| | கருமம் ஈதாக - இஃதும் ஒரு செய் தொழிலாகக் கொண்டு இழிவு சிறப்பும்மை தொக்கது; மீதாக - என்று கொண்டு இதனை ஒரு மேம்பட்ட செயலாக வைத்து என்றலுமாம். |
| | இக்கடைத்தலை - இவ்வாயிலின் கண்; கண் - ஏழனுருபு. வாயிலினின்றவாறே இப் பேச்சுக்கள் நிகழ்ந்தன என்பது குறிப்பு; வீட்டினையே இவ்வாயில் என்றார் என்பதுமாம். |
| | மற்றும் - மேலும்; உம்பெருமை - உடைய பெருமானது பூசனை செய்யும்அருச்சகராகிய உமது பெருமை; திருவாரூர்ப் புற்றிடங் கொண்ட பெருமானை அருச்சிக்கப் பெற்ற பிறவி பெரும் பேறுடையது என்பதாம்; அஃதன்றியும் முப்போதுந் திருமேனி தீண்டுவாராயும், திருவாரூர்ப் பிறந்தாராயும் உள்ள பல சிறப்புக்களையும் குறித்தது. மற்று உம் பெருமை - மேற்கொண்ட இவ்வேடமேயன்றி அதனுள் மறைந்துள்ள உமது உண்மை நிலையின் பெருமை என்றதும் குறிப்பு. |
| | ஒற்றியூர் உறுதி பெற்றார் - உறுதி - நிலைபேறான தன்மை; சங்கிலியார் திருமணமும் சபதமும் குறித்தது;மணம் பற்றித் தொடர்ந்த இல்வாழ்க்கைத் தன்மை. |
| | உறுதி பெற்றார்வருவதற் கிசையேன் - உறுதி பெற்றமையால் - பெற்றாராதலின் எனக் காரணக் குறிப்புடன் நின்றது. |
| | நீரும் போம் - மீக்கொண்ட வெகுளிக்குறிப்பு. |
| | கரும மீதாகில் - வருதல் நுத்தம் - என்பனவும் பாடங்கள். |
| | 345 |
| 3500 | நம்பர்தா மதனைக் கேட்டு நகையுமுட் கொண்டு மெய்ம்மைத் தம்பரி சறியக் காட்டார் தனிப்பெருந் தோழ னார்தம் வெம்புறு வேட்கை காணுந் திருவிளை யாட்டின் மேவி வம்பலர் குழலி னார்தா மறுத்ததே கொண்டு மீண்டார். | |
| | 346 |
| | (இ-ள்) நம்பர்தாம்....காட்டார் - இறைவனார் அம்மாற்றத்தினைக் கேட்டுச் சிரிப்பினையும் உள்வைத்து, தமது மெய்யாகிய பரிசினை அவர் அறியும்படி வெளிக்காட்டாராகி; தனி...மேவி - தமது ஒப்பற்ற பெருந் தோழராகிய நம்பியினது மனம் வெதும்பும் வேட்கையினைக் காணுகின்ற திருவிளையாட்டினை மேற்கொண்டு; வம்பலர்.....மீண்டார் - மணம் கமழ்கின்ற கூந்தலையுடைய பரவையார் மறுத்துரைத்த அம்மொழியினையே ஏற்றுக்கொண்டு மீண்டருளினர். |
| | (வி-ரை) நகையும் உட்கொண்டு - தம்மை அறிந்து கொள்ளாத நிலையிற் பரவையார் மொழிந்தது கண்டு போந்த சிரிப்பினை வெளிக்காட்டாது. |
| | தம் மெய்ம்மைப்பரிசு - என்க; "தாமாந்தன்மை" (3515); அறியக்காட்டார் - "காண்பாரார் கண்ணுதலாய் காட்டாக் காலே" (தேவா) என்றபடி இறைவர் நேரே, வெளிப்பட்டு எழுந்தருளி நின்றாலும், அவர், தம்மை அறியக் காட்டினாலன்றி உயிர்கள் அவரை அறியும் ஆற்றலில்லையாதல் பின்னர்க் காட்ட நிற்பது மேற்காண்க. காட்டாமைக்குக் காரணம் திருவிளையாட்டென மேற்கூறுதலும் காண்க. |
| | தனிப் பெரும் தோழனார் - நம்பிகள் தோழனாராதலின் வேட்கைகாண என்க. விளையாட்டின் மேவி - விளையாட்டினை விரும்பி; மேவுதல் - விரும்புதல். |
| | வேட்கை காணுதலாவது - வேட்கை மிகுதியான் வரும் நிலையினையும் வெளிப்படும் சொற்களையும் கண்டும் கேட்கும் நுகர்தல். |
| | மறுத்ததே கொண்டு - மறுதலித்த அச்சொல்லையே முடிபாக எடுத்துக் கொண்டு. |
| | 346 |