பக்கம் எண் :

[வார்கொண்ட வனமுலையாள் சருக்கம்] 34. சாக்கிய நாயனார் புராணமும் உரையும்565

குறித்தது: உவகை என்னாது உவகை நிலைமை - என்றது அன்றுடனொழியாது அத்தன்மையேயாகி மாறிய பண்பு நிலைபெற்றது என்று குறித்தற்கு.
பாடு...எறிந்தார் - பாடு - பக்கம்; படு - விகுதியடியாகக் கொண்டு துன்பம் தரத்தக்க என்றலுமாம். கல் கண்டு அதனைப் பறித்து - கல்லினைக் கண்டு அதனையே பறித்து; கற்கண்டு - ஒரு சொல்லாகக் கொண்டு உண்ண இனிக்கும் கற்கண்டாக அதனையே எண்ணி என்ற தொனிப்பொருளும் கொண்டு, துன்பம் விளைக்கும் அப்பொருளினையே இன்பம் தரும் பண்டமாக எண்ணி என்றலுமாம்.
பதைப்போடும் - பதைப்பாவது மிக்க களிப்பினால் வரும் உடல் நடுக்கம். உடல் அசைவு - "கீழ்மே லாகப் பதைத்துருகு மவர்" (திருவா. சத. 21)
எடுத்து - மலர் எடுத்தல் போல என்பது குறிப்பு. எறிதல் - அருச்சிப்பார் போல வீசுதல்.

9

3645
கநிறைந்த பேருவகை யடங்காத வாதரவான்
மகவுமகிழ்ந் துவப்பார்கள் வன்மைபுரி செயலினால்
இகழ்வனவே செய்தாலு மிளம்புதல்வர்க் கின்பமே
நிகழுமது போலதற்கு நீள்சடையோர் தாமகிழ்வார்.

10

(இ-ள்) அகநிறைந்த...ஆதரவால் - மனநிறைந்து பெருகிய பெருமகிழ்ச்சி யினால் வந்த அளவு கடந்த அன்பினாலே; மகவுமகிழ்ந்து...செய்தாலும் - தமது மகவினை மகிழ்ந்து களிப்பவர்கள் அம்மகார்கள்பால் வலிமை செய்யும் செயல்களின் மூலம் இகழ்வனவற்றைச் செய்தாலும்; இளம்புதல்வர்க்கு....நிகழும் - அவ்விளம் புதல்வர்களுக்கு இன்பமே உண்டாகுமன்றி அவ்வலிய செயல்களால் துன்பமுண்டாகாது; அதுபோல்....மகிழ்வார் - அதுபோல இந்நாயனார் செய்ததாகிய கல்லெறிந்த வன்மைச் செயலுக்கு நீண்ட சடையினையுடைய இறைவர் மகிழ்ச்சியே யடைவார் (ஆயினார்.)
(வி-ரை) நாயனார் நீள் களியுவகை மிகப் பதைப்போடும் கல் எறிந்த வலிந்த செயலுக்கு இறைவர் மகிழ்வாராயினார் என்றதன் உண்மையினை உவமை முகத்தால் விளக்கியவாறு.
அகநிறைந்த...நிகழும் - என்றது உவமிக்கப்படும் பொருளாகும் ஓர் உண்மை. அஃதாவது சிறுவர்பால் பேரன்புகொண்டு களித்து மகிழும் பெற்றோர்கள் அம்மகிழ்ச்சி மீக்கூர்ந்தெழுதலினால் சிலபோது அம்மகார்களைச் சிறிதே அடித்தல் - கிள்ளுதல் - இறுகப்பற்றுதல் முதலியவன்மைச் செயல்களையும் செய்வர். மிக்க அன்பு காரணமாகத் தம்பால் மகிழ்தலால் இவற்றையும் அத் தாய் தந்தையர் செய்கின்றார் என்பதை அம்மகாரும் அறிகுவர். ஆதலின் அவ்வன்மைச் செயல்களும் அவர்க்குத் துன்பம் பயவாது இன்பமே பயக்கும்: இஃது உலகியல் நிலையிற் கண்கூடா அறியக்கிடக்கும் உண்மை. இகழ்வன - செய்யக்கூடாத வலிந்த செயல்கள்; அடித்தல், கிள்ளுதல் முதலாயின.
இதற்கு இவ்வாறன்றி, தம்மகார்கள் தம்பால் அன்பினால் வலிந்த செயல்கள் செய்தாலும் பெற்றோர்கள் அதனால் இகழாது அம் மகவுகளை மகிழ்ந்தே உவப்படைவார்கள்; அதுகண்டு அவ்விளம்புதல்வர்க்கு இன்பமே உண்டாகும் என்றுரைத்தனர் முன் உரைகாரர்கள்; இப்பொருளில் புதல்வர்க்கு என்பதிற் குவ்வுருபு ஏழுனுருபின் பொருளில் வந்ததென்ப; செய்தாலும் - உவப்பார்கள் என்று கூட்டுவர்; இப்பொருளை உவமத்திற் காட்டும்போது கல் எறிந்த நாயனார்
வன்மைபுரி இளம் புதல்வராகவும்