|
முன்னையினும்
அநேக மடங்கு கறப்பனவாய் - இதற்குக் காரணம்
முன்பாட்டில் மடிபெருகி என்றதனால் உரைக்கப்பட்டது.
பேணும்
தகுதி இப்பிரமசாரி அன்பால் மேய்த்ததற்பின் - என்க.
பேணும்
தகுதி - பசுக்காத்தற்குத்தக்க தன்மை. இதனை முன்,
"மேய்க்கும் பான்மை" (1230) என்றார். இத்தகுதிக்குரிய செயல்கள் 1230 -
1231 - ல் உரைக்கப்பட்டன. அன்பால் -
பசுக்கள் செழித்து மன மகிழும்படி
மேய்ப்பதற்கு இன்றியமையாத சாதனம் அவற்றினிடத்து அன்புடைமையேயாம்
ன்ற துணிபை வற்புறுத்தியவாறு காண்க. இதனை முன்னர் "மிகும்பரிவால்"
(1222) என்றதும் காண்க.
இப்பிரமசாரி
- விசாரசருமனார் தம்முள் ஒருவராயிருத்தலின் இ என்ற
அண்மைச் சுட்டினாற் குறித்தார்கள்.
மாணும்
திறத்த ஆன - மாண்பு பொருந்திய தன்மையுடையன
வாயின. மாண்பாவது அழகுடைமையும் மனமகிழ்ந்து பால் அதிகம் தரும்
தன்மையுமாம். ஆன - ஆயின - ஆயன் மேய்த்த போதில்லாத மாண்பு
இப்போது உளதாயிற்று என்பார் மேய்த்ததற்பின் - ஆயின
என்றார்.
மறையோர்
- பசுக்களை உடையவர்கள். 1233 - ல் பசுக்கள் ஏய
மனங்கொள் பெருமகிழ்ச்சி எய்தினதைக் கூறினார்; இங்கு அவற்றின்
மகிழ்ச்சிகண்டு அவற்றாற் பெறும் வேள்விச் சிறப்பு நோக்கி மறையோரும்
மனமகிழ்ந்தமை கூறினார்.
எல்லாம்
- எல்லாரும், முற்றும்மை தொக்கது. கறப்பனவாய் - மாணுந்
திறத்த ஆயின என்று கூட்டுக. 29
|
1235.
|
அனைத்துத்
திறத்து மானினங்க ளணைந்த மகிழ்ச்சி
யளவின்றி
மனைக்கட் கன்று பிரிந்தாலு மருவுஞ் சிறிய மறைக்கன்று
தனைக்கண் டருகு சார்ந்துருகித் தாயாந் தன்மை
நிலையினவாய்க்
கனைத்துச் சுரந்து முலைக்கண்கள் கறவாமேபால்
பொழிந்தனவால். 30 |
(இ-ள்.)
வெளிப்படை. எல்லாவகையாலும் ஆனினங்கள் கொண்ட
மனமகிழ்ச்சி அளவில்லாமல் வீட்டில் உள்ள தமது கன்றுகளைப் பிரிந்தாலும்,
தம்முன் மருவிய சிறிய மறைக்கன்றாகிய விசாரசருமரைக் கண்டு அருகே
யடைந்து உருகி அக்கன்றுக்குத் தாம் தாயாகிய தன்மையுள்ள
நிலையினைஅடைந்தவைகளாகக் கனைத்துக்கொண்டு மடிசுரந்து
முலைக்கண்களினின்றும் கறவாமே பாலினைப் பொழிந்தன.
(வி-ரை.)
அனைத்துத்திறம்
- முன் 1233 - ல் உரைக்கப்பட்டவை.
மகிழ்ச்சி
அளவின்றி - கண்டு - சார்ந்து - உருகி - நிலைமையவாய்
- கனைத்து - சுரந்து - பால் பொழிந்தன - என்று முடித்துக் கொள்க.
மனைக்கட்கன்று
பிரிந்தாலும் - மறைக்கன்று தனைக்கண்டு -
பிரித்தரியாத தமது கன்றுகளை மனைக்கட்பிரிந்து தாம் தனியே மேய்வதற்கு
வந்தபோதிலும் அதனால் வருந்தாது, விசாரசருமரைத் தம்கன்றாகவே கண்டு.
மருவும் - தம்முடன் மருவியிருக்கும். விசாரசருமனார் பசுக்களின் கூடவே
யிருந்து பேணிய தன்மை குறித்தது. "கன்றகல் புனிற்றாப் போல்வர்" (761)
என்றபடி கன்றினைப் பிரிந்த பசுக்கள் இயல்பாய் வருந்தல் வேண்டுமாயினும்,
இங்கு அதற்குமாறாக வருந்தா திருந்ததுடன், அன்பு பெருக நின்று மடி
சுரந்து பாலும் பொழிந்தன என்னில், இதுவும் இயற்கைக்கு மாறன்று, இங்கும்
அன்புமிக்க கன்றிருந்ததாகலின் என்றதாம்
சிறிய
மறைக்கன்று - சிறுமை பிராயத்தாலும் உருவத்தாலும்
காணப்பட்டது. "அச்சிறிய பெருந்தகையார்" (திருஞான - புரா - 73)
முதலியவை காண்க.
|