பக்கம் எண் :


மானக்கஞ்சாறநாயனார்புராணம்1157

 

     தார்வருந்துதல் பற்றியும் மனந் தளர்ந்தனர் என்றும், மற்றும்
பலவாறும் உரை கூறுவாருமுளர். இவற்றின் பொருத்தங்கள் ஆராய்ந்து
கொள்ளத்தக்கன.

     அருள்செய்த திருவாக்கின் திறம் - "உனக்கும் அருள் செய்வோம்"
எனவும், "நீ துக்கப்படாதே; மனங்களிப்பாக அந்தப் பெண்ணை
மணந்துகொள்" என்று எழுந்த வார்த்தை எனவும், "இவற்றிற்கு நீ வருந்தாது
மணஞ் செய்" என்றெழுந்தவாறு எனவும் பலவாறும் உரைகூறுவாருமுண்டு.
இவ்வாறு பின்னும் ஒரு திருவாக்கு எழுந்ததென்பதற்கு ஆதரவு
காணப்படவில்லை. அவ்வாறு எழுந்து கேட்கப்பட்டிருப்பின் திருவாக்குக்
கேட்டு என்னாது திருவாக்கின்றிறம் கேட்டு என்று கூறுவதற்கு ஏதுவில்லை.
"அருள் செய்தவாக்கு"..."என்ன"..."இவ்வண்ணமெழுந்தது கேட்டு" (மூர்த்தி -
புரா. 21-22-23) பார்க்க. திருவாக்கின்றிறமாவது "உமக்குச் சோபனமாகுக"
(892) என்றெழுந்த திருவாக்கு என்றும், அதில் உமக்கு என்ற பன்மையால்
கலிக்காமனாரையும் உள்ளடக்கியது ஆசியாகிய அத்திருவாக்கின்றிறம்
என்றும் உரைப்பர் ஆலாலசுந்தரம்பிள்ளை. 35

     901. (வி-ரை.) மனத்தளரும் இடர் நீங்கியதன் காரணம்
மேலுரைக்கப்பட்டது.

     வானவர்....பூங்கொடி - தேவ தேவராதலின் ஆக்குதல், அழித்தல்
முதலிய எல்லாம் வல்லவர்; அவரது அருள் களையப்பட்ட கூந்தலை முன்
இருந்தவாறே மீள வளரச் செய்தது என்க. புனைந்தமலர்க்குழல் -
மணக்கோலம் புனைந்திருந்த தேனக்க மலர்க்கூந்தல்
(893), என முன்
அரிந்தெடுக்கப்பட்டவாறே மீளவுளதாயினமை குறித்தார்.
சிறுத்தொண்டநாயனார் சரிதத்தில் சமைத்து இலையிற் படைத்த கறி,மீளப்
பாலகனாக வரத் திருவருள் செய்ததென்றால், வளருந் தன்மைத்தாய குழல்
விரைவில் வளர்ந்த இது ஓர் அற்புதமன்றே! பூங்கொடி - கொடிபோல்வார்.
மலர்க்குழல் பெற்ற என்ற இக்குறிப்பினைக் கொண்டு, கலிக்காமனார்
குழல் களையப்பட்ட பெண்ணை எவ்வாறு மணப்பதென்று மனந்தளர்ந்தனர்
என்பார் சிலர். அருணிகழ்ச்சி காணும்பேறு பெறவில்லை எனச் சிந்தை
தளர்ந்தனராதலின் கலிக்காமனார் காணும்படி புனைந்த மலர்க்குழல் பெறத்
தரும் இவ்வருள் வெளிப்பாட்டினை இறைவர் செய்தருளினர் என்க.
புனைந்தமலர்க்குழல் - அரியும்முன், தேனக்க மலர்க்கூந்தல் (893),
மலர்க்கூந்தல் (894) என்றும், மீளக்குழல் வளர்ந்தபின், இங்குப்
புனைந்தமலர்க்குழல் என்றும் கூறிய ஆசிரியர் இடையில், அடியில்
அரிந்தெடுக்கப்பட்ட நிலையில், வண்டுவார்குழல் என்று வாளா கூறிய நயம்
சிந்திக்க.

     தனம் பொழிந்து - கல்யாணத்தில் மணமகன் வீட்டார் தமது
இயல்புக்கேற்றபடி இரவலர் முதலியோர்க்கு ஈகையிற் சிறத்தல் இயல்பு.
அரசர் சேனாபதி குடியில் வந்த ஏயர்கோனார் தம் நிலைமைக்கேற்றவாறும்,
அவ்வாறே அரசர் சேனாபதிக்குடியில் வந்தவராய்த் திருவருள் பெற்றுப்
போந்த மானக்கஞ்சாறனாரது பெருமைக்கும் புனைந்த மலர்க்குழல்
மீளப்பெற்ற மகளாரது பெருமைக்கும் ஏற்றவாறும், இருவர்க்கும் இடையாடிச்
செய்த சிவபெருமானது திருவருட் சிறப்பினுக்கேற்றவாறும் தனம்
பொழிந்தனர்
என்க. இதனால் அது பெருவதுவையாகி உலகெலாம்
தலைசிறக்க
ஓங்கி விளங்கிற்று என்பதாம்.

     தலைசிறத்தலாவது - புகழ் மேம்படப் பாராட்டப்பெறுதல்.

     இனம்பெருக - மணத்தின் பின்னர் இருபாலின் இனத்தவர்களும்
ஒருங்கு கூடிச் செய்தலாலும், கலிக்காமனாருடன் தம் சால்புநிறை சுற்றம்
தலைநிறையக் (885) கூடி வர, அவர்களோடு மானக்கஞ்சாறனாரது
நீள்சுற்றமெலாம் (884) ஒப்பரிய இப்பெருவதுவையினாற் பிணைக்கப்பட்டு
ஒன்று கூடுதலாலும், முன் வந்ததனைவிட மிகப் பெருங்கூட்டமாதலின்
இனம்பெருக என்று தேற்றம் பெற எடுத்துக் கூறினார்.

     தம்முடைய எயில்மூதூர் - இது திருப்பெருமங்கலம் என்பதாம்.
ஏயர்கோன் - புரா (1) பார்க்க. இதன் சிறப்பு அப்புராணம் 2,3,4 பாட்டுகளிற்
பேசப்படுதல்