பக்கம் எண் :

பெரியபுராணம்301


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
 

45. கலிய நாயனார் புராணம்
 

தொகை
 

    
“(கைதடிந்த விரிசிலையான் கலிக்கம்பன்) கலியன்
     கழற்சத்தி வரிஞ்சையர்கோ) னடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை - (7)
 

வகை
 

    
“கம்பக் கரிக்குஞ் சிலந்திக்கு நல்கிய கண்ணுதலோன்
உம்பர்க்கு நாதற் கொளிவிளக் கேற்றற் குடலிலனாய்க்
கும்பத் தயிலம்விற் றுஞ்செக் குழன்றுங்கொள் கூலியினால்
நம்பற் கெரித்த கலியொற்றி
மாநகர்ச் சக்கிரியே”

- திருத்தொண்டர் திருவந்தாதி - (54)
 

விரி
 

4022. பேருலகி லோங்குபுகழ்ப் பெருந்தொண்டை நன்னாட்டு
நீருலவுஞ் சடைக்கற்றை நிருத்தர் திருப் பதியாகுங்
காருலவு மலர்ச்சோலைக் கன்னிமதில் புடைசூழ்ந்து
தேருலவு நெடுவீதி சிறந்ததிரு வொற்றியூர்.              1
 
     புராணம்: இனி, ஆசிரியர், நிறுத்த முறையானே, எட்டாவது பொய்யடிமை
யில்லாத புலவர் சருக்கத்தில், ஆறாவதாகக் கலிய நாயனார் புராணங்
கூறுத்தொடங்குகின்றார். கலியர் என்ற பெயருடைய நாயனாரது சரித வரலாறும்,
பண்புங் கூறும் பகுதி.
 
     குறிப்பு: இந்நாயனார் பெயர் கலியன் என்று திருத்தொண்டத் தொகையுட்
போற்றப்பட்டது. கலி என்பது திருவந்தாதி; விரிநூலுள் கலிநீதியார் - என்று பெயர்
குறித்துத் தொடங்கப்பட்டுள்ளது. (4021) அதுகொண்டு பல பதிப்புக்களில் கலிநீதி
நாயனார் புராணம் என்று தலைப்பிடப்பட்டமை காண்கின்றோம். ஆயின் புராணத்துள்
பின்னர்ப் பெயர் குறிக்கும்போது “தக்க புகழ்க் கலியனா ரெனுநாமந் தலைநின்றார்”
(4027) என விளக்கமாய் இவரது பெயர் போற்றப்பட்டது. ஆதலின் இவர் பெயர்
கலியர் என்பதே துணிபு. இதினும் ஆர் என்பது சிறப்புப் பன்மைவிகுதியாகத்
திருவந்தாதியிற் கண்ட கலி என்பதே பெயர்போலும்; கலி நீதியார் (4021) என்ற
விடத்து நீதி என்பது பண்புணர்த்தியதென்க.
 
     தொகை: கலியர் என்ற திருநாமமுடைய நாயனாரது அடியார்களுக்கு நான்
ஆளாயினேன். பெயர் மட்டும் தொகைநூல் பேசிற்று.