பக்கம் எண் :


622 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

Periya Puranam
போல ஒழுகிவரும் அன்பு என்றலுமாம். “இடையறா அன்புனக்கென்,
னூடகத்தே நின்றுருகத் தந்தருளெம் முடையானே“ - திருவாசகம்.
பெருந்தொண்டர் - தொண்டிற் சிறந்த பெரியார், “உண்மை நின்ற
பெருகுநிலைக் குறியாள ரறிவு தன்னை“ - திருச்செங்காட்டங்குடி
திருத்தாண்டகம்.


     முறைமை நீடு திருக்கூட்டம்
- திருத்தொண்டின் முறைமையிலே நீடி
வருகின்ற தொண்டர்களின் திருக்கூட்டம்.

“திரண்டபெருந் திருநீற்றுத் தொண்டர்குழா மிருதிறமுஞ் சேர்ந்த
                                             போதில்
இரண்டுநில வின்கடல்க ளொன்றாகி யணைந்தனபோ லிசைந்த
                                             வன்றே“
                                - திருநா - புரா - 233.

“மண்மேல் மிக்கசீ ரடியார்“   - தடுத் - புரா - 188.

என்பன முதலாகப் பாராட்டப்பெற்ற திருக்கூட்டம்.

     முன் பரவும் அருள் பெற்றே இறைவர் பாதம் தொழப் பெற்றார்
- தொண்டர் கூட்டத்தைப் பணிதலை முதலாவதாகவும், இறைவனைப்
பணிதலை அதற்கடுத்து இரண்டாவதாகவும் கொண்டொழுகியவர்
இந்நாயனார். தொழப் பெற்றார் என்றதனால் இவ்வாறு வரம் பெற்றவர்
என்பாரு முண்டு. தொண்டர்களே முதலிற்றொழுதற்குரியார் என்பது.
இவர்கள், தொண்டடிலே தாம் ஈடுபட்டுப் பழகியவர்களாய்த், தம்மை
அடைந்தாரையும் அவ்வாறு ஈடுபடச் செய்து இறைவன்பாற் செலுத்துவிக்கும்
கருணையும் ஆற்றலும் உடையார். திருவாரூரைத் தரிசிக்க அணையும்போது
ஆளுடைய பிள்ளையாரும் ஆளுடைய அரசுகளும் ஆளுடைய நம்பிகளும்
தம்மை எதிர்கொண்டு வணங்கிய திருத்தொண்டர் கூட்டத்தைப்
பரவித்தொழுது திருப்பதிகம்பாடி, அதன்பின்னரே இறைவனது திருமுன்
சென்று வணங்கியமுறையும் பிறவும் இங்கு வைத்துக் காண்க.

     முன் பரவும் அருள் பெற்றே - அங்ஙனம் பரவுதற்கும் திருவருள்
கூட்டவேண்டும் என்க. ஏகாரம் தேற்றம். முன் - திருமுன்பு என்றலுமாம். 5

496. பொன்றா ழருவி மலைநாடுகடந்து கடல்சூழ்
                             புவியெங்குஞ்
 
  சென்றா ளுடையா ரடியவர்தந் திண்மை யொழுக்க
                            நடைசெலுத்தி,
வன்றாண் மேருச் சிலைவளைத்துப் புரங்கள்
                       செற்ற வைதிகத்தேர்
நின்றாரிருந்த திருவாரூர் பணிந்தார் நிகரொன்
                              றில்லாதார்.

6

     (இ-ள்.) பொன்தாழ்...செலுத்தி - பொன் கொழிக்கும் அருவி
களையுடைய மலைநாட்டினைக் கடந்து, கடல்சூழ்ந்த உலகில் எங்கெங்கும்
வழிச் சென்று, இறைவனடியார் திண்மை யொழுக்கநடை நிலைபெறச்
செலுத்தி; வன்தாள்...பணிந்தார் - வலிய அடியினையுடைய மேருமலையை
வில்லாக வளைத்துத் திரிபுரங்களை அழித்த வைதிகத் தேரின்மீது
நின்றாராகிய சிவபெருமான் வீற்றிருந்த திருவாரூரைச் சென்று பணிந்தார்;
நிகர் ஒன்று இல்லாதார் - யாரும் எவ்வாற்றானும் தமக்கு ஒப்பில்லாத
வராகிய விறன்மிண்ட நாயனார்.

     (வி-ரை.) பொன் தாழ் அருவி - மலைகளினின்றும் கீழ்
ஒடிவரும்போது அருவிகள் பொற்பொடிகளை நீரில் அடித்து வருகின்றன
என்க. அருவிகள் ஓடுமிடத்துக் கீழ் மணலிற் பொன் தாழ்ந்து படிந்துள்ளது
என்றலுமாம்.

     ஆள் உடையார் - யாவரையும் தமக்கு ஆளாக உடைய முழுமுதற்
கடவுளாகிய சிவபெருமான். “தேவரையும் மாலயன் முதற்றிருவின் மிக்கார்,
யாவரையும் வேறடிமை யாவுடைய வெம்மான்“ (183) என்றதுங் காண்க.
ஆளுடையார் அடியார் உடையாரது அடியவர் என ஆறாம் வேற்றுமைத்
தொகை என்க. தம் திண்மை ஒழுக்கம் - அவர் தமக்கே உரிய திண்ணிய
நல்லொழுக்கம் - அடிமைத்