பக்கம் எண் :

476திருத்தொண்டர் புராணம் [வம்பறா வரிவண்டுச் சருக்கம்]

  ஆ....உணர்கின்றார் - இந்தப் பசுக்கள் பொருந்திய துன்பங்களாகிய இவற்றை நீங்கும்படி ஒழிப்பேன்" என்று தமது உணர்வினிற் கொள்கின்றாராய்;
 

12

  3576. (இ-ள்) இவன்....என்று - "இந்த இடையன் உயிர்பெற் றெழுந்தாலல்லது இப்பசுக்கள் துன்ப நீங்கமாட்டா" என்று உணர்ந்து; அவனுடலில்....தவமுனிவர் - அவனது உடலிலே தமது உயிரைச் சேர்விக்க அருள்புரிகின்ற அத்தவ முனிவர்; தம் உடம்புக்கு அரண்செய்து - தமது திருவுடம்பினைக் காவலாகிய ஓர் இடத்தில் சேமித்து; தாம்....பாய்த்தினார் - தாம் பயின்று கைவந்த பிராணவாயுவை அடக்கும் உபாயத்தின் மூலமாக அவனது உடலினுள் தமது உயிரினைப் புகுவித்தார்.
  இந்த இரண்டு பாட்டுக்களும் தொதடர்ந்து ஒரு முடிபு கொண்டன.
 

13

  3575. (வி-ரை) மற்றவன்றன்....மோப்பனவாக - இவை பசுக்கள் தம்மை மேய்ப்போனிடம் கொண்ட அன்பின் பெருக்கினைக் குறிப்பன; வஞ்சனையற்ற தூய அன்பிற்கும், மனங்கரைந்துருகும் நிலைக்கும் எடுத்துக்காட்டாகப் பசுக்களையே ஆன்றோர் கொண்டனர். "கற்றாவின் மனம்போல" என்பது முதலியவை காண்க, ஈண்டு இடையன் மிக்க அன்போடு பசுக்களைப் பேணிவந்தான் என்பது அவற்றின் இச் செயலாலே கருதப்படும்; "பசுக்களை மேய்க்கும் ஆயன் கோல் போடிற், பசுக்க டலைவனைப் பற்றி விடாவே" என்று திருமூலர் மற்றுமோர் கருத்துப்பற்றிக் கூறுதல் காண்க; "பேணவரும்" (3573) என முன் கூறியது காண்க. பசுக்கள் தம்மை அன்போடு பேணிய சண்டீசநாயனார்பால் வைத்த அன்பின் பெருக்கினையும், அதனால் நிகழ்ந்த செயல்களையும் பற்றி அவர் புராணத்துட் காண்க. (1235).
  சுற்றி....மோப்பன - இவை துயரக் குறிகளான மெய்ப்பாடுகளும் செயல்களுமாம்.
  மோப்பனவாக....காணா - மோப்பனவுமா யிருக்கும் அந்நிலையினைக் கண்டு; காணா - கண்டு.
  நம்பர் அருளாலே - உணர்கின்றார் - ஆக்களின் துயர் நீங்க ஒழிப்பேன் என்ற கருத்து மனத்துள் வந்து எழ அதுபற்றி உணர்வு மேற்கொண்டமை நம்பர் அருளாளே வந்தது என்பதாம். என்னை? கயிலையினின்றும், குறுமுனிபாற் பொதிகைக்குச் செல்ல வழிக்கொண்டு செல்லும் யோகியர்க்கு, வழியில் உலகினரிடைக் காணும் இன்ப துன்பங்களில் மனம் செலுத்திக்கொண்டு தாமும் அவற்றுட்பட்டு உழலுதல் தகுதியன்று; உலகத்தில் உயிர்களது கன்ம பேதங்களுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை இறைவர் ஊட்டுவிக்கின்றார்; அவற்றை நாம் தவிர்ப்பேம் என முயலுதல் பெரியோர் செயலன்று; "செத்தாரை யெல்லாம் பிழைக்க வைப்பேன்; நோயாளிகளை எல்லாம் நோய் தீர்ப்பேன்" என்றெழுதல் அறியார் செயலேயாம். ஆனால் எந்தமது பேரருட் பரமாசாரியர்கள் இவ்வாறு செய்த சில அற்புதங்கள் பற்றி முன்னர் அங்கங்கும் விளக்கப்பட்டன; கடைப்பிடிக்க. ஆளுடைய பிள்ளையார் எலும்பு பெண்ணாக்கியதும், முயலகனோய் தீர்த்ததும், அரசுகள் அப்பூதியார் மகனரவுவிடந் தீர்த்ததும், நம்பிகள் கூனும் குருடும் தீர்த்து ஏவல்கொண்டதும், முதலை வாய்ப்பிள்ளை அழைப்பிப்பதும் முதலியவற்றின் உட்கிடை வேறு; அவை இறைவர் செயல்கள்; "நானழிய வல்லதனால்....தான்செய்யும் தன்மைகளை, ஆக்கியிடு மன்பர்க் கரன்" என்பது ஞானநூல்; இறை செயல்களேயாகிய அவற்றின் காரணங்கள் எம்போல்வர ராராயத்தக்கனவல்ல என்பது திருப்பாசுரப் பிரமாணத்தாற்போதரும், ஈண்டு யோகியர் போந்த செயலும் கருத்தும் வேறாகியும், இவ்வாறு தாம்