பக்கம் எண் :


1296 திருத்தொண்டர்புராணம் மூலமும் உரையும்

 
1008. "வையம்முறை செய்குவ னாகில், வயங்கு நீறே
செய்யும்மபி டேகமு மாகச், செழுங்க லன்கள்
ஐயன்னடை யாளமு மாக, வணிந்து தாங்கும்
மொய்புன்சடை மாமுடி யேமுடி யாவ" தென்றார்.
41

     1007. (இ-ள்.) வெளிப்படை. மூர்த்தியார் அவ்வாறு அருள்
செய்ததனைக் கேட்ட அமைச்சர்களோடு உண்மை நூலறிவின் மிக்கோர்களும்
"பெரியோய்! நீ எவ்வாறு அருளிச்செய்தனையோ அவ்வாறன்றி வேறு
செய்வார் யாவர்?" என்று அவரது திருவடிகளில் வீழ்ந்து சொல்ல, 40

     1008. (இ-ள்.) வெளிப்படை. மூர்த்தியார், "உலகத்தை நான்
அரசுசெய்வேனாகில், சிவபெருமானது திருமேனியில் விளங்கும் திருநீறே
எனக்குச் செய்யும் மகுடாபிடேகமாகவும், ஐயன் அடையாளமாகிய
உருத்திராக்கமே பூணும் செழுங்கலன்களாகவும், இறைவனது
திருவடையாளமாகிய மொய்த்த புன்சடையே அரசமுடியாகவும்
இருக்கத்தக்கன" என்றார். 41

     இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன.

     1007. (வி-ரை.) மெய்வாழ் தருநூல் - அறிவனூல்களாகிய
வேதங்களும் சிவாகமங்களும். இவற்றின் பொருள்கள் என்றும் மாறாது
உண்மையாக விளங்குவன என்பது. மெய்வாழ்வைத் தரும்நூல்
என்றுரைப்பினுமாம். இவையும் இவற்றைச் சார்ந்தவையுமல்லாத ஏனை
நூல்கள் மெய்வாழ்வைத் தராது பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச்
சுருக்குவன என்பதும் போதரும்.

     அமைச்சர் - உலக நூல்மதி வல்லோர்; மெய்......நூலறிவின்
மிகுமாந்தர்
- அறிவனூல் வல்லோர்; எனவே இகம் பரம் என்ற இரண்டின்
வல்லவர்களும் கூடி என்றபடியாம்.

     நீ எவ்வாறு அருளினையோ அதுவன்றி மற்றுச் செய்வார்
யாவர்? என்க. யாவர்
என்றவினா ஒருவருமிலர் என எதிர்மறை குறித்தது.
யாங்கள் மட்டுமேயன்றி இந் நாட்டில் வேறு எவரும் இலர் என்பது. மற்று -
அதுவன்றிப்பிற.

     பெரியோய்! - செய்தற்கரிய செயல் செய்தவரே!

     சேவடி தாழ்ந்து செப்ப - அரசரது முன்னிலையில் அறிவிக்கும் மரபு.

     கேட்ட - அமைச்சரோடு - மாந்தர் தாமும் - செப்ப - (மூர்த்தியார்)
என்றார் என இந்த இரண்டு பாட்டுக்களையும் கூட்டி முடித்துக்கொள்க. 40

     1008. (வி-ரை.) வையம் முறை செய்தல் - அரசு செலுத்துதல்.
உலக மக்களை நீதிநூல் விதித்தபடி அவ்வவர்க்கேற்ற நிலையில் நிறுத்துதல்.
இது அரசர்களது முதற் கடமையாம். "தத்தநெறிகளிற் சரித்து வாழும்" (996)
என்பது பார்க்க. கழறிற் றறிவார் நாயனார் புராணத்திலும், திருநகரச்
சிறப்பிலும் கூறிய அரச நீதி முறைகளும் காண்க.

     வயங்குநீறு - இறைவன் அணிந்த திருநீறு - "சிவன்றிர டோண்மேல்
நீறு நின்றது கண்டனை", "பூசுவதும் வெண்ணீறு" (திருவாசகம்) முதலிய
திருவாக்குக்கள் காண்க.

     வயங்கு - பிறவினையாகக் கொண்டு, வயங்குவிக்கும் - விளக்கம்
செய்யும் - திருநீறுஎன்றலுமாம். "பேணி யணிபவர்க் கெல்லாம் பெருமை
கொடுப்பதுநீறு" (காந்தாரம் - திருநீற்றுப்பதிகம் - 4) என்றது
ஆளுடையபிள்ளையார் தேவாரம். விளங்குகின்ற நீறு என்றுரைத்தலுமாம்.
"நீற்றொளி கண்டோர் கண்கோடனிறைந்தாராக் கவின்கொள்ள" (941),
"புண்ணிய நுதற்புனித நீறு பொலிவெய்த (175) முதலியவை காண்க.