பக்கம் எண் :


1266 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 

     தென்றிசை நோக்கி என்றதனால் வடுகக் கருநாடு தமிழ்நாட்டுக்கு
வடக்கெல்லையாயுள்ளது என்பது குறிக்கப்பட்டது. தென்திசை - அதில்
உள்ள தமிழ்நாடு குறித்தது.

     திரண்ட சேனை - என்பதும் பாடம்.           11

979.



வந்துற்றபெ ரும்படை மண்புதை யப்ப ரப்பிச்,
சந்தப்பொதி யிற்றமிழ் நாடுடை மன்னன் வீரஞ்
சிந்தச்செரு வென்று, தன் னாணை செலுத்து மாற்றாற்
கந்தப்பொழில் சூழ்மது ராபுரி காவல் கொண்டான்.
12

     (இ-ள்.) வெளிப்படை. வந்து சேர்ந்த பெரும்படையினைத் தரை
தெரியக்கூடாதபடி எங்கும் பரவச் செய்து சந்தனச்சோலைகள் சூழ்ந்த
பொதியமலையினையுடைய தமிழ்நாட்டை ஆளும் பாண்டிய மன்னனது வீரம்
சிந்தும்படி போரில் வெற்றிகொண்டு தனது ஆணையைச் செலுத்துகின்ற
வழியாலே மணம்பொருந்திய சோலைகள் சூழ்ந்த மதுரைமாநகரத்தைத்
தனது தலைநகராகக் கொண்டு காவல் செய்வானாயினான்.

     (வி-ரை.) மண்புதையப் பரப்பி போர்க்களம் முழுதும் நெருங்க
அணிவகுத்து. மண்புதைய - சேனைப்பரப்பின் கீழே மண்ணின் இடைவெளி
தெரியாது மறைய. மண் இவன் காவலின்கீழ் விளக்கமில்லாது மறைய
எனவும், மண்ணிற் புதைய எனவும் பிறிது பொருள்களும்பட நிற்பது காண்க.
இவ்வாறு பரப்பி வென்றதன்பின் இவனது காவலில், இவன் கருநாடன்
ஆதலின், இச்செம்மை நாட்டுக்குரிய சைவச்சிறப்பும், தெய்வச்சிறப்பும் இவன்
வடுக மன்னனாதலின், செம்மொழியாகிய தமிழ்ச்சிறப்பும் மறைந்து நின்றன
எனப் பின்சரிதக் குறிப்புமாம். இனி, இவன் விரைவில் இறந்து மண்ணா
யொழிதலும், இவன் படை மறைந்தொழிதலும் சரிதத்துட் காண்க.

     பரப்பி - வீரம் சிந்தச் - செருவென்று - காவல் கொண்டான் என்று
முடிக்க.

     சந்தப்பொதியில் தமிழ்நாடு - சந்தம் - சந்தனம். பொதிய
மலைக்குச் சந்தனம் உரியது. பொதியில் - பொதிகை. பாண்டிய 
நாட்டுக்குரிய மலை. "கும்பமுனிபயிலும் தென்பொதிய மலைகாண்
மற்றெங்கள்மலை " என்ற மீனாட்சியம்மை குறமும், பிறவும் காண்க.
சந்தனமும் பொதிகையும் தமிழும் இணைபிரியாது சொல்லப் பெறுவன.
"தமிழ் மாருதம்", "சந்தனப் பொதியிற் செந்தமிழ் முனிவன்" முதலியவை
காண்க.

     தமிழ் நாடுடை மன்னன் - பாண்டியன். தமிழ் நாடு -
பாண்டியநாடு. வடுகக் கருநாடர் காவன் மன்னன் (978), தமிழ்நாடுடை
மன்னன்
என்றன மொழி வழங்கும் வகையால் நாடு பிரிவுபடுவதும்
ஆளப்படுவதும் உரியதாம் என்ற குறிப்புப்போலும்.

     வீரம் சிந்த - வீரம் சிந்திப்போகும்படி. இறந்துபட்டொழியாமல்
அப்போதைக்கு மட்டும் வலிமை குறைந்தவனாயினன் என்றபடியாம். பின்
சில நாளில் கருநாடன் ஒழிந்துபடத் தமிழ் மன்னனே வருவானாவன் என்ற
குறிப்பும் காண்க. தோல்வியுற்றான் என்பதனை மங்கலவழக்காற்
கூறியபடியுமாம். 1அடிக்குறிப் பிற்கண்ட சாசனத்தில் அகலநீக்கி
என்றிருப்பதும் கருதுக.


     1வேள்விக்குடிச் சாசனத்தில் "பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி யெனும்
பாண்டியாதிராசன்பின் .. அளவரிய அதிராசரை அகல நீக்கி அகலிடத்தைக்
களப்ர னெனும் கலியரசன் கைக்கொண்டானை யிறக்கியபின், படுகடன்
முளைத்த பரிதிபோல் பாண்டியாதிராசன் விடுகதி ரவிரொளி விலக
வீற்றிருந்து .. கடுங்கோன் என்னும் கதிர்வேற்றென்னன் ..." என்று
காணப்படுவது கொண்டு பாண்டியாதிராசன் பின்வந்த அதிராசனைக்
களப்ரன்
என்னும் கலியரசன் செருவென்று மதுரையைக்கைக்கொண்டான்
என்றும், கடுங்கோன் என்ற பாண்டியன்