பக்கம் எண் :


குங்குலியக்கலயநாயனார்புராணம்1101

 

உள்ளன பலவும் என்றும் கூறினார். "கூவலு மமைத்து மாடு கோயில்சூழ்
மதிலும் போக்கி, வாவியுந் தொட்டு மற்றும் வேண்டுவ வகுத்து" என்ற
பூசலார் நாயனார் புராணம் (3) காண்க. இவை பற்றிய விரிவு சிவாகமங்களுட்
கண்டு கொள்க.

     நின்ற - திருப்பணிகள் முற்றும்வரை அங்குத் தங்கிய என்பதாம்.
ஏவுதற்கருத்தாக்களாய்ச் சிவாலயத் திருப்பணிகள் செய்விக்கும் அன்பர்கள்
அவற்றைத் தமக்காகப் பிறர் கண்காணிக்கவிட்டுத் தாம் வேறு காரியங்கள்
பார்த்து இராமல், அத்திருப்பணிகள் முழுதும் தாமே நேரில் இருந்து
காண்காணித்து முடிக்க வேண்டுமென்பது முறையும் விதியுமாம். இங்குத்
திருப்பணிகள் முழுவதும் அரசன்தானே கூட இருந்து முடித்தனன் என்பார்
நின்ற என்றார். ஆர்வமும் அன்பும் காரணமாக மெய்வருத்தம் பார்த்தலும்
இளைப்பாறுதலுமின்றியும், இருத்தலும் கிடத்தலுமின்றியும், நின்றபடியே
கண்காணித்து என்ற குறிப்பும் காண்க.

     வெண்கவிகை - அரச அடையாளங்களில் ஒன்று என்ற
மாத்திரையாய் நின்றது. இங்கு அரசன் வெண்கவிகை நிழற்ற அதன்கீழ்
நின்றனன். என்பதன்று. வெண்கொற்றக்குடை அளிசெய்தலைக் குறிக்கும்
உருவகம்.

     நீங்கவும் - அத்தலத்தினின்று தன் தலைநகருக்குச் சென்ற பின்னரும்.
அரசன் நீங்கவும் தாம் நீங்காராய் வைகினார் என உம்மை உயர்வு சிறப்புக்
குறித்தது.

     நிகரில் அன்பர் (ஆதலின்) வைகி என்க. வைகி - தங்கி. "நாதனை
நேரே காணும் அந்நெறி தலைநின்றான் என்று அரசனை விரும்பி" (854)யே
நாயனார் திருப்பனந்தாளிற் சேர்ந்தனர். அவன் நீங்கவும் தாம் நீங்காது
பின்னரும் அங்குக் கழல் வாழ்த்தி யிருந்ததற்கு அவரது அயரா அன்பே
காரணமாம் என்பார் நிகரில் அன்பர் என்றார்.

     மன்றிடை ஆடல் செய்யும் மலர்க்கழல் வாழ்த்தி - மன்று -
திருவம்பலம். ஐந்தொழில் நடனம் செய்யும் என்பது இறைவனது அம்பலத்து
அருட்கூத்து. அடியார்க் கெளிவந்த அத்திருவருளையே எண்ணியெண்ணி
வாழ்த்திக்கொண்டு பலநாள் அங்குத் தங்கினார் என்பது கருத்து. யானை
சேனைகளாற் கூடாதது தம்மாற் கூடிற்று என்று எண்ணினாரல்லர்,
திருப்பணியில் முயன்ற அவற்றின் இளைப்பைத் தாமும் கூறுகொண்டு
குறைக்க எண்ணிய எண்ணத்தினுக்கிரங்கி இறைவன் நேர் நின்று அருளிய
பெருங் கருணைத் திறத்தையே எண்ணினார். தமது சிறுமையினையும்
இறைவரது அருளின் பெருமையினையுமே எண்ணி எண்ணி ஆராமை
மிகுதியால் அத்திருவருளை வாழ்த்தி வைகினார் என்பது. கழல் - திருவடி
- சிவசக்தி. 31

     862. (வி-ரை.) பகல் - இங்கு நாள் என்ற பொருளில்வந்தது.

     நிலவு தம் பணியில் தங்கி - தாம் முட்டின்றி நியமமாகச்செய்துவந்த
குங்குலியத் தூபத்திருப்பணி - நிலவு - வறுமைவந்த காலத்தும் விடாது
நிலவிய. பணியிற்றங்குதலாவது பணிசெய்து அதில் வாழ்வடைதல்.

     நிகழும் நாள் - வாழ்கின்ற காலத்தில், நிகழ்தல் - நடத்தல் -
செல்லுதல்,

     நிகரில் காழித் தலைவர் - நிகரில் காழி என்றும், நிகரில் தலைவர்
என்றும்கூட்டியுரைக்க நின்றது. காழியின் தன்னிகரில்லாச் சிறப்பு ஆளுடைய
பிள்ளையாராருளிய வழிமொழித் திருவிராகம், பல்பெயர்ப்பத்து,
திருவெழுகூற்றிருக்கை, திருசக்கர மாற்று, ஈரடி, திருவியமகம் முதலிய
திருப்பதிகங்களானும், "பெருநெறிய பிரமாபுரம்" (நட்டபாடை - பிரமாபுரம் -
11), "நற்புலவர் தாம்புகழ் பொற்பதி (காந் - பஞ்ச - பூந்தராய் 10),
"போதனைப்போன் மறையோர் பயிலும்புகலி" (வியா - குறி - புகலி. 11),
"கலையின் மேவும் மனத்தோ ரிரப்போர்க்குக் கரப்பிலார், பொலியு மந்தண்
பொழில்சூழ்ந் தழகாரும்புகலி" (செவ்வழி - புகலி - 8), "பொய்யா நாவி
னந்தணர் வாழும் புறவம்" (குறிஞ்சி - புறவம் - 1), "கரிதன்னைப் பண்டுரி
செய்தோன் பாவனை செய்யும் பதி" (குறிஞ்சி - புறவம் - 7),