|
விக்கின விநாயகர்
என்று அவருக்குப் பெயராயிற்று. குமரனும் விக்கின
விநாயகனும் என்பது தேவாரம்.
தடக்கை
ஐந்து - பண்ணியம் (மோதகம்) ஏந்தியது ஒருகை; இதனைக்
தமக்காகப் பயன்படுத்திக் கொள்வர். ஒரு கை இரத்தின கலசம் ஏந்தியது;
இதனைத் தந்தை தாயர்க்கு உபசாரத்தின் பொருட்டு ஆக்குவர். ஒரு கை
தமது ஒடித்த கொம்பினைத் தாங்கியது; இதைக் கயமுகாசுரனைக் கொன்று
தேவர்களுக்கு அருள்புரியப் பயன்படுத்தினர். மற்ற இரண்டு கைகள் பாசமும்
அங்குசமும் தாங்கியவை; இவ்விரண்டு கைகளையும் உயிர்களைக்
கட்டுப்படுத்தும் ஆணவமாகிய மத யானையைப் பிணித்து அடக்கி
உயிர்களைக் காப்பதற்காகப் பயன்படுத்துவர். இவ்வாறு தமது கைகள் ஐந்தில்
மற்றவர்களுக்கு ஒவ்வோர்கையும்கருணையினால் உயிர்களுக்காக இரண்டு
கைகளையும் வைத்தார் என்று இவரது கருணைப் பெருக்கைக் கச்சியப்ப
முனிவர் தணிகைப் புராணத்தில் பண்ணிய மேந்தும்
கரந்தனக் காக்கி
என்ற பாட்டிற் பாராட்டியிருத்தல் காண்க.
கடக்களிறு
- கடம் - மதம்; யானைக்கு உரியது மூன்று மதம் - இங்கு
விநாயக மூர்த்திக்குத் தலை ஒன்றுமே யானை யுருவுடையதாதலால்
கன்னமதம் கபோலமதம் எனும் இரண்டுமே கொள்ளப்படும்.
பெரும்பான்மைப்பற்றி மும்மதத்தன் என்று உபசரிப்பதும் வழக்காம். முருகப்
பெருமானுடன் வள்ளிப் பிராட்டியாரைச் சேர்த்தற் பொருட்டு யானை
உருவத்தோடு எழுந்தருளிய போது மும்மதத்தன் என்ற பேர் முழுதும்
பொருந்த இருந்ததென்று பாராட்டுவர் கச்சியப்ப முனிவர்.
இன்
தமிழ்ச் செய்யுள் - இனிமை என்ற பெயரேயன்றி, இனிய
பொருளும் தருதலினால் இன் தமிழ் என்றார். சொல்லால் இனிமை
இலக்கணங்களாலும், பொருளால் இனிமை இறைவனைச் சுட்டிக் காட்டுகின்ற
இயல்பாலும் உணர்க. இனிமையைத்தரும் தமிழ்ச் செய்யுள் என்க. இனிமை -
இறைவனருட் பேறு. இனிமை பயவாத தமிழ்ச் செய்யுட்களும் உளவாதலால் அவற்றை
நீக்குதலின் இன்றமிழ் என்றது பிறதினியைபு நீக்கியது. 3
வேறு
| 4.
|
மதிவளர்
சடைமுடி மன்று ளாரைமுன்
|
|
| |
துதிசெயு
நாயன்மார் தூய சொன்மலர்ப்
பொதிநல னுகர்தரு புனிதர் பேரவை
விதிமுறை உலகினில் விளங்கி வெல்கவே. |
4 |
இது
திருக்கூட்ட வாழ்த்து
(இ-ள்.)
மதிவளர்........உளாரை - பிறை வளர்தற்கு
இடமாகிய
சடைமுடியையுடைய திருச்சிற்றம்பல வாணரை; முன் துதி செயும் நாயன்மார்
- நினைந்து துதித்துச் செயல் செய்யும் நாயன்மார்களுடைய; தூய.....பேரவை
- தூய சொன்மலரின் நலத்தை அனுபவிக்கும் தூயவர்களாகிய அடியார்களது
பெருந்திருக்கூட்டமானது; விதிமுறை - இறைவன் ஆணை வழியே; உலகினில்
விளங்கி வெல்கவே - உலகில் விளக்கமடைந்து வெற்றி பெறுவதாக.
(வி-ரை.)
மதிவளர் சடை - மதியை வளரச்செய்து இடமும்
கொடுத்த
சடை; மதிவளர் - மன்றுளார் எனக் கூட்டித் தம்மை யடைந்தார்க்கு
நாளுநாளும் நல்லறிவு வளரச்செய்யும் இறைவன் என்றுரைத்தலுமாம்.
ஆணவமல மறைப்
|