பக்கம் எண் :

378திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  உண்ட நீலக் கோல மீடறு - விடம் உண்டதனால் அது தங்கி நீலமான கழுத்து; மேலும் "கடல் விளைத்த ஆலம் இருண்ட கண்டத்தான்" (3488) என்பது காண்க. கொடியதாகிய விடத்தினை அமுதாக உண்டு கண்டத் தடக்கியது போலவே பரவையார்பாற் றூதாகிய, தாழ்வாக உலகர் கொள்ளும் இச்செயலினையும் பரமனார் மேற்கொண்டருளினர் என்ற குறிப்புப் பட இத்தன்மையாற் கூறினார். இச்செயலினைப் பற்றியே இப்புராணத்தில் ஏயர்கோன் கலிக்காமனார் வெகுண்டமையும், நம்பிகளும் பிழை யுடன்பட்டு (3541) மேற்சரிதம் விளைந்தமையும் இங்குக் கருதத்தக்கன.
  கோலமீடறு - கோலமாவது உயிர்களை உய்விக்கு அழகு; உண்ட - உண்ணுதலாலாகிய.
  ஒருவர் இருவர்க் கறிவரியார் - எண் பற்றிய சொல்லணி.
  நொக்கி - குறிக்கொண்டு.
  தூதனாராய் - "உனக்கோர் தூதனாகி" (3483) என்ற இறைவர் கூற்றுக் காண்க; ஆய் - ஆக்கச்சொல் தாமே அவ்வாறு தம்மை ஆக்கிக்கொண்டு என்ற பொருளில் வந்தது.
  தொண்டனார்தம் துயர் நீக்க - தொண்டராதலின் அவரது துயர் நீக்கும் கடப்பாடுடைமைபற்றி எனக் காரணக் குறிப்புப்பட நின்றது; அண்டர் வேண்ட ஆலமுண்டவர் தொண்டர் வேண்டத் தூதராய் வரமாட்டாரோ? என்ற நயம் பற்றி வந்ததும் காண்க.
 

331

  3486. (வி-ரை) தேவாசிரியன் முறையிருக்கும் - தேவாசிரியனிடத்துக் குறையிரந்து கிடக்கும்; முறையிருத்தல் - வரங்கிடத்தல்; "பூவார் திசைமுக னிந்திரன் பூமிசை, மாவா ழகலத்து மான்முதல் வானவர், ஓவா தெவரு நிறைந்துறைந்துள்ளது, தேவா சிரிய னெனுந்திருக் காவணம்" (137).
  வேண்டுவார் போத ஒழிந்தார் புறத்தொழிய - வேண்டுவார் - வேண்டத் தகுதியடையோர்; ஒழிந்தார் தகுதியில்லா, ஏனையோர்; போத - உடன்போக.
  ஓவா அணுக்கச் சேவகத்தில் உள்ளோர் - நீங்காது அணுகிப் பணிபுரிவோர்; பூத கணநாதர் - சிவகணத் தலைவர்கள்.
  மூவா முனிவர் - யோக சாதனையால் மூப்பில்லாத நிலைமை பெற்றவர்கள், "சந்ததமு மிளமையொ டிருக்கலாம்" (தாயுமா).
 

332

  3487. (வி-ரை) பெரியதேவர் - திருநந்தி பெருமான்; "பெரிய...தேவரைச் சென்று கொணர்கென" (வெள் - சருக். 44); சிவகணங்களுக் கெல்லாந் தலைவராதலானும், கோயில் நாயகராதலானும் இப்பெயர் பெற்றார்.
  நண்பு நிதிக்கோன் - குபேரன்; சிவபெருமானுக்குத் தோழர் எனப்படுவர். "மிததிரவச சிரவணற்கு விருப்பன் கண்டாய்" (தாண); "தனதனற் றோழா" (திருவிசைப்பா); "தனதனிற் சார்ந்தநற் றோழன்" (பேரூர்ப்புரா - பள் - பட - 37).
  பூமாரி அலைய - பூமழை பரவ; பொழிந்து; பொழியப்பட்டு.
 

333

  3488. (வி-ரை) காணாதார் - காணுதற்கரியவர்.
  காணாதார் வந்திறைஞ்சும் காலம் இது என்று அவரை அழைத்தா லென்ன - அவர்கள் முயன்றும் முன்னாக காணாதார் இங்கு எளிதில் கண்டு இறைஞ்சத்தக்க காலமிது என்று அவ்விருவரையும் அழைத்தது போலச் சிலம்பு ஒலித்தன என்பது. "திருச்சிலம் போசை ஒலிவழியே சென்று, நிருத்தனைக் கும்பிடென்றுந் தீபற" (உந்தி); திருவடியை அணுகச் செய்து உயிர்களை முத்திநெறி கூடச் செய்தல்