பக்கம் எண் :

[வம்பறா வரிவண்டுச் சருக்கம்] 30. திருமூலதேவ நாயனார் புராணமும் உரையும்485

  வைத்தல் - ஊன்றுதல் - அழுந்துதல் - ஒன்றுதல்.
  வரம்பில் பெருமையிலிருந்தார் - யோகியாரின் நிலைமைகண்ட மனைவி "ஈனம் இவர்க்கடுத்தது"என்று கொண்டாள்; அவள் சொன்னதையும் அவரது மனமாறுபட்ட செய்கைகளையுமே புறத்தோற்றத்தாற் கண்டவர்களும் அவ்வாறே கொண்டார்கள்; அஃதாவது அவரது முன்னை நிலையினின்றும் வேறுபட்ட நோய் - பித்து முதலிய தாழ்வாகிய மாறுபாடு எனவே எண்ணினார்கள். சார்பு நாடியே நயந்த நல்லோர்கள் அது தாழ்ந்த நிலையன்று; உலகச் சார்பான கீழ் நிலையன்று; சிவச்சார்பாகிய அளவற்ற பெரிய நிலை என்று கண்டார்கள் என்க. வரம்பில் - அளவில்லாத.
  இத்தகைமை.....யாராலும் என - இவ்வாறு இடையனது நிலை ஒப்பற்ற பெரிய தன்மை யடைந்ததனை யாவராலும் அளக்கலாகாது என்று; இது பரகாயப் பிரவேசத்தால் புகுந்த உயிரின் மேம்பாடு என்பதனை உணரலாகாமையின் அவர் கூறியது.
 

20

  3584. (வி-ரை) பற்றறுத்த உபதேசம் ....பெற்றார்போல் - பற்றறுதற்குக் காரணமான உபதேசத்தினாலே; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்; உபதேசம் - சற்குருவின் ஞானோபதேசத்தினால்; "நந்திதிரு வருள்பெற்ற" என்ற உண்மை இவர்களுக்கு ஏற்றவாறு விளங்கா நின்றது; உபதேசத்தானன்றிப் பற்றறுதல் இயலாது என்றதும் குறிப்பு. பரமர்பதம் பெற்றார் - இப்பிறப்பிலே சிவனடியில் இரண்டற்ற அறிவு பொருந்தி உலகை மறந்த சீவன்முத்தர். பற்றறுத்த - பரமர் வன்று கூட்டியுரைத்தலுமாம். "பற்றற்றான்" (குறள்)
  முற்றும் உணர்ந்தவராகும் - முழுஞானமும் பெற்றவர்; எல்லாமறியும் மெய்ஞ்ஞானம்.
  முன்னை நிலை - முன் ஆமேய்ப்பானாயிருந்த அந்நிலைமை.
  கற்ற இயல்பு - உலகத் தொடர்பு.
  பரம்பரமே - என்பது பாடம்.
 

21

3585
ந்தநிலை மையிலிருந்தா ரெழுந்திருந்தாங் கானிரைகள்
வந்தநெறி யேசென்று வைத்தகாப் பினிலுய்த்த
முந்தையுடற் பொறைகாணார் முழுதுணர்ந்த மெய்ஞ்ஞானச்
சிந்தையினில் வந்தசெய லாராய்ந்து தெளிகின்றார்,
 

22

3586
ண்ணிலவார் சடையார்தாந் தந்தவா கமப்பொருளை
மண்ணின்மிசைத் திருமூலர் வாக்கினாற் றமிழ்வகுப்பக்
கண்ணியவத் திருவருளா லவ்வுடலைக் கரப்பிக்க
எண்ணிறைந்த வுணர்வுடையா "ரீசரரு" ளெனவுணர்ந்தார்,
 

23

  3585. (இ-ள்) இந்த நிலைமையிலிருந்தார் - முன்கூறிய இவ்வாறாகிய நிலைமையில் சாத்தனூர்ப் பொதுமடத்தில் இருந்த திருமூலர்; எழுந்திருந்து....காணார் - அந்நிலையினின்றும் எழுந்து இருந்து அவ்விடத்துப் பசுக்கூட்டங்கள் ஊரை நோக்கி வந்த வழியினையே பற்றிச் சென்று பார்க்கத் தாம் வைத்த காவலின்கண் செறித்த தமது முன்னைய உடற்பொதியினைக் காணாராகி; முழுது உணர்ந்த.....தெளிகின்றார் - முற்றுணர்வு கூடிய மெய்ஞ்ஞானம் பொருந்திய தமது சிந்தையினில் இச்செயல் நிகழ்ந்த நிலையினை ஆராய்ந்து தெளிவாராகி,
 

22