|
முரன்றன என்றதனால் வாயொலியின்றிக் கருவிகளே
இசைப்பனவும்,
இயம்பின என்றதனால் கருவியொலியும் வாயொலியும்
கலந்திசைப்பனவும்
வாழ்த்தொலி மலிந்தன என்றதனால் கருவிகளின்றி
வாயொலி மட்டும்
இசைப்பனவும் கூறப்பட்டது காண்க.
முரன்றன
தாரைகள் - இயம்பின பல்லியம் - மலிந்தன வாழ்த்தொலி
எனப் பயனிலைகளை முன்வைத்தோதினார் ஓசையொலிகள் முன்னர்க்
கேட்கப்பட, அதன்பின் அவற்றை நிகழ்த்தும் கருவிவகைகள் நோக்கிய
போதே காணப்படுதல் குறித்தற் பொருட்டு.
இப்
பாட்டிற்கு முன்னுரையாசிரியர்கள் பேரியோடும் தாரைகள்
சங்கங்கள் முரன்றன என்று கூட்டி உரைத்தனர். 36
| 1004. |
வெங்கட்களிற்
றின்மிசை நின்று மிழிச்சி வேரித்
தொங்கற்சுடர் மாலைகள் சூழ்முடி சூடு சாலை
அங்கட்கொடு புக்கரி யாசனத் தேற்றி யொற்றைத்
திங்கட்குடைக் கீழுரி மைச்செயல் சூழ்ந்து செய்வார், |
37
|
|
|
|
| 1005. |
மன்னுந்திசை
வேதியின் மங்கல வாகு திக்கட்
டுன்னுஞ்சுடர் வன்னி வளர்த்துத் துதைந்த நூல்சூழ்,
பொன்னின்கல சங்கள்கு டங்கள்பூ ரித்த தூநீர்
உன்னுஞ்செயல் மந்திர யோகர் நிறுத்தி னார்கள். |
38 |
1004. (இ-ள்.) வெளிப்படை. வெங்கண்ணுடைய
அரசயானையினின்றும்
மூர்த்தியாரை இறக்கித், தேன் பொருந்திய மலர்மாலைகளும், ஒளியுடைய
மணி மாலைகளும் சூழ்ந்துள்ள முடிசூடும் மண்டபத்தின் அழகிய
தலத்திற்கொண்டு சேர்த்துச் சிங்காதனத்தில் எழுந்தருளச் செய்து, ஒப்பற்ற
சந்திரவட்டக்குடைக்கீழ் அரசுரிமைக்கு ஏற்றபடி முடி சூடுதற்குரிய
சடங்குகளை எண்ணிச் செய்வார்களாகி, 37
1005.
(இ-ள்.) வெளிப்படை. பொருந்தி நிலைபெறும் திசையில்
இடப்பட்ட வேதிகையில் சிவமந்திரங்களாலாகிய ஆகுதிக் குண்டத்தின்கண்
சுடரிற் பொருந்திவரும் தீயை வளர்த்து, முப்புரி நூலை நெருங்கச் சுற்றிய
பொற்கலசங்களையும், குடங்களையும் நிறைவித்த தூய்மையான கங்கை
முதலிய தீர்த்தங்களைத் தியானிக்கும் மந்திரம் வல்ல தேசிகர்கள்
தாபித்தனர். 38
இந்த
இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபுகொண்டன.
1004.
(வி-ரை.) வெங்கண்களிறு - வெம்மை -
விருப்பம்.
மூர்த்தியாரை விரும்பிக்கண்டு தாழ்வுற்று எடுத்துப் பிடரிமேற்
கொண்டமையால் இவ்வாறுகூறினார். வெங்கண் -
கோபக்கண் என
இயற்கையடையாகக் கொள்வாருமுண்டு.
இழிச்சி
- கீழே இறங்கச் செய்து. யானை எடுத்துத் தன் பிடரியில்
தரித்த செயல் இவரே அரசர் எனக் காட்டிய அளவில் நின்றது. அரண்மனை
சென்று அரசராக முடிசூடி யானைமேல் நீண்மறுகிற் போதும்
உலாவினைப்பின்னர் 1010ல் "நீடுங்களிற்றின்மிசை" என்று கூறுவாராதலின்,
இங்கு அரசாங்க முடிசூட யானையினின்றும் இறக்கினார்கள் என்க.
வேரித்
தொங்கல் சுடர்மாலைகள் சூழ்சாலை என்க. சாலையினைப்
(முடிசூடு மண்டபத்தைப்) பூமாலைகளாலும் மணிமாலைகளாலும்
அலங்கரித்தனர் என்பதாம். இழிச்சிக் கொடுபுக்கு - ஏற்றிச் - செயல் -
சூழ்ந்து செய்வார் - வேதியில் - கலசங்கள் - குடங்கள் - யோகர்
நிறுத்தினார்கள் என்று இந்த இரண்டு பாட்டுக்களையும் கூட்டி முடிக்க.
|