[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 29. ஏயர்கோன்கலிக்காம நாயனார் புராணமும் உரையும் | 453 |
| சபதம் பிழைத்தல் - கண் மறைதல் | | கவே பல காலங்கள் வந்து கழிந்தன. அந்நாளில் தென்றல் வந்துலவி வசந்த காலத்தினை நம்பிகளுக்கு நினைவூட்டிற்று. திருவாரூரிலே வீதிவிடங்கப்பெருமான் வசந்த விழாக் கொண்டருளுதலும் அத்திருக்வோலக்கத்தினிடையே பரவையார் பாடலாடல்புரிவதும் கண்ணின்முன் நேரே கண்டார்போலக் கருதி, "அப்பெருமானை மறந்திருந்தேன்" என்று ஏசறவினாலே மனமழிந்து "பத்திமையும் அடிமையையும்" என்று எடுத்து, "எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூரிறைவனையே" என்ற குறிப்புடன் திருப்பதிகம் பாடினார் . பின் ஒருநாள் திருவாரூரை மிக நினைந்து திருவொற்றியூரினை அகலப் புக்கனர். தாம்செய்த சபதம் பிழைத்தமையால் கண்களிரண்டும் மறைந்தன. மூர்ச்சித்து மேற்செய்வதறியாது, "அழுக்கு மெய்கொடு" என்று தொடங்கிக் குற்றத்தீர்வு வேண்டித் திருவொற்றியூரிறை வரைப் பாடினார். அங்கு இறைவர் செய்யும் அருளதுவேயாகக் கைகுவித்துத் தொழுது திருவாரூரை நோக்கி, வழிக்கொள்வாராயினர். உடன்போதுவார்கள் வழி காட்டச் சென்று திருமுல்லைவாயிலை யடைந்து, "கொண்ட வெந்துயர்களைக" எனப்பரவி வழிக்கொண்டு திருவெண்பாக்கத்தினை அணைந்து கோயிலின் முன் நின்று தொழுது, இறைவரைக் "கோயிலுளீரே?" என்று வினவித் துதிக்க, ஊன்றுகோல் ஒன்றருளி "உளோம் போகீர்" என்றருளப் பெற்று வழிக்கொண்டு சென்று திருவாலங்காட்டினை வணங்கித் துதித்து, திருக்காஞ்சிமாநகர மணைந்தனர். | | இடது கண் பெற்றமை | | அங்கு அறப்பெருஞ் செல்வக் காமக்கோட்டத்தில் எல்லாவுயிர்களுக்கும் கருணை புரிந்து அறம் வளர்க்கும் அம்மையை வணங்கித், திரு ஏகாம்பரத்தினை அணைந்து அம்மை அருச்சித்த திருவடிகளை வேண்டித் துதிக்க அம்மைதழுவக் குழைந்த அப்பெருமான், நம்பிகளுக்கு மறைந்த இடக்கண் கொடுத்துத் தமது கோலங்காட்டி யருளினர். நம்பிகள் மிக மகிழ்ந்து "எம்மானைக் காணக்கண் அடியேன் பெற்றவாறே"என்று பாடித் திளைத்து இன்புற்று அங்கு அமர்ந்திருந்தனர். அங்கு இறைவர் செய்யும் அருள் அதுவாக, அங்கு நின்றும் திருவாரூரினை நோக்கி "எந்தை பெருமானாரூர் என்று கொல் எய்துவதே"என்று துதித்துக் கொண்டு, அதனை நோக்கி வழிக்கொள்வாராய்ச் சென்று, திருவாமாத்தூர், திருநெல்வாயி லரத்துறை, திருவாவடுதுறை பணிந்து, திருத்துருத்தியினை அணைந்தனர். | | திருத்துருத்தி - புதியபிணி நீங்குதல் | | அங்கு இறைவரை வணங்கித், தம்மேல் வந்த புதிய பிணி நீங்குமாறு இறைவரை வேண்ட, அவரது ஆணையின்படி வேறாக வடகுளத்துக் குளித்து அக்கணமே பிணிநீங்கப்பெற்று மணியொளிசேர் திருமேனிபெற்று விளங்கினார். | | அங்கு நின்றும் போந்து பல பதிகளையும் வணங்கிச்சென்று திருவாரூர்முன் தோன்றக் காண்கின்றார், அதனை ஒருகண் நோக்கினாற்கண்டு, மனம் ஆராது நிலத்தில் வீழ்ந்து நெடிதுயிர்த்து வணங்கி, மயங்கு மாலை நேரத்தில் திருவாரூரினுள் அணைந்து திருப்பரவையுண் மண்டளியில் தூவாய்நாயகரைப் பணிந்து பாடிப்போந்து, வேறிருந்து தொண்டருடன் கூடித் திருமூலட்டானத்துள் இடைதெரிந்து திருவத்தயாமத்தில் இறைஞ்சுதற்காக வந்தணைந்து, காதல்புரி கைக்கிளையால் அன்பரெதிர்"குருகுபாய" என்று ஏசறவினாலே பதிகம் பாடிவந்து, திருத்தேவாசிரியனையும் பூங்கோயிலினையும் வணங்கி எழுந்து உட்புக்கு, ஒரு கண்ணாற்கண்ட காட்சியாலாராமல் மனமழிந்து பருகா இன் அமுதத்தைக் கண்களாற் பருகுதற்குமற்றக் கண்ணை |
|
|
|
|