|
இறைவனைக் கிடைக்கப்
பெற்றவர்; தமக்கொப்பில்லாதவர்கள்;
திருத்தொண்டத் தொகையின் முதலில் வைத்துத் திருவாரூர்ப் பெருமான்
திருவாக்கினாற் சொல்லப்பெற்ற பெருமையுடையார்கள், இவர்கள் என்றும்
பொதுநடம் போற்றி வாழ்வாராக!
கற்பனை :-
1. இறைவனது ஐந்தொழிற் றிருக்கூத்தினைச் சகள
நிட்களவழி பாடுகளால் திருத்தில்லை யம்பலத்தில் கண்டு வழிபடுதல்
சிறப்புத் தருவதாகும்.
2. அடித்தவம், அகம்படித் தொண்டு, ஆளாந் திரு
இவற்றின்
சிறப்பியல்புகள் உணர்ந்து போற்றத் தக்கன.
3. மானமும் பொறையும் தாங்கிய மனையறமே சிறந்தது.
4. நான்மறை ஆறங்கம் பயின்று வருதலும், மரபுக்கு
மறு வாராமற்
காத்தலும், நல் ஒழுக்கத்து நிற்றலும், ஞான முதலிய நான்கும் தெரிதலும்,
தானமும் தவமும் சார்தலும், தருமமே பொருளாக் கொள்ளுதலும்,
அந்தணர்க்குப் பொதுமையாயும், தில்லைவாழந்தணர்க்குச்
சிறப்பாயும் உரியன.
5. உயிர்கள் உறுவது திருநீற்றின் செல்வம்; பெறுவது
சிவன்பாலன்பாம் பேறு.
6. இம்மையே முதல்வரைப் போற்றப் பெற்று வாழ்வார்கள்
இனிப்
பெறத்தக்க பேறு வேறில்லையாம்.
7. பிறர் எண்ணுகின்றபடி வேதவிதியாகிய வைதிக
வொழுக்கமட்டு
மல்லாமல் அதனின் மேற்பட்ட ஆகமவிதியாகிய சைவசித்தாந்தத்
திருநீற்றின் நெறியும், அடித்தவமும், சிவஞானமும்
தில்லைவாழந்தணர்க்குரியன.
தில்லைவாழந்தணர்
புராணம் முற்றிற்று
|