|
சேர்க்கை
I
பசுக்களைச்
செலுத்தம்போது அவைகளுக்குச் சிறிதும் துன்பம்
செய்யாமலும் அச்சம் வராமலும் இரக்கத்தோடு பலாசங்கோலினாலே மெல்ல
ஒச்சிப்போ போ என்ற செலுத்தல்வேண்டும். இரக்கமில்லாமற் கோபித்தும்,
அதட்டியும், அடித்தும் தீங்கு செய்பவர் நரகத்துக்காளாவர். பசுக்களின்
பெருமையை உணர்ந்து அவற்றை வணங்கிப் பூசித்துப் புல் கொடுத்தவர்கள்
சிவலோகத்தை அடைவர். இதனை எல்லாரும் செய்தல்வேண்டு மென்பதனை
"யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை என்று திருமூலதேவர் திருமந்திரம்
அருளினர். பசுக்களின் வருத்தம் தணிப்பதற்கென்றே திருமூலராகும்
சிவயோகியார் தமது உடலை விடுத்து அவற்றை மேய்த்த இடையன் உடம்பிற்
பரகாயப்பிரவேசம் என்ற யோக நெறியினாலே புகுந்து எழுந்து அவற்றை
மகிழ்வித்தனர்.
பசுக்களைத்
தீண்டினும் தீவினைகள் நீங்கும்; நல்வினைகள் பெருகும்.
பசுக்கள் மக்களுக்கு இம்மை மறுமை என்ற இரண்டு பயனும் தருவன. சிவ
வழிபாட்டுக்குரிய சாதனம் தருதலால் சிவனடி சேர்தற்கும் துணைசெய்வன.
பசுக்கள் தங்குதற்குரிய
சாலையை விதிப்படி அமைத்து அதனுள்
ஆற்றுமண், புற்றுமண், ஒடைமண், அரசமரத்தடிமண், வில்வத்தடிமண்
முதலிய தூயமண்ணினால் நிலம் செய்தல்வேண்டும்.
இளங்கன்று,
முதிர்கன்று, நோய்க்கன்று என்பவற்றுக்கு வெவ்வேறாக
இடங்கள் அமைக்கவேண்டும். (,இதுபற்றி ஆனாயநாயனார்புராணத்தில்
உரைத்தவை பார்க்க.)
நாடோறும்
அவ்வப்போது கோசல கோமயங்களை அப்புறப்படுத்திச்
சுத்தி செய்து, மசகம் வராமல் தூபமிட்டுத் தீபமேற்றிச் சாலையைப் பூ
முதலியவற்றால் அலங்கரித்து, அதனுள் சுவத்தி என்னும் சொல்லைச்
சொல்லிப் பசுக்களை மெல்லப் புகுவித்து அன்போடும் புல்லைக்
கொடுக்கவேண்டும். நோயுற்ற பசுக்களுக்கு வேறிடம் செய்து மருந்து
கொடுத்துக் காத்தல்வேண்டும். இளைத்த பசுக்களைக் கண்டு இரங்கித்
தாம் வாங்கி வளர்த்தல் பெரும் புண்ணியமாம்.
அட்டமிநாள்
தோறும் பசுக்களை நீராட்டிப் பூச்சூட்டிச் சோறும்
நீரும் தந்து புகையும் விளக்கும் காட்டிப் பூசித்து வணங்குதல்வேண்டும்.
வேனிற்காலத்திற்
சோலைகளிலும் மழைக்காலத்தில் மலைச்சாரல்
வனங்களிலும் பனிக்காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் துன்பம்
வாராதபடி பசுக்களை நல்ல புல்லுள்ள நிலத்தில் மேய்த்துத் தூய நல்ல
நீர்த்துறைகளில் நீரூட்டுவித்தல் வேண்டும்.
பசுக்களின் துன்பம் போகக்காக்காதவர்களும்,பூசைசெய்யாதவர்களும்,
காக்காத பாவிகளைத் தண்டிக்காத அரசனும் நரகில் வீழ்வார்கள்.
ஆவுரிஞ்சுதற்குக்
கல் - தறி முதலியவற்றை நடுதலும், சிவனுக்கும்
ஆசாரியனுக்கும் பசுவைத் தானம் செய்தலும், நல்ல இலக்கணங்களையுடைய
எருதைச் சிவசந்நிதானத்துக்குத் தானமாக விடுதலும், சிவபெருமானது
திருப்பணிவிடைக்காக எருதுகள் கொடுத்தலும் பெரும் சிவபுண்ணியங்களாம்.
மலட்டுப் பசுக்களின்
மேலேனும், இடபத்தின் மேலேனும் பாரம்
ஏற்றினவர்களும், இடபத்தில் ஏறினவர்களும் நரகில் வீழ்ந்து வருந்துவர்.
இடபங்களை உழவுக்காகவேனும் பயன்படுத்தலாகாது என்ற மரபினைச்
சேக்கிழார் நாயனார் பலஇடத்தும் உணர்த்தியருளினர். பசுக்களின்மேற்
பார மேற்றலாகாது என்பது சொல்லாமலே யமையும்.
பசுக்கள் தரும்
திருமஞ்சனம் ஐந்தினையும் சிவனுக்கு ஆட்டுவித்தல்
மேலான சிவபுண்ணியமாகும். ஈன்று இரண்டுமாதம் வரை கன்று உண்ணும்படி
பாைலைவிட்டுப் பின் கறந்து சிவபெருமானுக்குத் திருமஞ்சனம்
ஆட்டுதல் வேண்டும்.
|