பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்483

  றொருவர் கொடுப்பா ரின்றி" (2372) ஏங்கித் தளர்ந்த வணிகப் பெண்ணின் நிலை ஈண்டுக் கருதத்தக்கது.
  இங்கு......என - இது திருமூலராகிய யோகியார் அந்த இடையன் மனைவிக்குச் சொல்லியது. இஃது அப்போது இடையனது உடலின் உள்ளிருந்த உயிரின் நிலை பற்றிக் கூறியது.
  பொங்கு தவத்தோர் - இதன் முன் கயிலையில் செய்த பெருந்தவமேயன்றி இனி இங்குத் திருவாவடுதுறையிற் போதியடியில் யோகிருந்து பலகாலம் உலகுக்கருளச் செய்ய நின்ற அரும் பெருந்தவமும் குறிக்கப் பொங்கு என்றார்.
  பொதுமடம் - ஊர்ப் பொதுவில் உள்ள மடங்களுள் ஒன்று; யாவரும் தங்கும் உரிமையுள்ள இடம்.
 

18

3582
ல்லாள னியல்புவே றானமைகண் டிரவெல்லாஞ்
சொல்லாடா திருந்தவர்பா லணையாது துயிலாதாள்
பல்லார்முன் பிற்றைநா ளவர்க்கடுத்த பரிசுரைக்க
நல்லார்க ளவர்திறத்து நாடியே நயந்துரைப்பார்,
 

19

3583
"பித்துற்ற மயலன்று; பிறிதொருசார் புளதன்று;
சித்தவிகற் பங்களைந்து தெளிந்தசிவ யோகத்தில்
னவத்தகருத் தினராகி வரம்பில்பெரு மையிலிருந்தார்;
இத்தகைமை யளப்பரிதால் யாராலு" மெனவுரைப்பார்,
 

20

3584
"பற்றறுத்த வுபதேசப் பரமர்பதம் பெற்றோர்போல்
முற்றுமுணர்ந் தனராகு; முன்னைநிலை மையிலுங்கள்
சுற்றவியல் பினுக்கெய்தா" ரென்றுரைப்பத், துயரெய்தி
மற்றவளு மையலுற மருங்குள்ளார் கொண்டகன்றார்,
 

21

  3582. (இ-ள்) இல்லாளன் ....கண்டு - தனது கணவனது தன்மை வேறு பட்டு மாறியதனைத் தெரிந்து; இரவெல்லாம்......துயிலாதாள் - அன்று இரவு முழுமையும் யாவரிடத்தும் சொல்லுரையாமலிருந்து அவரிடம் அணையவியலாது துயிலும் பெறாமலிருந்த அப்பெண்; பல்லார்முன்.....உரைக்க - அடுத்த நாள் அவ்வூரிலுள்ளார் பலர் முன்னிலையில் அவரது தன்மையினைச் சொல்லவே; நல்லார்கள்.....உரைப்பார் - அதுகேட்ட நல்ல மக்கள் அவரது தன்மையினை அருகில் அணைந்து நாடியறிந்து அன்புடன் சொல்வார்களாகி,
 

19

  3583. (இ-ள்) பித்துற்ற....உளதன்று - இது பித்துப் பொருந்திய மயக்கமன்று; பிறிதாகியதொரு சார்பு உள்ளது மன்று; சித்தவிகற்பம்....இருந்தார் - சித்தத்தின் விகற்பங்களை யெல்லாம் களைந்து தெளிந்த நிலையினில் சிவயோகத்தில் அழுந்திய கருத்தினை உடையவராகி அளவற்ற பெருமையில் இருந்தனர்; இத்தகைமை....உரைப்பார் - இத்தன்மை எவராலும் அளவிடற்கரியது என்று துணிந்து எடுத்துச் சொல்வார்களாகி,
 

20

  3584. (இ-ள்) பற்றறுத்த....உணர்ந்தனராகும் - இருவகைப் பற்றுக்களையும் அறுத்த ஞானோபதேசத்தினாலே இறைவரது திருவடிகளைப்பெற்ற சீவன் முத்தர்களைப்போல ஒருங்கே எல்லாவற்றையும் உணர்ந்த ஞானியாகுவர்; முன்னை.....என்றுரைப்ப - முன்னை நிலைமைப்படி உங்கள் சுற்றத்தின் தொடர் பாகிய இயல்பினுட்