| 3539. (இ-ள்) காரிகை....என்று - ஒரு பெண்ணினிடத்துச் சாரும் காதல் காரணமாக ஒருவன் ஏவியதனால் அதற்குட்பட்டு நிலத்தின் மேல் நடந்து சென்று செம்மையாகிய திருவடித் தாமரைகள் நோம்படி, தேர் செல்லும் அணிவீதியின் வழியே போவதும் வருவதுமாகி ஒரு இரவு முழுமையும் ஒப்பற்ற ஆண்டவர் தூதாக உழல்வாராம்! என்று கூறி, |
| 385 |
| 3540. (இ-ள்) நம்பர்...நண்ணினாரேல் - இறைவர் தாம் அடியார் துன்பம் பொறாது எழுந்தருளி வந்தாராகில்; உம்பரார் கோனும்...ஏவப் பெறுவதே - தேவராசனாகிய இந்திரனும் விட்டுணுவும் பிரமனும் நேர் உணரவும் இயலாதவராகிய எமது பெருமான் அவ்வாறிசைந்து வந்தாலும் ஏவுதல் செய்யலாமோ?; இதனுக்கு...எந்நாள் என்று - இப்பாவச் செயலுக்கு மனநடுங்காதவனை என் முன்னே காணும் நாளும் எந்நாளோ? என்று சொல்லி; |
| 386 |
| 3541. (இ-ள்) "அரிவை...என்னாங் கொல்" என்று - பெண்ணின் பொருட்டு ஆளுடைய பரமசிவனை இரவிலே தூது செல்லும்படி ஏவி அங்கே இருந்தவனை என் எதிர்வரக் காண்பேனாகில் என்ன விளைந்துவிடுமோ? என்று; விரவிய....உள்ளத்தராகி - மூண்ட சினத்தினாலே வெடிப்பது போன்று விம்மும் உள்ளத்தினை யுடையாராகி; |
| 387 |
| 3542. (இ-ள்) ஈறிலா...கேட்டு - எல்லையில்லாத புகழுடனே ஓங்கும் ஏயர்கோன் கலிக்காமருடைய இவ்வாறு எண்ணப்படுவதாகிய இப்பேற்றினைத் தமக்குரிமையாகப் பெற்ற நம்பிகள் இதனைக் கேட்டு; பிழை உடன்படுவாராகி - தாம் செய்தது பிழை என்று உடன்படுவாராய்; வேறு இனி...வேண்டுவார் - இனி இதற்கு வேறாகத் தீர்வுதன்னை வேண்டுவாராய்; விரிபூங் கொன்றை....விண்ணப்பஞ் செய்து - விரிந்த அழகிய கொன்றையினையும் கங்கையினையும் அணிந்து கொண்ட சடையினையுடைய சிவபெருமானிடம் அதனை விண்ணப்பஞ் செய்து, |
| 388 |
| 3543. (இ-ள்) நாடொறும் பணிந்து போற்ற - நாள்தோறும் வணங்கித் துதிக்க; நாதரும்...புரிவார் - இறைவரும் அதனைத் திருவுளங் கொண்டு அன்பினால் நீடிய தொண்டர்களிருவரும் தம்முள் நண்பு பூண்டு பொருந்தும் நீர்மையினைக் கூடுமாறு அருள் செய்வாராய்; ஏயர் குரிசிலார்.....வருந்துமாற்றால் - ஏயர் கோனார்பால் அவர் திருமேனி வாடும்படி வருந்தச் செய்யும் வழியினாலே சூலைநோயினை அருளிச் செய்தனர். |
| 389 |
| இவ்வெட்டுப்பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3536. (வி-ரை) ஆரணக் கமலக் கோயில் - ஆரணம் - வேதம். "வேத மூலம் வெளிப்படு மேதினிக், காதன் மங்கை யிதய கமலமரம்" (43) என்ற கருத்து;ஆண்டுரைத்தவை பார்க்க. |
| கமலக் கோயில் - பூங்கோயில்; வேதம் புகழும் கமலாலயம் என்பர் முன் உரைகாரர். |
| ஆண்ட - ஆட்சிபுரிகின்ற; "ஆரூராண்ட அயிரா வணமே" (தேவா). |
| நீரந்தரம் - பணிந்து போற்றி - சாத்தி - எப்போதும்; வழிபடுங் காலமெல்லாம்; முன்னரும் "தன்னையா ளுடையபிரான் சரணார விந்தமலர், சென்னியினுஞ் சிந்தையினு மலர்வித்து....சாத்தி" (328) என்ற நிலை காண்க. |
| நாளில் - அக்காலத்தில் மேல்வரும் நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன; அவையாவன; என்க. |
| 382 |