| ஆற்றுப்படுத்திப் பதிகம் பாடியருளியது நம்பிகளது பெருங்கருணைத் திறத்தினையும் பரமாசாரியாராம் தன்மையினையும் புலப்படுத்துவதாம். (3205) |
| 11. ஒருவனிடமிருந்து கைநழுவிப்போன பொருள்களையும் சிவனுக்காக (சிவார்ப்பணம்) என்று எண்ணுதல் வேண்டுமென்பதும், அவ்வாறு எண்ணினால் அதனை இறைவர் ஏற்றருளுவர் என்பதும் ஆன்றோர் மரபு. உறையூர்ச்சோழர் காவிரியில் நீராடும்போது முத்து ஆரம் நழுவிவிட, அதனைச் சிவனுக்காக என்றெண்ணினார். அது திருமஞ்சனக் குடத்துட் புகுந்து சிவன் முடியில் வீழ இறைவர் அதனைச் சாத்திக்கொண்டருளினர் என்ற வரலாற்றினை நம்பிகள் பதிகத்துள் வைத்துப் போற்றி, இவ் வுண்மையினைக் கண்டொழுகி உய்யும்படி உலகுக் குபதேசித் தருளினர். (3231) |
| 12. திருப்பாச்சிலாச்சிராமத்தில் தாம் நினைந்த பொருளினை இறைவர் தாராது தாழ்க்கத், தொண்டர் முகப்பே முறைப்பாடு உரைப்பார்போல் நம்பிகள் எத்தனை யருளா தொழியினும் பிரானா ரிவரல்லா தில்லையே? என்று தோழமைத் திறத்தாற் பாடிய நம்பிகளின் மொழியினை உகந்து பொருள் தந்தருளியமை இறைவரது அடியார்க் கெளிவரும் பெருங்கருணைத் திறம். (3235) |
| 13. நான் மறக்கினும் எண்ணிய நாவே இடையறா தின்சுவை பெருக நாம அஞ்செழுத்தினை யென்றும் இயம்பும் என்றிதனைத் திண்ணிய உணர்விற் கொண்டு திருப்பதிகம் அருளினர் நம்பிகள். இவ்வாறு மனங் கலவாதபோதும் புறக் கருவி கரணங்கள் சிவன்பா லீடுபடுதல் இடையறாத நீண்ட பழக்கத்தாலும் தவமுயற்சியாலுமே வருவதாம். இத்தன்மை வரப் பழகுதல் பெரு நன்மை தரும். (3241) |
| 14. சிவனையே எண்ணியிருப்பவர்கள் செய்யத்தக்க காரியங்களெவற்றை யேனும் மறப்பினும் சிவனே உண்ணின்று நினைவூட்டி அவற்றை நிகழ்விப்பன் (3226). "அன்னே உன்னையல்லா லினி யாரை நினைக்கேனே" "வாழ்கொளி புத்தூர் மாணிக்கத்தை மறந் தென்னினைக் கேனே", "நீடு ரானைப் பணியா விடலாமே", "அடிகளிவ் வழிபோந்த அதிசய மறியேனே" (தேவா). |
| 15. தில்லை மன்றுணின்றாடனீடிய கோலத்தினைத் திருப்பேரூரில் நம்பிகளுக்கு இறைவர் நேர்காட்டி யருளக் கண்டனர். இவ்வாறு இறைவர் காட்டிடக் காணும்போது வருவது ஐம்புலனிற் புலப்படாத பேரின்பத்துடன் புணரும் மெய்யுணர்வாம். (3244) |
| 16. நம்பிகள் திருமுதுகுன்றத்தினிற் பெற்ற 12000 பொன்னையும் திரு மணி முத்தாற்றினி லிட்டுத் திருவாரூர்க் குளத்தினின் அங்குள்ளோர் மருளுற வியப்ப அங்கேவரப் பெறவேண்டும் என்று வேண்டி அவ்வாறே பெற்றனர். இது திருவருட் செயல். எங்கும் நிறைந்த எல்லாம் வல்ல பரம்பொருள் தமது ஆட்பாலவர்கட்கருளும் வண்ணங்களைச் சோதிக்கவேண்டா என்பது கட்டளை, இங்குநின்ற பொருளை அங்குத் தருவதும், இங்கு நிகழ் ஒளி, ஒலி, யிவைகளை அங்குக் காட்டுவதும் இவ்வுலகத்தில் மனிதனின் சிற்றறிவின் சிறு அமைப்புக்களாலே கூடுமாறு காண்கின்றோமானால் பேரறிவின் அமைப்புக்களில் எதுதான் கூடாது! ஆற்றினிலிட்டுக் குளத்தினிற்றேடினாற்போல என்னும் பழமொழியின் கருத்தும் காண்க. |
| 17. திருக்குருகாவூரில் வழி நீர்வேட்கையுடன் பசியாலும் மிக வருந்தி நம்பிகள் அணையும்போது, இறையவர் மறையவராய் வந்து பொதிசோறும் தண்ணீரும் கொண்டு வழிச்சார்ந்திருந்து நம்பிகளையும் அருகணைந்தாரையும் ஊட்டி மறைந் |