வில்லியார்
741, ஆடவன், 741, காளையார் 757, கருமுகிலென்ன நின்ற
கண்படாவில்லியார் 810, வேடர் மன்னனார் 775, மெய்காட்டு மன்புடைய
வில்லியார் 783, மைவண்ணக் கருங்குஞ்சி வனவேடர் பெருமானார் 790,
வனவேடர் தந்தலைவனார் 798, வனவேந்தர் 801. சிவபெருமானது கண்ணில்
குருதி நிற்குமாறு தம் கண்ணைத் தோண்டி இறைவரது கண்ணில் அப்பிய
காரணத்தால் கண்ணப்பர் என்று பெயர் பெற்றனர். இது இவருக்கு
இறைவரால் தரப்பட்டது 827. திண்ணன் பார்க்க.
கதிருச்சி
- 750 - 792. வானமுகட்டின் தலையில் சூரியன்
காணப்படும் நடுப் பகல் வேளை. இது ஒரு நல்வேளையாக வேடர் கருதி
ஒழுகினர். தமிழரது நாட்கணக்குத் தொடக்கம் கதிருச்சி வேளை என்பர்
ஆராய்ச்சியாளர் திரு.
S. S. பாரதியார். நண்பகல்
- நள்ளிரவு -
பானாட்கங்குல் - அரைநாட் கங்குல் - ஆரிருள் நடுநாள் - அரை நாள்
யாமம் - அரையிருள் இரவு - (அரையிருள் யாமம்) முதலிய வழக்குக்கள்
காட்டுவார்.
கலயனார் 830. குங்குலியக்கலய நாயனார்.
அவர் புராணம் காண்க.
கலைவளர்
திங்கள் 691. முழுமதி.
களிந்தி
கன்னி 722. காளிந்தியென்னும் யமுனை நதி. இதன்நீர்
கருநிறங் காட்டுமென்பர்.
கன்னிவேட்டை
- 696. வேடர் (தலைவன்) சிலைபயின்ற பின்
முதன்முறை காட்டுக்குப்போய்ச் செய்யும் வேட்டை.
காடன்
738 - 741-748 - 764 - 802. திண்ணனாருடன் வேட்டைக்குச்
சென்று கூடவே நின்று அவரடி பிரியா விடலைகளாயின மெய்காவலாளர்
இருவரில் இளையவன். நாகனும் திண்ணனாரும் காளத்தி காணச்
சென்றபோது இவன் முகலியின் மேல்கரைச் சோலையில் தீக்கடைந்து
வைத்தும், பன்றியினைக் காத்தும் நின்றவன். வேட்டைக் காட்டினின்றும்
பன்றியைத் தொடர்ந்து பல காதங்கள் ஓடிய திண்ணனாரைத் தொடர்ந்து
கூடவே ஓடிவந்த இருவரிலொருவன்.
கடுகாவல்
செய்தல் 724. (சூழல் செய்தகான்) காட்டின் பரப்பு
முழுதும் ஒடியெறிந்தும் வார்போக்கியும் வலைதொடக்கியும் உள்ளிருந்த
மிருகங்கள் தப்பி ஓடிவிடாமல் காட்டைச் சுற்றிலும் காவல் அமைத்தல்.
காப்பு
667 - 682. குழவிகளைப் பிணி - தெய்வக்கோள் முதலியன
தாக்காது காப்பதாய்க் கையினும் - காலினும் - மார்பினும் அணியும் கயிறு,
புலி நரம்பு முதலியவற்றானியன்ற அணிவகை. இது படைக்கல முதலிய
கருவிகளுக்கும் அவற்றைப் பாதுகாக்க அணிவதுண்டு. ஆலயம் மனை
முதலியவற்றிற்குக் காப்புக் கட்டுவதும் வழக்கம்.
காளமேகம்
664. கார்மழை மேகம் 716. நீர் சுமந்த கருமேகம்.
குடுமித்தேவர்
745. காளத்தி நாதர்க்கு வேடர் வழங்கும் பெயர்.
மலையின் உச்சியில் உள்ளதனால் இப்பெயரிட்டனர் போலும். தேவர் 746 -
765.
குரவை
660. குறிஞ்சி அல்லது முல்லைநில மகளிர் கைகோத்தாடும்
ஒரு வகைக் கூத்து.
குலமுது
குறத்தி 676. குறவர் குலத்தில் குழவிகளை வளர்த்தற்கு
நியமிக்கப்பட்ட மிகமூப்பும் அனுபவமுமுடைய குறத்தி. "ஈன்ற குறமகளிர்க்
கேழை முதுகுறத்தி" என்ற ஈங்கோய்மலை எழுபது பார்க்க.
குறிச்சி
657 - 674 - 687. குறிஞ்சி நிலத்து ஊர்ப்பெயர். கோற்றேன்
793 - 799. புதர்களிலும், சிறு செடி - மரக் கிளை இவற்றிலும்
ஈட்டப்பெற்றுள்ள சிறு தேன்கூடுகள்.
சந்திரன்
778. மதி 732. 778 - 732. இருசுடர் என்றதன்கீழ்ப் பார்க்க.
சிலைபயில்
பருவம் 676, அரசர் - வேடர் முதலியோர் விற்கல்வி
பயிலும் பருவம். இது 12 ஆண்டு முதல் தொடங்கு மென்ப.
|