|
திற் பெண்ணின் பெருமை
விளங்குவது என்றும் வந்தவாறு ஆராய்ச்சியுரை
கூறுவாருமுண்டு. தங்கேளவர் ஒரு பரத்தைபால் அணைந்ததனால்
மானமுன்பொறாது வந்த ஊடலாலே மனைவியார் புலந்ததும்
ஆணையிட்டதும் ஆம். நாயனாரை நல்வழிப்படுத்தும் எண்ணத்துடன்
அவர் இது செய்தார் என்பது யாண்டும் பெறப்படுதலில்லை. நாயனார்
பெண்களின்மேல் வரும் காம நோக்கத்தைத் துறக்க மனைவியார் எவ்வாறு
துணை செய்தனர் என்பதும் காணப்பெறவில்லை. அது கருதி நீலகண்ட
ஆணையிட்டார் என்பது பெறப்படாமை காண்க. இப்புராணத்திலே
எவ்வாற்றானும் நாயனார் பெருமையே விளங்குவதாம். இது விளங்கத்
துணை நிற்றலேயன்றி மற்றுப் பெண்ணின் பெருமை விளங்கக் கண்டிலேம்
இப்புராணச் சரித அமைவும் நோக்கமும் அதுவன்று என்க. அற்றாயின்
இதனைத் திருநீலகண்ட நாயனார் புராணமென்னாது, திருநீலகண்டர்
மனைவியார் புராணமென்றே கூறவேண்டிவரும். எனவே,
இவ்வாராய்ச்சியுரைகள் பொருந்தா என்க.
தம்மையென்றன்
- என்பதும் பாடம். 7
| 367.
|
கற்புறு
மனைவி யாருங் கணவனார்க் கான
வெல்லாம்
|
|
| |
பொற்புற
மெய்யு றாமற் பொருந்துவ போற்றிச்
செய்ய
இற்புறம் பொழியா ரங்க ணிருவரும் வேறு வைகி
அற்புறு புணர்ச்சி யின்மை யயலறி யாமை
வாழ்ந்தார்.
|
8 |
(இ-ள்.)
கற்புறு.....செய்ய - கற்புடைய மனைவியாரும்
தமது
நாயகருக்கு வேண்டுவனவாகிய எல்லாப் பணிவிடைகளையும் அழகு
பெறவும், ஆனால், தமது மேனி அவரது மேனியிற் றீண்டாமலும்,
இல்வாழ்க்கையிற் பொருந்தும் செய்கைகளைச் சோர்வுபடாது காத்துச்
செய்துவந்தாராக; இற்புறம்பு....வைகி -
தமது வீட்டைவிட்டு வெளியிலே
நீங்காது, அவ்வொரு வீட்டிற்றானே இருவரும் தனித்தனி வாழ்வார்களாகி;
அற்புறு....வாழ்ந்தார் - அன்பு செலுத்தும்
மெய்யுறு புணர்ச்சி
ஒன்றுமட்டும் இல்லாது வாழும் தன்மையை அயலார் ஒருவரும்
தெரியாதவாறு வாழ்ந்து வந்தார்கள்.
(வி-ரை.)
கற்புறு மனைவியார் - தான்
இருக்க - தங்கியிருத்தற்
கேற்ற - இடமிதுவே என்று கற்பு வந்து சேர்தற்குரிய மனைவியார்.
அருந்ததிக் கற்பின் மிக்கார் - (363) என முன்னர்க் கூறியது இவரது
கற்பின்றிறம் புலவி கொண்ட போது திறம்பாத நிலையைக் குறித்தது.
தமது புலவியின் மிகுதிப் பாட்டிலே சொன்ன ஆணையாலே, இவ்வாறு.
இல்வாழ்க்கையிற் சிறப்புத் தன்மையாகிய மெய்யுறு புணர்ச்சியையும்,
அதனாற்பெற நின்ற நன்கலனாகிய மக்கட்பேற்றையும் இழக்க நேர்ந்தது.
இவ்வகையாலே வாழ்க்கைப் பயனுக்குதவாது தாம் கணவனாராற்றுறக்கப்பட
நேரிட்டபோதிலும் கற்பு நிலையிற்றிரியாது கணவனார்க்கானவற்றை
யெல்லாம் போற்றிச்செய்து வாழ்ந்த சிறப்பினை உணர்த்தற்கு மீண்டும்
கற்புறு மனைவியார் என அநுவதித்துக் காட்டியவாறு.
பொற்புற மெய்யுறாமல்
- அழகுபடச் செய்தனர்; ஆனால்
அவ்வாறு செய்தலிலே இருவரும் மேற்கொண்ட ஆணைவழியே நிற்பார்
உடம்பு படாமற் செய்தார் என்க. பொற்பு உறவும், மெய் உறாமலும் என்ற
சொல்லழகும் காண்க.
பொருந்துவ
- மெய்யுறாமற் செய்யத் தக்கவையும்,
இல்வாழ்க்கையின் விதிப்படி பொருந்தியவையும், போற்றிச் செய்ய -
விருப்பத்தோடும் எவ்வகையிலும் தாழ்வுபடாமலும் காத்துச் செய்ய.
இற்புறம்பு ஒழியார்
- தமது வீட்டினின்றும் வெளியிற்
செல்லாதவர்களாகி. ஒழியார் - ஒழியாராகி.
முற்றெச்சம். ஒழியாராய்
வைகி - என இயையும்.
அங்கண்
- அவ்வொரு வீட்டினுள்ளே. வேறு - வெவ்வேறாய். வேறு
வேறாய், வைகி - இல்வாழ்க்கை நடத்தி
வாழ்ந்து.
|