| | என்னை....என்ன - என்னையாளுடைய நாயகராகிய இறைவரே (சிவபெருமானே) இங்கு நேரில் எழுந்தருளி வந்தாற்போல; என்ன - போல; உவம உருபு; அருச்சிக்கும் முனிவர்வந்தது இறைவரே வந்தருளியது போலாம் என்க. அருச்சகரையே இறைவராகக் கொண்டு வணங்கும் மரபும் குறிப்பு. என்ன - என்ற உண்மைக் குறிப்பு உட்பெற என்றுரைக்க நின்றமையும் காண்க. |
| | எய்த வேண்டிற்று என்? -இங்கு வரவேண்டிய காரணம் என்ன? வேண்டிற்று - வேண்டும் குறை. |
| | என்றார் - என்று வினவினார். விடுத்த தூதர் - மார்பர் - என்பனவும் பாடங்கள். |
| | 340 |
| | வேறு |
| 3495 | கங்கைநீர் காந்த வேணி கரந்தவ ரருளிச் செய்வார் "நங்கை நீ மறாது செய்யி னான்வந்த துரைப்ப" தென்ன, அங்கயல் விழியி னாரு "மதனைநீ ரருளிச் செய்தால் இங்கெனக் கிசையு மாகி லிசையலா" மென்று சொல்லி. | |
| | 341 |
| 3496 | "என்னினைந் தணைந்த தென்பா லின்னதென் றருளிச் செய்தால் பின்னைய தியலு மாகிலா" மெனப், பிரானார் தாமும் "மின்னிடை மடவாய்! நம்பி வரவிங்கு வேண்டு"மென்ன, நன்னுத லாருஞ் சால நன்று!நம் பெருமை" யென்பார், | |
| | 342 |
| 3497 | "பங்குனித் திருநா ளுக்குப் பண்டுபோல வருவா ராகி யிங்கெனைப் பிரிந்து போகி யொற்றியூ ரெய்தி யங்கே சங்கிலித் தொடக்குண் டாருக் கிங்கொரு சார்வுண் டோ?நீர் கங்குலின் வந்து சொன்ன காரிய மழகி" தென்றார். | |
| | 343 |
| | 3495. (இ-ள்) கங்கை நீர்....அருளிச் செய்வார் - கங்கை யாற்றுப் பெருக்கினைக் கரந்துள்வைத்த சடையினை மறைத்து வந்த இறைவர் அருளிச் செய்வாராகி; நங்கை....என்ன - நங்கையே! நீ மறுக்காமல் அதனுக் கிணங்குதல் செய்வாயாகில் நான் வந்த செய்தியினை உரைக்கலாம் என்று கூற; அங்கயல்...சொல்லி - அழகிய கயல்மீன் போலும் கண்களை உடைய பரவையாரும் அதனை நீர் இன்னதென்று முன்னர் அருளிச் செய்தீரானால் ஈண்டு அஃது எனக்கு இசைவதே யாகில் இணங்குதல் கூடும்" என்று கூறி, |
| | 341 |
| | 3496. (இ-ள்) என் நினைந்து ......ஆம் என - என்னிடம் எதை எண்ணித் தேவரீர் அணைந்தது என்று அருளிச் செய்யின் அதன் மேல் அஃது இயல்வதேயாயின் என்னால் ஆகும் என்று கூற; பிரானார் .....என்ன - இறைவனாரும் மின் போன்ற இடையினை உடைய பெண்ணே! இங்கு நம்பி வர வேண்டுவதேயாம் என்று சொல்ல; நன்னுதலாரும்......என்பார் - அது கேட்டுப் பரவையாரும் மிகவும் நன்று; நமது பெருமை இருந்தவாறு என்பாராய். |
| | 342 |
| | 3497. (இ-ள்) பங்குனி....வருவாராகி பங்குனித் திருவிழாவுக்காக வழக்கம் போல மீண்டு வருவாராகி; இங்கெனைப் பிரிந்து போகி - இங்கு என்னைவிட்டுப் பிரிந்து சென்று; ஒற்றியூர்....சார்வுண்டோ? திருவொற்றியூரினைச் சார்ந்து அங்கே சங்கிலித் தொடக்கினாலே பிணைக்கப்பட்ட அவருக்கு இங்கு வருவதற்கு ஏற்ற சார் |