பக்கம் எண் :

382திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  திருந்து வருந்துபவர்; உடைய நாதன்.......எனத்துணிந்து - என்னை ஆளுடைய இறைவரது பூசையினைச் செய்யும் நெருங்கிய முப்புரிநூலினை அணிந்த மார்பினையுடைய முனிவர் போலும் வந்தழைத்தனர்?" என்று துணிந்து,
 

338

  3493. (இ-ள்) பாதி....பயமெய்தி - பிறைச்சந்திரன் வாழ்தற்கிடமாகிய சடைமுடியினை உடைய இறைவரை விளக்கமுடைய பூசனையின் பணிசெய்கின்ற முனிவர் நடு இரவில் இங்கு வந்தணைந்த காரியம் யாதோ என்று அச்சமெய்தி; பாதி.....அறியாதே - அவர் தமது திருவடிவிற் பாதியாகிய ஒரு கூற்றிலே உமையம்மையாரையுடைய பரமரே ஆவர் என்பதை யறியாமல்; பாதிமதி....திறந்தார் - அரைச்சந்திரன் போன்ற நெற்றியையுடைய பரவையாரும் பதைப்புடனே வந்து வாயிலைத் திறந்தனர்.
 

339

  இந்த இரண்டு பாட்டுக்களும் ஒரு முடிபு கொண்டன.
  3492. (வி-ரை) செறிய அடைத்த கதவமதன் முன்பு - என்க.
  செறிய - நெருங்க; நன்றாக; பிணக்கினால் எளிதிற் றிறக்க வியலாதபடி அடைத்த என்ற குறிப்பு.
  பாவாய் என்றழைத்துக் கடை திறவாய் - என்ன - என்க.
  கடை- (கதவம்) என்பது வருவிக்க; பாவாய்! அடைத்த கதவின் முன்வெளி நிற்பவர்கள் உள் இருப்போரை விளித்து உரைத்தல் பற்றி அழைத்தார்; "அஞ்சொலீர்! பலி! என்னும்" (தேவா -ஐயாறு.); "வாட்டடங்கண் மாதே" "நேரிழையாய்" (திருவா-திருவெம்.)
  நெறிமென் குழலார் - பரவையார்; நெறி - நெறித்தலாவது கருமணல் ஒழுங்கு போலச் சிறு சுருள்களுடன் தொடர்ந்து இருத்தல்; மென்மை - மெல்லிய மயிர்களுடைம உயர்ந்த இலக்கணம்.
  ஒன்றும் துயிலாது உணர்ந்து - ஒன்றும் - ஒரு சிறிதும்; காலத்துவந்து பொருந்தத்தக்க என்றலுமாம்; ஒன்றுதல் - பொருந்துதல்; துயிலாது - துயில் பெறாது; உணர்ந்து - விழித்து இருந்து.
  உடைய பெருமான் - தம்மை ஆளுடைய நாயகராகிய புற்றிடங் கொண்ட இறைவர்.
  துன்றும் புரிநூல் மணிமார்பர் - சிவ வேதியராகிய அந்தணர்.
  போலும் அழைத்தார் போலும் - முழுதும் துணிவு பெறாத நிலை; அதன் காரணம் வரும் பாட்டிற் கூறுவது காண்க; உயர்ந்த நிலையில் உள்ள அவர், காலமும் இடமும் தகாத நிலையில் வந்தமை ஐயப்பாட்டின் துணிவு பெறாமைக்குக் காரணம்.
  துணிந்து - அழைத்தவர் இன்னார் என்பதை மட்டில் துணிந்து; ஏனைக் காரணம் முதலியவை துணியாமை மேற்காண்க.
  பாவா யென்றழைப்ப - நெறித்துச் சுழல் மென் குழலாரும் - என்பதும் பாடம்.
 

338

  3493. (வி-ரை) பாதிமதி - முதிராத இளம்பிறை; பாதி - வளர்ச்சிக் குறையுடைய என்ற மட்டில் பொருள் தந்து நின்றது.
  பயில் பூசனையின் பணி - பயில் - விளங்கும்; சிறந்த பிறப்பினின்றும் பழகிய என்ற குறிப்புமாம்.
  இன் - பூசனையாகிய இனிய பணி; இனிமை - தமக்கும் உலகுக்கும் வீடுபேறாகிய பயன் தருதல்.