பக்கம் எண் :


தில்லைவாழந்தணர்சருக்கம்393

Periya Puranam

புனைவான் - என்ற இப்பாட்டின் ஒரே எழுவாய் “என்றருளி“ - “என்றருள“
என இருவகையிலும் பொருந்தி முடிபுகொண்டவாறு காண்க. அவ்வொருவரே
இவ்விருவரையும் பற்றி நின்று கூட்டுவித்து அருள்செய்யும் அருளமைதியின்
குறிப்பு.

     பொன்னின்........புனைவான் - பரவையார் இவரது திருவுருவை
நினைந்து நினைந்து கவன்ற அவ்வுருவோடு காட்சி யளித்தார் என்பது
குறிப்பு. 323-வது திருப்பாட்டுக் காண்க. “ஆரொருவர் உள்குவார்
உள்ளத்துள்ளே, அவ்வுருவாய் நிற்கின்ற அருளுந் தோன்றும்“ என்பது
தேவாரம் (திருப்பூவணத் திருத்தாண்டகம் - 10).

      பொன்னின் புரி புன்சடை - பொன்னாற் புரித்ததுபோல நிறமும்
ஒளியும் வடிவு முடைய சிறுசடை. “பொன் நவில் புன்சடையா னடியில்
நீழல்“ என்ற வாசீசர் திருவாரூர் அரநெறித் தேவாரம் காண்க. “பொன்புரிந்த
புன்சடைக்கு“ - குமரகுருபரர். 179

      326. (வி-ரை.) காமத் துயரிற் கவல்வார் - உலகில் பிறர்
கவன்றுழலும் காமத் துயர்போல அவற்றுடன் ஒன்றாக வைத்து இது மயங்கி
யுரைத்தற்பாலதன்று. முன் தொடர்புபற்றி இது அருள் வகையால் தொடர்ந்து
வருதலால் என்பது.

      கரையில் இருளும் - இது கைக்கிளைக் காதற் பெருக்கு. இருள்
என உருவகப்படுத்தப் பெற்றது. இவர்களது மனத்திலே பெருமானது நினைவு
நின்றிருந்தபடியால் இது அகவிருள் அன்று. திருநாவுக்கரசு நாயனார்
புராணத்திலே,

“நீறணிந்தார் அகத்திருளும் நிறைகங்குற் புறத்திருளும்
மாறவரும் திருப்பள்ளி யெழுச்சி“

என்றதனோடு இதனை ஒத்துப் பார்க்க. “மாக்கள் சிந்தையுட் சார்ந்து நின்ற,
பொங்கிய இருள்“ என்று கூறியதும் (10) காண்க.

      கங்குல் கழிபோம் யாமத்து இருளும் புலர - “புலரும் படியன்று
இரவு“ என்று பரவையார் கூறி வருந்தியதாகிய அவ்விருளும் புலர என்க.
இரவு ஒவ்வோர் யாமமாகக் கழிய இருள் புலர.

      கதிரோன் எழுகாலை - கங்குல் இருள் புலரவும், கதிரவன் எழவும்
உள்ளதாகிய அதிகாலை என்க. எனவே அடியார்கள் தாந்தாங் கண்ட
கனாக்களை எண்ணி, அது கண்டபின், தமது முதற் கடமையாக,
அதிகாலையிலேயே கூடித் தொழுதனர். எழுகாலை - எழுந்து வரும் என
எதிர் காலமானதால் இன்னும் சூரியன் உதயமாகவில்லை; அவன் எழும்
செயல் இருள் போதலால் விளங்கிற்று என்னும் செயல் குறித்தது.

      சேமந் துணையாம் அவர் - “அடியவர்க் கெய்ப்பினில் வைப்பு“,
“அடியவரெய்ப்பினில் வைப்பாக் கருதிவைத்த, நிதியே“ (பதினொராந்
திருமுறை) என்பன வாதி திருவாக்குகள் காண்க. சேமம் - சேர்த்து வைத்த
உலவாக்கிழி - சேமம் செய்யும் துணை என்றலுமாம். அடியார்
நெஞ்சிற்சேமித்து (புதைத்து) வைத்து, வேண்டும்போது உதவும்படி எடுக்க
அருள்பவர்.

      தகுதீர்மை - அருளுக்கும், அவருக்கும், தமக்கும் தகுந்த தன்மை.
திருநாவலூர் கோன் - தாமக்குழலாள் - இவற்றில் திரு, தாமம் என்ற
அடைமொழியின் மங்கலக் மணக்கோலத்தின் நிலையைக் குறித்தன. 180

வேறு

327. தென்னாவ லூர்மன்னன் றேவர்பிரான்
                           றிருவருளான்
 
  மின்னாருங் கொடிமருங்குற் பரவையெனும்
                           மெல்லியறன்
பொன்னாரு முலையோங்கற் புணர்குவடே
                             சார்வாகப்
பன்னாளும் பயில் யோகம் பரம்பரையின்
                           விரும்பினார்.
181

     (இ-ள்.) தென் நாவலூர் மன்னன் - அழகிய திருநாவலூரர்; தேவர்
பிரான் திருவருளால் - தியாகேசப் பெருமானது திருவருளினாலே;
மின்.....சார்வாக - மின்ன