| |
| 3603. (இ-ள்.) பழுது....துயில - குற்றத்தினைப் போக்குவாராகித் திருத்தொண்டர் முன் கூறியவாறு துதித்து விண்ணப்பஞ் செய்து வணங்கிப் போய்த் தமது திருமடத்தினுள்ளே புகுந்து துய்மையாக்கும் திருப்பணியினைச் செய்யப் பெறாமையினாலே அழுது அன்று இரவு அவர் துயில்கொள்ள; கனவில் - அவரது கனவிலே; அகில.... அருளிச்செய்கின்றார் - எல்லா உலகங்களையும் முற்றும் காக்கின்ற முதல்வராகிய சிவபெருமான் அவர் முன்னே தோன்றி நின்று அருளிச் செய்கின்றாராகி, |
| 12 |
| 3604. (இ-ள்.) "நெஞ்சில்....அஞ்சவேண்டாம்" என்றருளி - மனத்துட் பொருந்தும் கவலையினை நீ தீர்வாயாக; உனது கண்கள் விழித்து அந்த அமணர்கள் தமது கண்கள் மறையுமாறு நீ காண்பாய்; அஞ்ச வேண்டாம் என்று அருளிச் செய்து; அவர்பால் நீங்கி - அவரிடம் நின்று மறைந்தருளி; அவ்விரவே....அருள்புரிவார் - அந்த இரவிலே உறங்கியிருக்கும் இராப்போதிலே அரசனிடத்தில் கனாவில் தோன்றி அருள் செய்வாராய், |
| 13 |
| 3605. (இ-ள்.) "தண்டி....முடிப்பாய்" என்று கொள அருளி - தண்டி நமக்காகக் குளம் கல்லுதலைக் கண்ட அமணர்கள் பொறாதவர்களாகி வலிமை செய்து அந்தத் திருப்பணியைத் தடுத்துவிட அவன் வெகுண்டிருந்தான்; அவனிடம் நீ சென்று அவன் உட்கொண்ட குறிப்பினாலே அவனது கருத்தினை நீ முடிப்பாயாக! என்று அரசன் மனத்துட் கொள்ளும்படி அருளிச் செய்து; தொண்டர்....உவப்பார் - தொண்டரது இடுக்கண் நீங்கும்படி பண்ணி எழுந்தருளினார் அத்தொழிலினை மகிழ்வாராகிய இறைவர். |
| 14 |
| இம்மூன்று பாட்டுக்களும் தொடர்ந்து ஒருமுடிபு கொண்டன. |
| 3603. (வி-ரை.) பழுது தீர்ப்பார் - விண்ணப்பஞ் செய்து என்று கூட்டுக; இறைவர்பால் விண்ணப்பஞ் செய்தலே பழுது தீர்க்கும் வழியாம் என்று கண்டு அதனைச் செய்து; தீர்ப்பார் - தீரும் வழியினைத் தேடுவார். |
| தூயபணி செய்யப் பெறாது அழுது - தாம் செய்யும் பணிக்கு முட்டுப்பாடு நேர்ந்து பணிசெய்ய இயலாதபோது பெரிதும் வருந்துவது அடியார் தன்மை. அவர்கள் இதுவேயன்றி வேறு வருத்தம் அறியார்; உலகர் பல துறையிலும் காணும் பாச அழுகை அவர்பால் நிகழாது; இவ்வாறே சமணச் சார்புடைய மன்னன் தமது சந்தனப் பணியை முட்டுப்படுத்தியபோது மூர்த்தி நாயனார் சிந்தை நொந்து ‘இப்பாதகன் மாய்ந்திட இப்புவி திருநீற்று நெறிநிற்கும் மன்னரைச் சார்வது எப்போது?’ என்று இறைவரை வேண்டிய வரலாறும், பிறவும் இங்கு நினைவு கூர்தற்பாலன. |
| அகில லோகங்கள் முழுதும் அளித்த முதல்வனார் - அகிலம் - என்றதனால் அண்டங்களின் எண்ணிக்கை முற்றும் என்பதும், முழுதும் என்றதனால் அவற்றிற்செல்லும் ஆணைவகைகள் முற்றும் என்பதும் பெறவைத்தார்; எல்லாவுலகங்களிலும் எல்லா ஆணையும் என்க. |
| அளித்தல் - இங்கு ஆக்குதலும் காத்தலும் குறித்தது. "நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான், நெறியில் வழுவில் நெருஞ்சில்முட் பாயும்" (திருமந்) என்றபடி முருட்டு அமணர்களை அளித்தவரும் சிவநெறியினை வகுத்தவரும் அவ்விறைவரே; ஆயின், உயிர்களின் பக்குவ நிலைக்கேற்பக் கன்மானுபவத்தின்பொருட்டுப் படைக்கப்பட்ட புறச்சமயங்கள் தம்மளவினைத் தவறி மீறிக் கேடு |