பக்கம் எண் :

1496திருத்தொண்டர் புராணம் [வம்பறாவரிவண்டுச் சருக்கம்]

சுடர் விமானம் - ஒளியுடைய ஆகாய விமானங்கள்.
மஞ்சுறை விசும்பு - மேகமண்டலம் அளவும் உயர்ந்தஆகாயம். தேவர்களின் விமானங்கள் செல்லும் உயரம் குறித்து.
ஆதரவு - ஆசை; தழைத்தல் - பெருகுதல்; மண அணிகாண - மண அணிகள் தேவருலகத்தும் காணவொண்ணாதபடி அற்புதமாயிருத்தல் குறிப்பு; நிலவுலகத்தில் மண எழுச்சியிற் கலந்துசென்ற பேறுபெற்ற மக்கட் கூட்டம் முழுதும் பின்னர்ப் பிள்ளையார்அருளால் முத்திபெற்று மீளாநெறி யடையவுள்ளாராக; இத்தேவக் கூட்டம் அப்பேறு பெறும் தகுதியில்லாதவராகி மணவணி காண்பதில்மட்டும் அமைவுபடுவர் என்பது காண என்றதன்குறிப்பு. பின்னர்த், "தூரத்தே கண்டு நணுகப் பெறா, விண்ணவருமுனிவர்களும் விரிஞ்சனே முதலோரும், எண்ணிலவ ரேசறவு தீரவெடுத் தேத்தினார்" (3153) என்பது காண்க; தேவர்கள்தமது அனுபவநாள் எல்லையில் புவனியில் வந்து பிறந்து சிவதருமங்கள் புரிந்த பின்னலே நாளடைவில்முத்தியடையத்தக்கார் என்பது நூற்றுணிபு; "புவனியிற் போய்ப்பிற வாமையினாணாம் போக்குகின் றோமவ மேயிந்தப் பூமி, சிவனுய்யக் கொள்கிற வாறு" (திருவா).

1204

3103
ற்றிவர் மிடைந்து செல்லும் மங்கல வனப்பின் காட்சி
முற்றவித் தலத்தி னுள்ளோர் மொய்த்துடன் படரும் போதில்
அற்புத நிகழ்ச்சி யெய்தவணைதலான் மணமேற் செல்லும்
பொற்பகை மணத்தின்சாயை போன்றுமுன் பொலியச் செல்ல;

1205

3104
தவவர சாள வுய்க்குந் தனிக்குடை நிழற்றச் சாரும்
பவமறுத் தாள வல்லார் பாதமுள் ளத்துக் கொண்டு
புவனங்கள் வாழ வந்த பூந்தராய் வேந்தர் போந்து
சிவனமர்ந் துறையு நல்லூர்த் திருப்பெரு மணத்தைச் சேர்ந்தார்.

1206

3103. (இ-ள்.) மற்றிவர்...காட்சி - மற்று இத்தேவச்சாதியர் முதலினோர் நெருங்கி மேற்செல்லும் மங்க்லமாகிய அழகின் காட்சியானது; முற்ற...அணைதலான் - இந்நிலவுலகத்துள்ளோர் யாவரும்நெருங்கிக்கூடித் திருமண எழுச்சியிற் செல்லும் காலத்தில் - அற்புதமாகிய தன்மை பொருந்த மேலே உடன் அணைதலினாலே; மணமேல்....சாயைபோன்று - மண எழுச்சியின்மேலே செல்கின்ற அழகு பொருந்தியதொரு மண எழுச்சியினது சாயையினைப் போல; முன்பொலியச் செல்ல முன்னே விளங்கும்படி போக;

1205

3104. (இ-ள்.) தவஅரசு....நிழற்ற - தவ அரசாங்கத்தை ஆட்சிபுரிதற்கும் பிடித்தல்போல ஒப்பற்ற முத்துக்குடைமேல் நிழற்ற; சாரும்....கொண்டு - சார்கின்ற பிறவியை அறுத்து ஆட்கொள்ள வல்ல இறைவரது திருவடிகளைத் தமது திருவுள்ளத்துக் கொண்டவராய்; புவனங்கள்......போந்து - புவனங்களெல்லாம் வாழ்வடையும் பொருட்டு வந்தவதரித்த சீகாழி வேந்தராகிய பிள்ளையார் சென்றருளி; சிவன்...சேர்ந்தார் - சிவபெருமான் விரும்பி எழுந்தருளிய திருநல்லூர்ப் பெருமணத்தினைச் சேர்ந்தருளினர்.

1206

இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன.