|
கழல்களையே
அறிந்து நின்றவராதலின் மகவுபெற வழுத்தியதும்
அருளாலே கூடிற்று என்பதாம். யானென தென்பவை யற்றவிடமாகிய
திருவடிகளை யானெனதென்பன வுடைமையால் அரி அறியாராயினர் என்க.
அருளால்
மனத்து வழுத்தினார் என்க. மனத்தில்
நினைத்துத்
துதித்தனர். வழுத்தினார் என்றதற்கு அக்கழல்களை
எனச்
செயப்படுபொருள் வருவிக்க. 10
| 876.
|
குழைக்கலையும்
வடிகாதிற் கூத்தனா ரருளாலே
மழைக்குதவும் பெருங்கற்பின் மனைக்கிழத்தி யார்தம்பா
லிழைக்கும்வினைப் பயன்சூழ்ந்த விப்பிறவிக் கொடுஞ்சூழல்
பிழைக்குநெறி தமக்குதவப் பெண்கொடியைப் பெற்றெடுத்தார். 11 |
(இ-ள்.)
வெளிப்படை. குழையைத் தாங்கி அசைகின்ற வடிந்த
காதினையுடைய கூத்தப் பெருமானது திருவருளினாலே, மழைக்கு உதவி
செய்யும் பெருங்கற்பினையுடைய மனைக்கிழத்தியாரிடமாகச்,
செய்வினைப்பயன்களாற் சூழப்பட்ட இப்பிறவியாகிய கொடுஞ் சூழலினின்றும்
பிழைக்கும் வழியைத் தமக்கு உதவக் கொடிபோன்ற பெண்மகவினைப்
பெற்றெடுத்தார் (நாயனார்.)
(வி-ரை.)
குழை - மகரம் போன்ற வடிவுடையதாய்ச் சங்கினால்
இயன்றது. இதனை இறைவர் வலது காதில் அணிவர் என்பது மரபு. "சங்கக்
குழையார் செவியா" (தேவாரம்). காதுவடிந்து தொங்குவதனாலும், அதனில்
குழையிருப்பதனாலும், இறைவர் கூத்தாடும்போது காது அசைந்தாடுகின்றது
என்பார் குழைக்கலையும் வடிகாதிற் கூத்தனார் என்றார்.
குழைக்கு -
குழையினால். உருபு மயக்கம்.
மழைக்குதவும்
- மழையை உதவும்; பெய்விக்கும். நான்கனுருபு
இரண்டாம் வேற்றுமைச் செயப்படு பொருளில் வந்தது. உருபு மயக்கம்.
"பெய்யெனப் பெய்யும் மழை" (குறள்). உலகுக்கு உதவியாகும் சிறப்பை
மழைக்குத் தருகின்ற என்றுரைத்தலுமாம். நாயகனையே தெய்வமாகக்
கொண்டு வழிபடும் கற்புடையார் என்று குறிக்க மழைக்குதவும்
பெருங்
கற்பு என்றார்.
மனைக்கிழத்தியார்
தம்பால் பெண் கொடியைப் பெற்றெடுத்தார்
என்று கூட்டுக. நாயனார் என்னும் எழுவாய் வருவிக்க. மனைக்கிழத்தியார்
- மனைவியார். மனை - மனையறத்துக்கு; கிழத்தியார் - உரிமையுடையவர்.
இழைக்கும்
வினை......பிழைக்கும் நெறி - இழைக்கும் வினை -
ஆன்மாக்களால் ஈட்டப்படும் கன்மங்கள். 803 - ல் உரைத்தவை பார்க்க.
வினைப்பயன் சூழ்ந்த இப்பிறவி இருவினைப்
பயன்களாகிய இன்ப
துன்பங்களாற் சூழப்பட்ட இப்பிறவியாகிய கொடிய சுழற்சி. 1அவ்வவர்
செய்யும் வினைகளுக்கு ஏற்றவாறு மேற்பிறவி வருமென்பது நூற்றுணிபாம்.
1"இவ்வினை
யீட்டப்படுங்கால், மந்திர முதலிய அத்துவாக்களிடமாக
மனம் வாக்குக் காயம் என்னு மூன்றா னீட்டப்பட்டுத்,
தூல கன்மமாய்
ஆகாமியமெனப் பெயர் பெற்றுப், பின்னர்ப் பக்குவப்படுங்காறுஞ்
சூக்குமகன்மமாய்ப் புத்திதத்துவம் பற்றுக்கோடாக மாயையிற்கிடந்து, சாதி
ஆயுப் போகமென்னு மூன்றற்கு மேதுவாய், முறையே சனகந் தாரகம்
போக்கிய மென்னு மூவகைத்தாய், அபூருவம் சஞ்சிதம் புண்ணிய
பாவமென்னும் பரியாயப்பெயர் பெற்றுப், பின்னர்ப் பயன்
படுங்கால்
ஆதிதைவிகம் ஆக்தியான்மிகம் ஆதிபௌதிகம் என்னு முத்திறத்தாற்
பலதிறப்பட்டுப், பிரார்த்தமெனப் பெயர்பெறும். ஆதிபௌதிகமாவது சடம்
வாயிலாக வருவது. ஆக்தியான்மிகமாவது சடத்தோடு கூடிய சேதனம்
வாயிலாக வருவது. ஆதிதைவிகமாவது ஒரு வாயிலானன்றித் தெய்வந்தானே
காரணமாக வருவது" என்றிவ்வாறு சிவஞான போதச் சிற்றுரை 2 - சூத்) யில்
உரைக்கப்பட்டவை காண்க.
|