| | வெண்பா) என்றவிடத்து எமது மாதவச் சிவஞான முனிவர் சிற்றுரையில் உரைத்தவை பார்க்க. "மதிநுதற் பரவையாரும்" (3513) என்று முன் உரைத்த குறிப்பும் காண்க. |
| | உரிமையால் ஊரண் ஏவ - உரிமை - தம்பிரான் றோழர் என்ற உரிமை; பாங்கற் கூட்டம் என்ற அகப்பொருட் பகுதிகளை ஒப்பு நோக்குக. ஊரன் -நம்பியாரூரன்; ஏவ - ஏவியதனால்; தமது எளிவரும் தன்மை குறித்தபடி. |
| | மீளவும் உன்பால் வந்தோம் - "நீரும்போம்" (3499) என மறுத்துப் போக்கிய பின்னும் உன்பால் வருதல் தகுதி யன்றாயினும் முன்வந்தது போலவே மீளவும் வந்தோம் என உம்மை இறந்தது தழுவியது; ஏவ - அவ்வாறு வந்ததற்குக் காரணம் கூறியபடி; உன்பால் - உன் தகுதியும் நோக்கி என்ற குறிப்பும் தருவது. |
| | முருகலர் சூழலாய்! - இயற்கை மணமுடைய கூந்தல் என்றது; பெண்களில் உத்தம விலக்கண முடையார்க்கு இயைவது; "அரிவை கூந்தலி னறியவு முளவோநீ யறியும் பூவே" (குறுந்); இதனால் குணமேன்மையும் குறித்தபடி; முன்புபோல் மறாது இசைவதற்குரிய தகுதி குறித்தவாறாம். |
| | முன்புபோல் மறாதே - இதனாலும், மீளவும் வந்தோம் என்றதனாலும், முன்னர் வந்தவர் தாமேயாம் என்று குறிப்பா லுணர்த்தியவாறு; மேல் இக்கருத் துணர்ந்தே "முன் எய்திய நீரோ?" (3519) என்று பரவையார் வினவியதும் காண்க. |
| | பிரிவுற வருந்துகின்றாள் - பிரிவு உற - பிரிவு என்னும் நிலை உற்றதனாலே என்று காரணப் பொருளில் வந்தது; பிறவுற்றமையால்; நின்பாற் பிரிவுற என்றும், நின்பால் வரப்பெற வேண்டும் என்றும் ஈரிடத்தும் கூட்டியுரைக்க வைத்த நயம் காண்க. "அணியிழை, தன்னோய்க்குத் தானே மருந்து" (குறள்) என்ற உண்மை புலப்பட வைத்த கவிநயமும் கண்டுகளிக்க. |
| | வரப்பெற வேண்டும் - வரப்பெறுதலை நீ இசைதல் வேண்டும் என்க; பெற - பெறுதலின் இசைவு. |
| | வருந்துகின்றான் - வருந்துகின்றானாகிய நம்பி என வினைப் பெயர். |
| | 364 |
| 3519 | பெருந்தடங் கண்ணி னாரும் பிரான்முன்பு மிகவு மஞ்சி வருந்திய வுள்ளத் தோடு மலர்க்கரங் குழன்மேற் கொண்டே "அருந்திரு மறையோ ராகி யணைந்தீர்முன் னடியேன் செய்த இருந்தவப் பயனா மென்ன வெய்திய நீரோ? வென்பார், | |
| | 365 |
| 3520 | துளிவளர் கண்ணீர் வாரத் தொழுதுவிண் ணப்பஞ் செய்வார் "ஒளிவளர் செய்ய பாதம் வருந்தவோ ரிரவு மாறா தளிவரு மன்பர்க் காக வங்கொடிங் குழல்வீ ராகி எளிவரு வீரு மானா லென்செய்கே னிசையா" தென்றார். | |
| | 366 |
| | 3519. (இ-ள்) பெருந்தடம் கண்ணினாரும்....கொண்டே - பெரிய விசாலமாகிய கண்களையுடைய பரவையாரும் இறைவர் முன்பு மிகவும் அச்சங்கொண்டு வருத்தம் பொருந்திய வுள்ளத்துடனே மலர் போன்ற கைகளைக் கூந்தலின் மேலே கூப்பிப்கொண்டே; அடியேன் செய்த....நீரோ - அடியேன் முன்னையிற் செய்த பெரிய தவத்தின் பயன்போல இப்பொழுது எழுந்தருளிய தேவரீரோ?; முன் - முன்பு; அருந்திரு....அணைந்தீர் - அரிய திருமறை முனிவராகிய அருச்சகர் கோலத்துடன் எழுந்தருளினீர்?; என்பார் - என்று சொல்வாராய்; |
| | 365 |