பக்கம் எண் :

468திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  கிடமாகிய விந்த மலையினையும் நிலைபெற்ற சீபர்ப்பத மலையினையும் வணங்கி; திங்களணி....சேர்ந்தார் - பிறையினைச் சூடிய சடையினையுடைய இறைவரது திருக்காளத்தி மலையினைச் சேர்ந்தனர்.
  (வி-ரை) கங்கை நீள் துறை - "அகன் றுறை நீர் அருங்கரை" (3566) என முன்கூறியதை அனுவதித்தார்; நீள் - பெருமையினால் மிகும் என்று கொண்டு விசுவநாதர் சந்நிதிக்கெதிரில் உள்ள மணிகர்ணிகைத் துறையினைக் குறிப்பால் உணர்த்தியதாகக் கொள்வதுமாம்.
  கரு துறை நீள் கடல் ஏற்றும் - கரு துறை - பிறவியாகிய இறங்குமிடம்; கரு - பிறவி; ஏறுதற் கருமை நோக்கி நீள் கடல் என்றார்; ஏற்றுதல் - கரை ஏற்றுதல். "நீள்சென் மக்கட லிடையிற்புக் கலையார்" (திருநா - ஏகாதசமாலை-4); "காசியினிறக்கமுத்தி" என்னும் பொருட்குறிப்பு.
  அவிமுத்தம் - காசி; முத்தம் - நீங்குதல்; வி - சிறப்புக்குறிக்கும் முன் ஒட்டுமொழி; நாயகன் - விநாயகன்; நாசம் - விநாசம்; என்புழிப்போல; விமுத்தம் - விசேடமான நீங்குதல்; அகரம் எதிர்மறை விகுதி. பிறவிப் பெருங்கடலுள் புகும் நீங்குதலை இல்லாமை செய்வது என்ற குறிப்பும் காண்க.
  அவிமுத்தம் - நீங்கவேண்டிய காலத்தும் நீங்காமை; தவஞ்செய்த பிரம தேவர்பால் காசியின் அரசுரிமை பெற்ற தீவோதானன் என்னும் அரசன்,அப்பகுதியில் தேவர்கள் வசிக்கலாகாதென்று வரம் பெற்று ஆண்டுகொண்டிருக்க,அவ்வரம் பொய்க்காதபடி சிவபெருமான் அங்கு அவ்வுருவமாக வீற்றிருந்தருளினார் என்றும்,அதனால் அவிமுத்தம் எனப்பெயர் பெற்றதென்றும்,தலமான்மியம் கூறும்.
  விந்த வரை - என்க. மங்குதல் வளர் - மேகமண்டலம்வரை நீண்ட உயர்ச்சி குறித்தது; விந்தமும் பருப்பதமும் என எண்ணும்மை விரிக்க; மன்னுதல் - சிவபெருமான் என்றும் நந்தியாகிய அம்மலையின்மீது நிலையாக வீற்றிருத்தல்; பருப்பதம் - சீசைலம், சீபர்ப்பதம் என்ப. தலவிசேடம் பதிகத்தின் கீழ்க்காண்க.
  திங்களணி சடையர் -"திங்கள்சேர் சடையார்" (753); அணி - கண்ணியாகச் சூடிய.
  சடைமுடியார் காளத்தி - என்பதும் பாடம்.
 

4

3568
நீடுதிருக் காளத்தி நிலவுதா ணுவைவணங்கி
ஆடுதிரு வரங்கான வாலவனந் தொழுதேத்தித்
தேடுமிரு வர்க்கரியார் திருவேகாம் பரம்பணிந்து
மாடுயர்மா மதிற்காஞ்சி வளநகரின் வைகினார்.
 

5

  (இ-ள்) நீடு....வணங்கி - நீடும் திருக்காளத்தி மலையிலே நிலைபெற்று விளங்கும் தாணுலாகிய சிவபெருமானை வணங்கி; ஆடு....ஏத்தி - இறைவர் அருட்கூத்தியற்றும் திருமன்றங்களுள் ஒன்றாகிய திருவாலங்காடு என்ற பதியினைத் தொழுது துதித்து; தேடும்....பணிந்து - கீழும் மேலுமாகத் தேடிய அரிக்கும் அயனுக்கும் காணுதற்கரியராய் நிமிர்ந்தாராகிய சிவபெருமான் அமர்ந்தருளும் திருஏகாம் பரத்தினையும் பணிந்து; மாடுயர்....வைகினார் - உயர்ந்த பெரிய பொன்னாலாகிய மதில்களையுடைய திருக்காஞ்சிபுரம் என்னும் நீர்வளமுடைய அத்திருநகரில் தங்கினார்.
  (வி-ரை) நீடு திருக்காளத்தி - நீடும் தென்கயிலை என்னும் சிறப்புக் குறித்தது.
  தாணு - சிவன்; நிலைபேறுடையவர்; தூண்போலத் தாங்குபவர்; நிலவு தாணு - "மலையெழு கொழுந்து" என்றபடி மலைமிசை முளைத்தெழுந்த முதல்வர்.