| | |
| | 3166. (இ-ள்.) ஆனசெயல்....ஆற்ற - ஆயின அச்செயலை அன்பினால்விளைகின்ற மிக்க ஆசையால் மனமகிழ்ந்து செய்வதற்கு; வான முறை.....சுருங்க - மழை முறைப்படி பெய்யாமையால் பெருநிலத்தின் வளங்கள் சுருங்கியபடியினாலே; போனகம்....போதாமை - அமுதாகிய நெல்லும் பிற படித்தரங்களும் கொண்டு செலுத்துவதற்குப் போதா நிலைமையினால்; மானவழி....வருந்துவார் - மானமழிந்த கொள்கையினாலே மனமயங்கி (குண்டையூர் கிழார்) வருந்துவாராகி; |
| | 12 |
| | 3167. (இ-ள்.) வன்றொண்டர்......நினைந்து - "வன்றொண்டரது திருவாரூரின் மாளிகைக்கு நெற்படி எடுத்து உய்ப்பதற்கு இன்று குறைபாடு நேர்கின்றதே; யான் என்ன செய்வேன்!" என்று எண்ணி; துன்றுபெரும்....எய்தி - மிக்கபெருங் கவலையினால் வருந்தி; உண்ணாதே....கொள்ள - உணவு கொள்ளாமல் அன்றிரவில் துயின்றனராக; அங்கணர்வந்து அருள்புரிவார் - அங்கணராகிய சிவபெருமான் அவர்பால் வந்து அருள் செய்வாராய் : |
| | 13 |
| | 3168. (இ-ள்.) ஆரூரன்....அருளி - ஆரூரனுக்குப் படி அமைப்பதற்காக உன்னிடத்து நெல்லினைத் தந்துள்ளோம்" என்று கூறி; நீரூருஞ்.......யேவ - கங்கை தவழ்கின்ற சடைமுடியினையுடைய பெருமானார்குபேரனை ஏவியிட அதனாலே; பேரூர்...ஓங்கியது - பெரிய அவ்வூரின் எல்லை முழுதும் நெல்மலையாகிய பெருக்கம் மேகங்கள் தவழும் நீண்டவிசும்பும் மறையும்படி நிறைந்து உயர்ந்தது; ஆல் - அசை. |
| | இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
| | 14 |
| | 3166. (வி-ரை.) ஆன - ஆயின. முன் பாட்டிற் கூறலாயின; ஆக்கமான என்ற குறிப்புமாம். |
| | ஆற்ற - ஆற்றுதற்கு; ஆற்றப் - போதாமை என்று கூட்டுக. |
| | வானம் முறை வழங்காமை - வானம் - மழை; முறை - பருவ முறையாகிய நிலையும், மாதமும்மாரி என்ற நிலையும் குறித்தது; வழங்காமல் - வழங்காமையால். |
| | வளம் - உழவினால் வரும் விளைபொருள்கள். |
| | போனக நெற்படி - போனகம் - உணவு; படி - படித்தரம். |
| | நெற்படி - என்றதனால் நெல் முதலாகிய உணவுக்குரிய பண்டகங்ளெல்லாம் கொள்ளப்படும். |
| | எடுப்பதற்கு - எடுப்பித்துக் கொண்டுபோய்ச் செலுத்துவதற்கு. |
| | போதாமை - போதாமையால். |
| | மானம் அழி கொள்கை - மானம் - பெருமை. உயிர்பற்றிய கடமைகளில் கொண்ட ஊக்கமாகிய உணர்ச்சி குறித்து நின்றது. உலகர்கொள்ளும் ஏனைய பெருமைகள் பாச சம்பந்தமாதலின் ஈண்டைக்குப் பொருந்தா என்க. |
| | இயல்பின்வரும் - என்பதும் பாடம். |
| | 12 |
| | 3167. (வி-ரை.) வன்றொண்டர் - இப்பெயராற் கூறினமை பற்றி முன் 3164-ல் உரைத்தவை பார்க்க. |
| | குறை ஆகின்றது - குறை - பண்டங்களிற் குறைபாடும், அதுகாரணமாக நியதமாகக் கொண்ட செயலாற்ற இயலாமையாற் போந்தகுறைபாடும் குறித்தது. |
| | உண்ணாதே - கவலையினால் - துயில்கொள்ள - வன்றொண்டர்க்கு அமுதுபடி சமைக்கக் குறையாயினமையின் அதனைத் தமக்கு நேர்ந்த குறையென்று கொண்டு உணவு உண்ணாராயினர். உண்ணாது கிடத்தல் மனத்துயரங் காட்டும் அறிகுறி "அமுது செய்யாதே" (1561) என்றதும் ஆண்டுரைத்தவையும் பார்க்க. |