பக்கம் எண் :

[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்1495

கள் பிள்ளையாரால், "ஞானமெய்ந் நெறிதான் யார்க்கு நமச்சிவா யச்சொலாம்" என்று சீபஞ்சாக்கர உபதேசம் செய்யப்பெற்று, "ஈனமாம் பிறவி தீர யாவரும் புகுக" என்று சோதிவாயிலினைக் காட்டப்பெற்றபோது "பேர்ஒளி"யினை அடைய வல்லுநராயினமையும் கருதுக; இங்ஙனங் காட்டாக்காற் றாமே யறிமாட்டாமையின் இவர்வேறு கூறப்பட்டார்.
அளவிலா விரதஞ் சாரும் நெறிவழிநின்ற வேடம் நீடிய தவம் - என்ற குறிப்பு மேற்கூறிய கருத்துக்களுடன் வைத்துக் கருதத்தக்கது. மானக்கஞ்சாறனார் புராணத்துள் (887 - 891) வரும் மாவிரதியரும், சிறுத்தொண்டனார் புராணத்துள் வரும் வயிரவரும் (மேற்படி புரா - 26 - 35), சிவத்திருவேடத்தாராகக் கொள்ளப்பட்டமையும், "பம்புசடைத் திருமுனிவர் கபாலக் கையர் பலவேடச் சைவர்" (2971) என்றமையும், பிறவும் காண்க; இக்கருத்துப்பற்றியே பின்னரும் "ஆறு வகைச் சமயத்திலருந்தவரும் (3150) என்பதும் கருதுக. *"சுத்த சைவர் இந்நூல் கேட்ட துணையானே தாற்பரியம் இனிதுணர்ந்து சித்தாந்தப் பொருள் கைக்கொள்வரென்பது பெறப்பட்டது; அத்துணை யணிமைய ராகலா னன்றே சித்தாந்த சைவத்தைச் சாரவைத்தார் என்பது". ஈண்டு இனி இவர்களை அடுத்த "மறுவறு...தொண்டர்" என்பதும் காண்க.
மறுவறும் தொண்டர் - இவர்கள்சித்தாந்த சைவர். மறுவறு மனத்தின் அன்பின் வழி என்றது ஞானம்; யோகம் - சிவயோகம்; குறிநிலை - கிரியை; தொண்டு - சரியை வகை; என இவ்வாறு சைவ நன்னெறிகளாகிய "நலஞ்சிறந்த ஞானயோகக் கிரியாசரியை யிவை" (திருமூலர் - புரா - 28) குறிக்கப்பட்டன. இந்நான்கு சித்தாந்த சைவத்துள் "சங்கரனை யடையும், நன்மார்க்க நாலவைதாம் ஞான யோக நற்கிரியா சரியையென நவிற்றுவதும் செய்வர்" (சித்தி - 8- 180 இவற்றினியல்புகளை யெல்லாம் ஞானநூல்களுட் கண்டுகொள்க; (சித்தி - 8 -18 - 25) யோகம் - புறச்சமயங்களுள் வரும் யோகம் வேறு; குறிநிலை - ஒரு குறியின்கண் சிவனை நிறுத்துப் பூசித்தலாற் குறிநிலை எனப்படும். "குறிப்பி னாலே கூப்பினான் றாப ரத்தை" (தேவா); "கோள மதனி னுண்ணிறைந்து குறித்த பூசை கொள்கின்றார்" (1241); தொண்டு - சரியைநெறி பலவும் கொள்க.
குழாம் குழாமாகி - கூறிய இரண்டு நிலையினர் (அகம், புறம் - சித்தாந்தம்)களைக் குறிக்க அடுக்கிக் கூறினாா. இங்கு இவ்வாறன்றி வேறுவகையாய்ப் பொருளுரைப்பர் முன் உரைகாரர்கள்; நான்கும் ஒரு பொருள்மேல் வருதலிற் சேர்த்துக் கூறினார்.
முன்பாட்டால் வைதிகநெறி ஒழுக்கத்தினரையும், இப்பாட்டால் ஆகமநெறி யொழுக்கத்தினரையும் கூறிய நிலையும் சிறப்புப்பற்றிய வைப்பு முறையும் கண்டு கொள்க. இதனுடன் மண்ணுலகினுள்ளாரை முடித்துக் காட்டி, இனி, மேல்வரும் பாட்டில் விண்ணுலகவரைக் கூறுதலும் கண்டுகொள்க.

1203

3102. (வி-ரை.) விஞ்சையர், இயக்கர், கின்னரர் - இவர்கள் இசைவல்ல தேவச் சாதியர்.
சித்தர் - வேண்டியவாறு சரிக்கும் வல்லமை பெற்றவர்கள். "வித்தகச் சித்தர் கணமே" (தாயுமா).
அரம்பையர் உடனாயுள்ளோர் - தேவப் பெண்களுடன் கூடிய தேவர்கள்; அரம்பையர் - தேவப்பெண்கள் என்ற பொருளில் வந்தது.

பாடியம் - 2 - 1 பார்க்க.