| 2538. (வி-ரை) மழவிடை இளங்கன்று ஒன்று வந்து - மழ - இளம் - ஒரு பொருட் பன்மொழி; மிக்க இளமை குறித்தது; கன்று - என்பது அதனை மேலும் வலியுறுத்திற்று; விடைக்கன்று - ஆண் கன்று; விடை - ஆண்பால் என்ற குறிப்பளவில் தந்து நின்றது; சிவசம்பந்தமாகிய குறிப்புமாம்; ஒன்று - ஒப்பற்றது; வந்து - வெளியே நின்றும் போந்து; பிள்ளையாரது வருகைக் குறிப்பு. |
| உழதுதல் - சுற்றிச் சூழ்ந்து மிதித்துக் கலைத்தல்; |
| சிதறி ஓடுதல் - சிதைந்து விரைந்து நீங்குதல்; |
| விழ ஒரு புகலுமின்றி - விழ - அபயம்புக்கு ஒளிக்க என்ற பொருளில் வந்தது; அரசனது புகலிடம் இழப்பது குறிப்பு |
| மேதினிதன்னை விட்டு - பூமியில் பற்றுக்கோடின்றி; நிலவுலக வாழ்வை நீத்து என்ற குறிப்பும்பட நின்றது. |
| நிழலிலா மரங்கள் - கழுக்கோல்களின் குறிப்பு. இப்பாட்டிற் கூறப்பட்ட கனாத்திறம் பிள்ளையாருடன் சமணர் கூட்டம் வாது செய்து தோற்று ஓடிக்கழுவேறி முடிய நின்ற விளைவுகளைக் குறித்துணர்த்தல் காண்க; |
| என்பார் - என்பதும் பாடம். |
| 640 |
| 2539. (வி-ரை) ஆவதென்! - இவையெல்லாம் என்னாய் முடியுமோ? நம்மால் இதற்குத் தீர்வு செய்யலாவதென்றோ? என்ற குறிப்புமாம். |
| பாவிகாள்! - இரங்குதலின் கண் வந்த குறிப்பு மொழி; "பாவியேன் கண்ட வண்ணம் பரமனார்க் கடுத்த தென்னோ?" (818); இக்கெடுதியைத் தமது பாவநிலையின் மேல் .சுமத்திக் கூறும் உலக வழக்குப் பற்றியது. |
| இக்கனாத்திறம்...திடமே - இதன் காரணமும் முடியுமெல்லையும் நம்மாலறியப் படாவிடினும் இஃதொன்று மட்டும் திடம் - உறுதி - என முடித்தனர்; கனாக்கள் அவர்களையும் அவர்களனைவரையுமே பற்றி நிற்றலால் இவ்வாறு முடித்தனர். ஏகாரம் தேற்றம். |
| அடிகண்மார்க்கு மேவியதீங்கு தன்னை விளைப்பது - மேவிய தீங்காவது வரக்கடவதென்றறிவிக்கப்பட்ட தீமை; முன்கன்மத்தாற் பொருந்துவதாகிய என்ற குறிப்புமாம். அடிகண்மார் சீலமுடையராதலின் தீங்குவரக் கடவதன்று; ஆயின்முன்னை வினையால் வந்து மேவிய- பொருந்திய - என்பது குறிப்பு; மேவிய - என்று இறந்த காலத்தாற் கூறினார் உறுதி பற்றி; திடமே - உறுதியே: |
| நுகர் பேரும் பதம் - நண்பகலில் கொள்ளும் உணவு: சமணர் இரவுண்ணா மரபுடையராதலின் பகலுணவை நுகர்பெரும் பதமும் - என்றார்; உம்மை சிறப்பு; பதமும் கொள்ளாதிருத்தல் - மனவருத்தமும் கவலையும் காரணமாக வந்த நிலை. அவர் தமது சமயத்தில் வைத்த அன்பின் மிகுதி காட்டிற்று. பதம் - வீட்டுநிலை என்ற குறிப்புமாம். பதம் கொள்ளார் - வீட்டுநிலை கைக் கொள்ளார். |
| யாவது செயல் ? - தீர்வாகச் செய்யத்தக்கது இன்னதென்றறிய மாட்டாது திகைத்த நிலை: |
| 641 |
| அம்மையார்க்கும் அமைச்சனார்க்கும் நிகழும் நன்னிமித்தம் |
2540 | அவ்வகை யவர்க ளெல்லா மந்நிலை மையர்க ளாகச் சைவநன் மரபின் வந்த தடமயின் மடமென் சாயற் பைவள ராவே ரல்குற் பாண்டிமா தேவி யார்க்கும் மெய்வகை யமைச்ச னார்க்கும் விளங்குநன் னிமித்த மேன்மேல். | |
| 642 |