பக்கம் எண் :

408திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  செற்றம் - புலவி காரணமாக வந்த சினம்; "செற்ற நிலைமை" (3472).
 

372

  3527. (வி-ரை.) நந்திபிரானார் - நந்தி - இறைவரது திருநாமங்களுள் ஒன்று; உயிர்களின் வினைத்துயரை நந்துறல் (குறைத்தல் - ஒழித்தல்) செய்பவன்; இங்கு நம்பிகளது துன்பமுழுதும் ஒழித்தமை குறிக்க இப்பெயராற் கூறினார்; இப்பெயர், இறைவரது கோயில் நாயகரும், அவரால் முதல் உபதேசம் பெற்றவரும், நம் குரு மரபுக்கெல்லாம் முதற் குருவுமாக உள்ளமையால் திருநந்தி தேவருக்கு வழங்கலாயிற்று
  ஆர்வம் கூர்களி - ஆர்வம் மிகுதலினால் வரும் களிப்பு.
  பந்தமும் வீடும் நீர் அருள் செய்யும்படி - தகுதிக்கேற்ப உயிர்களுக்குப் பிறவியும் வீடும் நீரே தருகின்ற முறைமைப்படி; "பந்தமு மாய்வீடு மாயினாருக்கு" "பந்தமும் வீடும் படைப்போன் காண்க" (திருவா); இவையே ஐந்தொழிற் பெருங் கூத்தை உணர்த்துவன; "பந்தம் வீடு தரும்பர மன்கழல்" (300) என இக்கருத்தையே முன்னரும் பரவையாரைப் பற்றிய நிலையினும் உரைத்தது காண்க. ஆண்டுரைத்தவை பார்க்க.
  செய்யும்படி செய்தீர் - படி - உவம உருபு. உயிர்களுக்கு பந்தமும் வீடும் தருவது போலவே என்பால் முன்னர்த் துன்பமும் இப்பொழுது அதினின்றும் விடுதி பெறும் இன்பமும் செய்தீர்; பந்தம் - துன்பம்; வீடு - இன்பம்; எல்லாம் உமது செயலே என்று போற்றிய நிலை.
  இனி என்பால் இடர் என்? என்க; வினா, இன்மை குறித்தது.
 

373

3528
ன்றடி வீழு நண்பர்தம் மன்புக் கெளிவந்தார்
"சென்றணை நீயச் சேயிழை பா"லென் றருள்செய்து
வென்றுயர் சேமேல் வீதி விடங்கப் பெருமாடம்
பொன்றிகழ் வாயிற் கோயில் புகுந்தார் புவிவாழ.
 

374

  (இ-ள்) என்றடி....எளிவந்தார் - முன் கூறியவாறு சொல்லித் தமது திருவடியில் வீழ்ந்த நண்பராகிய நம்பியினது அன்புக்கு எளிமையாய் வந்த இறைவர்; சென்றணை....அருள் செய்து -" நீ அந்தப் பரவையி னிடம் சென்று சேர்வாயாக" என்று அருளிச் செய்து; வீதிவிடங்கப் பெருமான்தாம்- அந்த வீதிவிடங்கப் பெருமானாகிய தியாகேசர்; வென்றுயர் சேமேல் - வெற்றி பொருந்திய மேன்மையுடைய இடபத்தின் மேலே எழுந்தருளி; பொன்திகழ்.....புலிவாழ - பொன் விளங்கும் திருவாயிலினையுடைய தமது திருப் பூங்கோயிலினுள்ளே உலகம் வாழும்படி புகுந்தருளினர்.
  (வி-ரை) என்று - முன் (3527) கூறியவாறு சொல்லி.
  நண்பர் - நம்பிகள்; நண்பு - தோழமை; பற்றியே தூது சென்றாராதலின் அக்குறிப்புப்படக் கூறியவாறு; "உரிமையர லூர னேவ" (3518).
  அச்சேயிழை - "என்னுயிர் காவா திடர்செய்யும் கொம்பனையாள்" (3526) என்று நீ கொண்ட அந்த என முன்னறிசுட்டு; நீ நம்மை விரும்பி வேண்டிய அந்த; உனக் கினியளாய் "முல்லை முகைவெண் ணகைப்பாவை" முன் கூறிய அந்த என்று உரைப்பனவுமாம்.