும்போது தமது மனமானது சேர்த்துக்கொண்டு வந்த பெரிதாகிய
மயலையும் மேற்கொண்டவராய்த் தமது அழகிய திருாமளிமையைச் சார்ந்தார்.
(வி-ரை.)
கனம் கொண்ட மணிகண்டர் - கனம் - மேகம்.
இங்கு
அதன் தன்மையைக் குறித்தது. கனம் கொண்ட கண்டர் - மேகத்தின்
கருமை, கொடை, உலகம் காத்தல் முதலிய எல்லாத் தன்மைகளுக்கும்
இருப்பிடமாதல். 297 திருப்பாட்டின்கீழ் மைவாழுந் திருமிடற்று வானவன்
என்றதன் உரைக்குறிப்பைப் பார்க்க. கனம் - பெருமையுமாம்.
வணங்கிக் கணவனைப் பெறுவாள்போலப் - பரவையும்
- சூழக் -
காதலோடு - மயலும்கொண்டு மாளிகையைச் சார்ந்தாள் என்று கூட்டிக்
முடிக்க.
கழல் வணங்கிக் கணவனை முன் பெறுவாள்போல - முன்
பெறுவாள் - முன் - காலமுன். வருங்காலத்திலே என்க. போலச் சார்ந்தாள்
என்க.
அன்னவரே
யெங்கணவ ராவா ரவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல் |
என்னும் திருவெம்பாவைக்
கருத்துங் காண்க.
முன்னே சென்று வணங்குதற்கும் பின்னே கணவனைப் பெறுதற்கும்
இடையில் மாளிகை சார்தல் நிகழ்ந்ததாதலின் வணங்கினதாகிய
காரணத்தையும் பெறுவதாகிய காரியத்தையும் கூட்டுவிக்கும் தொழில்போல்
மாளிகை சார்தல் நிகழ்ந்ததாம் என்பார் போல - என்றார்.
இனங்கொண்ட
- தம்மைப்போலவே தம்மிடத்து இனியராய் ஒன்றாய்க்
கூடிய தன்மை கொண்ட.
எய்து பெருங்காதல்
- (எண் கொள்ளாக் காதலினால், முன்பு
எய்தாமல் - 289) இன்று புதிதாய் எய்திய ஒரு பெரிய விருப்பம்.
தனங்கொண்டு தளர்
மருங்குல் - முன்னரே பணைத்ததோடு,
தனங்கள், காதலினாற் பின்னரும் பணைத்த காரணத்தால் மேலும் தளர்ந்த
இடை. அனங்கன்மெய்த் தனங்க ளீட்டங் கொள்ள மிக்குயர்வ போன்று
(282) என்று முன்னர்க் கூறியதற்கேற்பக் காதலோடுந் தனங் கொண்டு
என்றார்.
தனித்துச் சென்ற மனம்
- இனமான சேடியர் புடைசூழத் தாம்
செல்லினும், தமது மனம் தனித்து அவர்பாற் போயிற்று என்பது குறிப்பு.
மனம் கொண்டு வரும்
பெரிய மயல் - தனித்துச் சென்றதாயினும்
தாங்கலாகாப் பெருஞ் சுமையைக் கொண்டுவந்தது என்பதாம். கொண்டு
வரும் - ஒரு சொன்னீர்மைத்தாய்ப் பெற்றுச் சுமந்து வரும் என்ற பொருளில்
வந்தது. மனம் - கொண்டு - தயங்கப் போன நெஞ்சை மீள அழைத்துக்
கொண்டு. போயினது மனம் ஒன்றேயாயினும் வரும்போது மயலும் மனமுமாக
இரண்டாயிற்று என்க.
பரவையும்
- நம்பிகள் தேவாசிரியனைச் சார்ந்ததுபோலப் பரவையும்
மாளிகை சார்ந்தாள் - என எச்சவும்மை. 169
|