பக்கம் எண் :

திருத்தொண்டர் புராணமும் - உரையும்797

ஆளுடைய பிள்ளையாரைப் பற்றிய திருமுறைகளுட் சில
ஆளுடைய அரசுகள் திருநேரிசை           
காயிரும் பொழில்கள் சூழ்ந்த கழுமல வூரர்க் கம்பொன்
னாயிரங் கொடுப்பர் போலு மாவடு துறைய னாரே
ஆளுடைய நம்பிகள்
"நாளு மின்னிசையாற்றமிழ் பரப்பும், ஞானசம்பந் தனுக்குல கவர்முன்
 றாள மீந்தவன் பாடலுக் கிரங்குந் தன்மை யாளனை"
- தக்கேசி - திருக்கோலக்கா
"திருமிழலை, யிருந்துநீர் தமிழோ டிசைகேட்கு
 மிச்சையாற் காசு நித்த னல்கினீர்..."
- சீகாமரம் - திருவீழிமிழலை
"நல்லிசை ஞானசம் பந்தனும் நாவினுக் கரசரும் பாடிய நற்றமிழ் மாலை
  சொல்லியவே சொல்லி யேத்துகப் பானை"
- தக்கேசி - திருவலிவலம்
சேந்தனார், திருவிசைப்பா திருவீழிமிழலை          
"பாட லங்காரப் பரிசில் காசருளிப் பழுத்த செந்தமிழ்மலர் சூடி
 நீட லங்காரத் தெம்பெரு மக்கணெஞ்சினு ணிறைந்து நின்றானை"