|
  |  |  | 
  |  | உசிவமயம்
 | 
  |  | 	  29. ஏயர்கோன் கலிக்காம நாயனார் புராணம் | 
  |  | தொகை | 
  |  |                       | "........ஏயர்கோன் கலிக்காம னடியார்க்கு         மடியேன்....." |  | 
  |  | - திருத்தொண்டத் தொகை - (5) | 
  |  | வகை | 
  |  |                       | "கொற்றத் திறலெந்தை தந்தைதன் றந்தையெங்         கூட்டமெல்லாந் தெற்றச் சடையாய்! நினதடி யேந்;திகழ் வன்றொண்டனே
 மற்றிப் பிணிதவிர்ப் பா?"னென் றுடைவா ளுருவியந்நோய்
 செற்றுத் தவிர்கலிக் காமன் குடியேயர் சீர்க்குடியே.
 |  | 
  |  | - திருத்தொண்டர் திருவந்தாதி - (35) | 
  |  | விரி | 
  | 3155 |                       | நீடு வண்புகழ்ச் சோழர்நீர்நாட்டிடை நிலவு மாடு பொன்கொழி காவிரி வடகரைக் கீழ்பால்
 ஆடு பூங்கொடி மாடநீ டியவணி நகர்தான்
 பீடு தங்கிய திருப்பெரு மங்கலப் பெயர்த்தால்.
 |  | 
  |  | 1 | 
  |  | புராணம் :- ஏயர்கோன் கலிக்காம நாயனாரது சரித வரலாறும் பண்பும் கூறும் பகுதி. இனி,   நிறுத்த முறையானே, வம்பறா வரிவண்டுச் சருக்கத்தில் இரண்டாவதாக ஏயர்கோன் கலிக்காம நாயனாரது   புராணங் கூறத் தொடங்குகின்றார். | 
  |  | தொகை:- ஏயர்கோக்குடியின் வந்த கலிக்காமனாரது அடியவர்களுக்கும் நான் அடியேனாவேன்.  ஏயர் - குடிப் பெயர். ஏயர் பெருமகன் - (881) என்ற விடத்துரைத்தவை   பார்க்க. (II. 1136.) கோன் - தலைமை குறித்து நின்றது; குடித்தலைமையும் அரசர்சேனாபதித்   தலைமையும் குறித்தது. இந்நாளிலும் சேனாபதிக்கு "மாட்சிமை தங்கிய" என்று மன்னர்க்குரிய சிதப்புடன்   கூறும் மரபு காண்க. | 
  |  | அடியார்க்கும் - உம்மை முன் துதித்த அடியார்களுடனே என்று இறந்தது தழுவிய எச்சவும்மை.   சிறப்புமாம். நம்பிகளுடன் கலிக்காமனாரது தொடர்பும் நட்பும் பின்னர்த் திருவருளால் வருவன   என்பது இச்சரிதத்துட் காண்க. கழறிற்றறிவாரது வரலாறும் இவ்வாறேயாம். இங்குத் திருவருள்   உணர்த்த முன்னுற உணர்ந்து துதித்தவாறாகும். |