|
நலங்கொள்
பொற்கால் மாறில் மலர்ச்சேக்கை - நன்றாய்
அமைக்கப்பெற்ற பொற்கால்களையுடைய ஒப்பற்ற புதுப் பூக்கள் பரப்பிய
படுக்கை. படுக்கையில் மெல்லிய நறுமணமுள்ள புது மலர்களைப் பரப்புதல்
உயர் வாழ்வுடையார் வழக்கு. “இப்போதார் அமளிக்கே நேசமும்
வைத்தனையோ“ என்ற திருவாசகமும் (திருவெம்பாவை - 2) காண்க.
மணி நிலா முன்றில்
- அழகிய நிலா முற்றம். மணி என்பதை
முன்றிலுடன் சேர்க்க. மனமகிழ்ந்து இன்பவாழ்வு வாழ்தற்குத் தக்கவாறு
அழகாய் (மாடத்தின் மேற்புறம்) அமைந்த மேன்முற்றம். மரகதத் தூணும்,
மணிவேதிகையும், பொற்காலும், மலர்ச் சேக்கையும், மணிமுற்றமும் தாம்
ஒவ்வொன்றும் தத்தமக்கியன்ற குளிர்ச்சி தந்து நிலவின் தண்மைக்குத்
துணைசெய்து இன்பம் பெருக்கும் துணைக்கருவிகளாம்.
இருந்தாள் வந்து
- வந்து இருந்தாள். முன்றில் மருங்கு வந்து
வேதிகையிற் சேக்கைமிசை இருந்தாள் என மாற்றிக் கூட்டுக. இச்செய்கையை
இம்முறையிற் சொல்லாது மாறிச் சொன்னது பரவையாரது மனத்
தடுமாற்றத்தையும், மெல்லச் சென்றவர் எப்போது ஓரிடத்திற் கிடப்போம்
என்று செல்வார் போல விரைந்து சேக்கையில் இருந்தார் எனச் செல்லலின்
தாமதத்தையும், இருத்தலின் விரைவையும் குறித்தது. வந்து என்ற செயலுக்கு
முன் இருந்தாள் என்று கூறியிருக்கும் அழகையும் நோக்குக. காதல் நோய்
உள்ளே வெப்பஞ் செய்தலின் அதனை ஆற்றக் குளிர்ந்த நிலாமணி
முற்றத்துச்சென்று மலர்ச்சேக்கையில் இருந்தார் என்க.170
| 317.
|
அவ்வளவி
லருகிருந்து சேடிதனை முகநோக்கி
“யாரூ ராண்ட
|
|
| |
மைவிரவு
கண்டரைநாம் வணங்கப்போ
மறுகெதிர்வந் தவரா?“ ரென்ன,
“இவ்வுலகி லந்தணரா யிருவர்தே டொருவர்தா
மெதிர்நின் றாண்ட
சைவமுதற் றிருத்தொண்டர்; தம்பிரான் றோழனார்; நம்பி“
யென்றாள். |
171 |
(இ-ள்.)
அவ்வளவில்.......என்ன - அப்போது பக்கத்தில்
இருந்த
தோழியைப் பார்த்துத் “திருவாரூரை ஆளும் நீலகண்டராகிய தியாகராசப்
பெருமானை நாம் தொழச் செல்லும்போது வழியிலே எதிரில் வந்தவர்
யாவர்?“ என்று (பரவையார்) கேட்க; இவ்வுலகில்......என்றாள் - “அவரே
பிரமன் மால் முதலிய பெருந் தேவர்களுக்கும் காணுதற்கரியவராகிய ஒருவர்
(சிவபெருமான்) இவ்வுலகிலே அந்தணராய் உருக்கொண்டு வந்து மாறுபட்டார்
போலக் காட்டி நின்று வழக்கிட்டு ஆட்கொள்ளப் பெற்ற சைவ முதலாந்
திருத்தொண்டராயும், தம்பிரான் றோழராயும், உள்ள ஆளுடைய நம்பிகள்
ஆவார்“ என்று சொன்னாள்.
(வி-ரை.)
அருகிருந்த சேடி - சேடியார் பலருள்ளும், தனித்தபோதும்
உடனிருக்கும் உரிமைபெற்றுக் கூட இருந்த பாங்கி என்க. அதுவரையும்
மேறொருவருடனும் பேசாமலிருந்த பரவையார், மேலும் மனம்
ஆற்றாமையாலும், அப்போது தனித்து அருகு இருந்த பாங்கியின்
உரிமையாலும், சேடியை நோக்கித் தமது மனத்தை வெளிப்படுத்தும்
முறையிலே பேசி, ‘எதிர் வந்தவர் யாவர்?' எனக் கேட்டார் என்க.
ஆரூர் ஆண்ட
- தியாகராசர் ஆனதால் ஆட்சி அரசுரிமையாயிற்று
என்பார் ஆண்ட என்றார். எக்காலத்தும் ஆளுகின்ற என நிகழ்காலப்
பொருளில் வந்தது.
மைவிரவு கண்டர்
- விடம்போல் மேல் ஏறிச் சாகுந் தன்மை
செய்கின்ற இவ்வேதனையைக் காக்க வல்லவர் என்பது குறிப்பு.
|