வண்டு
நனைகளின் புடைசூழ்ந்து அலர்த்துதலால் தேன்துளி மழைபோலத்
துளிப்பன; ஆதலின் புனன்மழையோ? மதுமழையோ? பொழிவொழியா
என்றார்.
கனமருவி
அசைந்தலையப்புனன்மழை, வண்டுசூழமதுமழை,
பொழிவொழியா என்று நிரனிரையாகக் கூட்டி உரைக்க. இங்கு மழை
என்பது துளிகளின் தூற்றுதலைக் குறித்தது.
ஓகாரங்கள்
ஒவ்வோர் காலம் இரண்டிலொன்று இடைவிடாது
பொழியும் நிலையாகிய சிறப்புக் குறித்தன. ஐயப்பொருளில் வந்தன என்று
கொள்வாரு முண்டு.
இருந்தசையக்
களி வண்டு - என்பதும் பாடம். 3
1044.
|
பாளைவிரி
மணங்கமழும் பைங்காய்வன் குலைத்தெங்கின்
றாளதிர மிசைமுட்டித் தடங்கிடங்கி னெழப்பாய்ந்த
வாளைபுதை யச்சொரிந்த பழமிதப்ப வண்பலவி
னீளமுதிர் கனிகிழிதே னீத்தத்தி லெழுந்துகளும். 4
|
(இ-ள்.)
வெளிப்படை. இளம் பாளைகள் விரிந்து
மணங்கமழ்கின்றனவும், பசிய காய்களையுடைய வலிய குலைகளைக்
கொண்டனவுமாகிய தென்னை மரங்களின் அடிப்பாகத்தில் மரம்
அசையுமாறு முட்டிப் பெரிய நீர்ப்பள்ளங்களினின்றும் மேலெழும்பிப்
பாய்ந்த வாளை மீன்கள், தாம் கீழே புதையச்சொரிந்த அத்தென்னைகளின்
நெற்றுக்கள் மிதக்கும்படி வண்மையுடைய பலாமரங்களின் நீண்ட முதிர்ந்த
கனிகள் கிழிந்து பெருகிய தேனின் பெருக்கிலே (அவ்வாளை மீன்கள்)
எழுந்து குதிக்கும்.
(வி-ரை.)
பாளை விரி மணம் - இளம்பாளைகள் விரிதலால்
உளதாகும் மணம். இளம்பாளைகள் தென்னையின் பூங்கொத்துக்களாகும்.
பைங்காய்
வன்குலை - பசிய காய்கள் நிறையக்காய்த்த வலியகுலை.
குலைக்கு வலிமையாவது காய்கள் நாளுக்குநாள் கனக்கப்பெருத்து
நிறையினும் பற்று விடாது தாங்கும் வல்லமை.
தெங்கின்....முட்டி
- தெங்கின் தாளில் (அவை) அதிரும்படி மேல்
முட்டி என்க. முட்டுதல் - தாக்குதல்.
கிடங்கின்
எழப்பாய்த்த - கிடங்கினின்றும் உயர மேலே
எழும்புமாறு துள்ளிப்பாய்ந்த. கிடங்கு -
நீரையுடைய பள்ளங்கள். தடங்கள்
என்றலுமாம். முட்டிப் - பாய்ந்த - வாளை என்க.
புதைய
- புதையும்படி. சொரிந்த பழம்-
உதிர்த்த தெங்கங்கனி.
நெற்று.
பசிய
காய்கள் குலைகளில் வலிமையுடன் பற்றிக்கொண்டிருப்பதும்,
பழுத்த முற்றின நெற்றுக்கள் சிறிது அதிர்ச்சி உண்டாயினும் பற்றுவிட்டு
உதிர்வதும் தென்னையின் தாவர இயல்பு. "காக்கை யேறப் பனம்பழம் வீழ"
என்ற முதுமொழியும் காண்க.
முட்டிப்பாய்ந்த
வாளை புதையச் சொரிந்த பழம் - கரையில்
வளர்ந்த தென்னை அதிரும்படி மேல்முட்டிக் கிடங்கினின்றும் வாளை
குதித்துப் பாய்ந்தது; அதிர்ச்சியுண்டாகும்படி தனது தாளிற்பாய்ந்த
வாளையின் தீச்செயலுக்குச் சினந்து அதனைத் தண்டிப்பது போன்று
அத்தென்னை தன் பழங்களை அதன்மேற் சொரிந்தது; அந்நெற்றுக்கள்
வாளையைத்தாக்கி அதனோடு வீழ்ந்து கீழே வயலின் சேற்றிற் புதைந்தன;
அவற்றினடியில் அமுக்குண்டு வாளையும் சேற்றினுட் புதைக்கப்பட்டது
என்க.
|