நீடும்
களிறு -
முன்னர்க் கண்கட்டி விடப்பட்டபோது திருவருள்
வசமாகித் தம்மை எடுத்துப் பிடரியில் கொண்ட என்று குறிக்க நீடு என்றார்.
நீள்
மறுகு - ஆலவாய்க்கடவுள் பல அருட் டிருவிளையாடல்கள்
செய்த அருளினால் நீளும் திருவீதிகள். இந்நாளிலும் அவை அவ்வருட்டிரு
விளையாடல்களையே (ஆவணி மூல வீதி முதலிய) தத்தம் பெயர்களால்
நினைவூட்டி நிற்பதும் கண்கூடு.
மௌலியணிந்தவர்
என்ற எழுவாய் வினைப்பெயர். 43
1011.
(வி-ரை.) மணிமாளிகை - அரசரது அரண்மனை. தயங்கும்
மணிமண்டபம் - அதனுள் கொலு வீற்றிருக்கும் மண்டபம்.
பொன்னின்
அரி மெல் அணை - பொன்னாற் புனையப்பட்டுச்
சிங்கம் சுமந்தது போல அமைக்கப்பட்டிருக்கும் அரச இருக்கை. மென்மை
-
பஞ்சு, தூவி முதலியவற்றை உள்ளே இட்டு, வீற்றிருக்க மெல்லியதாய்ப், பட்டு
முதலியவற்றால் அமைக்கப்படுதல் குறித்தது.
Soft cushion என்பர் நவீனர்.
சாமரைப்பூங்கால்
- சாமரைகளை இருபுறமும் மெல்ல வீசுதலால்
உளதாகும் மென்மையாக அசையும் காற்று. காமர்
- சாமரைகளின் அழகு -
வரிசையின் ஒழுங்கு - இவற்றையும், பூ - காற்றின்
மென்மையினையும்
குறித்தன. நவீனர், மேல் விசிறி (Punka) வீச அதன்கீழ் வீற்றிருக்கும் இயல்பு
காண்க.
மன்னும்
குடைநீழல் - உலகம் தன் கீழ்த்தங்கும் அரச ஆணைக்கு
அடையாளமாகிய வெண்குடையின் நீழலிலே. நீழல் -
உபசாரம்.
"வெண்கொற்றக் குடையும், நவமணி முடியும், சிங்காதனமும்,
மன்னவர்க்கேயுரிய சிறப்படையாளமாம்" (சிவஞா - போ - 8-ம் சூ. சிற்றுரை)
என்றது காண்க.
வையந்
தாங்கி இருந்தனர் என்க. தாங்குதல் உபசார
வழக்கு.
அரசாளுதல் குறித்தது. "வையம் முறை செய்குவனாகில்" (1008).
அணை
- நீழல் - ஏழனுருபுகள் தொக்கன.
அணிந்தவர்
- சென்று - தாழ்ந்து - போந்தாராகி - இழிந்து - நீழல் -
இருந்தனர் என்று இந்த இரண்டு பாட்டுக்களும் கூட்டி முடித்துக்கொள்க. 44
1012.
|
குலவுந்துறை
நீதி யமைச்சர் குறிப்பின் வைகக்,
கலகஞ்செய மண்செய லாயின கட்டு நீங்கி
நிலவுந்திரு நீற்றுநெ றித்துறை நீடு வாழ,
உலகெங்குநி ரம்பிய சைவமு யர்ந்து மன்ன, |
45 |
|
|
|
1013. |
நுதலின்கண்வி
ழித்தவர் வாய்மை நுணங்கு நூலின்
பதமெங்குநி றைந்து விளங்கப் பவங்கண் மாற
வுதவுந்திரு நீ,றுயர் கண்டிகை, கொண்ட வேணி
முதன்மும்மையி னாலுல காண்டனர் மூர்த்தி யார்தாம். |
46 |
1012.
(இ-ள்.) வெளிப்படை. குலவுகின்ற பல துறைகளிலும்
நீதிநடத்தும் அமைச்சர்கள் தமதுகுறிப்பின்படி நிற்கவும், கலகம்செய்த
அமணர் செயலாயின கட்டு நீங்கி நிலவுகின்ற திருநீற்று நெறியும் துறையும்
நீடுவாழவும், உலகமெங்கும் நிரம்பிய தன்மையுடைய சைவம் ஓங்கி
நிலைபெறவும், 45
1013. (இ-ள்.) வெளிப்படை. நெற்றியின்
கண் விழியுடையவராகிய
சிவபெருமானது வாய்மையாகிய நுண்பொருள் கொண்ட நூலின் பொருள்
எங்கும் நிறைந்து விளங்கவும், பவங்கள் மாறவும் உதவுகின்ற திருநீறும்,
உயர் உருத்திராக்கக்
|