|
போற்றினர்.
தொண்டனார் சிவலோகத்திலே கும்பிட்டு உடன்
உறையும் பெருமை பெற்றார். மற்றைச் சுற்றத்தார்களும் சுவர்க்க இன்பம்
பெற்றார்கள்.
தலவிசேடம்
: - (1) திருச்சாய்க்காடு - இது காவிரிப்பூம்பட்டினத்துச்
சாய்க்காடு எனவும், புகார்ச்சாய்க்காடு எனவும் வழங்கும். பட்டினத்தை
அடுத்து உள்ளதால், இவ்வாறு வழங்குவது மரபாம். காவிரிப்பூம்
பட்டினத்துப் பல்லவனீச்சரம் என்பதும் காண்க. மாடக் கோயில்களுள்
ஒன்று. காசிக்கு ஒப்பாகச் சொல்லப் பெறுகிற திருமறைக்காடு முதலிய
ஆறு தலங்களுள் ஒன்று. இக்கோயில் இந்திரனாற் புதுக்கிப் பூசித்து
சிறப்புச் செய்யப்பெற்றது என்பது வரலாறு. மிகப் பழந் தமிழ் நூல்களில்
இதன் வரலாறுகள் பலவும் காணலாம்.
இக்கோயிலில் முன் மாளிகையில் இயற்பகை நாயனாரதும்
அவரது
மனைவியாரதும் ஆகிய பழந் திருவுருவங்கள் எழுந்தருளுவிக்கப்
பெற்றுள்ளன.
இதற்குப் பதிகம் 4. சீகாழிக்குத் தென்கிழக்கில்
ஒன்பதுநாழிகை
வழிகற்சாலை மட்சாலை வழிகளாகச் சென்றால் இதனை அடையலாம்.
மாயூரத்திலிருந்து வரும் வழியில் திருவிளநகர் முதலிய தலங்களை
வணங்கிக் கொண்டு சென்றும் இதனை அடையலாம்.
(2) புகார் - காவிரிப்பூட்டினம்
- இது முன்காலத்துச் சோழர்கள்
தலைநகரங்களில் ஒன்றாயும். அவர்கள் முடிசூட்டிக் கொள்ளும் சிறந்த
ஐந்து நகரங்களில் ஒன்றாகவும் விளங்கியது. பட்டினப்பாலை
சிலப்பதிகாரம் முதலிய மிகப்பழந் தமிழ்நூல்களில் இதன் சிறப்புக்கள்
அழகாகப் பேசப்பெற்றுள்ளன.
இப்பட்டினத்திலே சிவபெருமானுக்கும் முருகக்கடவுளுக்கும்
முதன்மையாக வைத்துப் பழம்பெருங் கோயில்கள் விளங்கின என்பது
பழந்தமிழ் நூற்களில் அறியக் கிடக்கின்றது. பிறவா யாக்கைப்
பெரியோன் கோயில், அறுமுகச் செவ்வேள் அணிதிகழ் கோயில்
என்பது சிலப்பதிகாரம் (இந்திர விழவூரெடுத்தகாதை - 169, 170).
நுதல்விழி நாட்டத்து இறைவன் முதலாப் பதிவாழ் சதுக்கத்துத் தெய்வ
மீறா என்பது மணிமேகலை. இவர்கள் முதலாப் பதிவாழ் சதுக் கத்துத்
தெய்வ மீறா என்பது மணிமேகலை.இவர்கள் கண்ட கோயில்கள்
இந்நூல்களின் காலத்துப்
பின்னரும்,
திருஞானசம்பந்த சுவமிகளது எழுந்தருளுகைக்கு
முன்னரும் நிகழ்ந்த கடல் கோள்களினாலே நகரம் அழிபட்டபோது கடல்
கொள்ளப்பெற்றிருக்க வேண்டுமென்று ஊகிக்கக் கிடக்கின்றது.
இதுபற்றியே ஆசிரியர் சேக்கிழார் சுவாமிகள் இப்புராணத் தொடக்கத்தில்
தீர்த்தச் சிறப்பு ஒன்றனையே கூறிப் போந்தமையுங் காண்க.
கற்பனை
:- காவிரியின் நாடுபாய்ந்து மிக்கநீரும் வீணாகாது
கடலுட் பாய்ந்து, உடலைக் கழுவவும் உதவாத அக்கடலினை, உயிரைக்
கழுவும் தீர்த்தமாக்கியது போல மனிதர் முழுமையும் பிறர்க்குதவும்
உதவியே செய்தல் வேண்டும். தமது எப்பொருளிலும் ஒரு சிறிதும்
வீணாகாது பிறர்க்குதவி புரிதலிற் செலுத்தல் வேண்டும்.
2. சிவனடியார்களுக்கு வேண்டுவனவற்றை இல்லையென்னாது
கொடுத்தல் சிறந்த பதிதருமமாம்.
3. சிவனடியார் நினத்தவற்றை முடித்து அவர்களை மகிழ்விப்பதுவே
இல்வாழ்க்கையின் சிறந்த பேறு.
4. பெண்கள் தம் கணவர்களைத் தம் உடம்புமட்டில்
நாயகர்களாகக்
கொண்டொழியாது உயிர் நாயகர்களாகக் கொண்டு அவர்கள்
சொல்லியதெதுவோ அதன் படிசெய்து அவ்வழி ஒழுகிவருதல் வேண்டும்.
அதுவே உண்மைக் கற்புநிலையின் பெருமையும் பெண்களின் உரிமையும்
ஆம். உரிமை பேவறுளதோ எனக்கு? (412)
5. குலவொழுக்கம்
- குலநலம் என்பவை பாராட்டிப் பாதுகாத்தற்
குரியன. குலத்துக்குப்பழிவாராமற்காத்தல் அக்குலனுடையார்க்கெல்லாம்
வேண்டற்பாலது.
6. குலநலங் காத்தலும், குலப்பழி வாராமற் காத்தலும்
உயிரினும்
சிறந்தது. உயிர் கொடுத்தேனும் மானங்காத்தல் வேண்டும்.
|