வரது திருக்கோயிலின் உள்ளேயும் புறத்திலேயும் இரவிலும் நீண்ட பகற் போதிலும் இடுகின்ற திருவிளக்குத் திருப்பணியின் அணியினை விளைத்தார். |
| 7 |
| இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டுரைக்க நின்றன; முன் பாட்டினைத் தனிமுடிபாக வைத்து உரைப்பினு மிழுக்கில்லை. சொற்றொடர்பும் பொருட்டொடர்பும் நோக்கி இவ்வாறுரைக்கப்பட்டது. |
4027. (வி-ரை) குலத்தின் செய்தவம் - குலத்தவர் செய்த முன்னைத் தவம் குலத்தின்மேல் லேற்றப்பட்டது; ஆகுபெயர். |
பெருஞ் செல்வத்து மீக்கூர - பெரிய செல்வம் மேலும் பெருகிவர. |
தக்க புகழ்க் கலியனார் எனும் நாமம் தலைநின்றார் - கலியனார் என்ற திருநாமத்துக் கேற்றபடி தகுந்த புகழுடன் சிறந்தார். கலியர் - கலியிற் சிறந்தவர். கலி - வலிமை - வீரம்; புகழாவது - ஈகையால் வருவது. “ஈவார்மே னிற்கும் புகழ்” (குறள்); தலை நிற்றல் - சிறந்து விளங்குதல். |
முக்கண் இறைவர் - சிவபெருமான். |
| உரிமைத் திருத்தொண்டு - தமது திருக்குலத்தோடு உரிமை பெற்று வருவதாகிய திருத்தொண்டின் தொழில். |
நெறி முயல்வார் - நெறியின் கண் முயல்வார்; முயல்வார் - தொழில் செய்வார் என்ற பொருளில் வந்தது. |
முயல்வார் -அறிந்து - விளைத்தார் - என மேற்பாட்டுடன் முடிக்க; |
அவதரித்து - என்பதும் பாடம். 6 |
4028. (வி-ரை) கோடி - பேரெண்; பல முடிபுகளையுடைய செல்வம் என்றலுமாம். கோடி - முடிபு; முடிபுகளாவன உடைகள் - தனம் - தானியம் - வீடு - மாடு முதலியன என்பன. |
இப்படித்தாம் செல்வ நெறிப் பயன் அறிந்து - இவ்வாறாகத் தாம் பெற்ற செல்வம் வந்த வழியின் பயனை அறிந்து; வந்த வழியாவது முன்பு சிவனைப் பூசித்த நிலை என்பதாம். பயனாவது செல்வம் பெற்ற பயன் சிவனையும் அடியார்களையும் பூசித்தலால் அழியும் பொருளை அழியாமற் செய்வது. |
கொல்லை - முல்லை; இடபம் முல்லைக் குரியது. அல்லும் நெடும்பகலுந் திருவிளக்கின் அணி விளைத்தார் - நாள் முழுதும் விளக்கிட்டனர் என்க. அல் - இருள் - அதனையுடைய இரவுக்காகி வந்தது; நெடும் பகலில் விளக்கிடுதல்அணியின் பொருட்டாம்; அல்லிற் போலவே நெடும் பகலிலும் இப்பெருந் திருக்கோயிலினுள் திருவிளக்கின் உதவி வேண்டப் படுதல் இன்றும் காண உள்ள நிலை. |
நெடும் பகல் - மக்கள் மிகவும் சஞ்சரிக்கும் கால நீட்டிப்புக் குறித்தது. அணி விளக்குதல் - வரிசை பெற வேண்டுமிடத்து எரித்தல். |
புறம்பு விளக்கிடுதல் - இஞ்ஞான்று மலைநாட்டிற் காணவுள்ளது. |
இடும் - எரிக்கும்; |
எல்லை பல - எல்லையில்லார் - என்பனவும் பாடங்கள். 7 |
| 4029. | எண்ணிறிரு விளக்குநெடு நாளெல்லா மெரித்துவரப் புண்ணியமெய்த் தொண்டர்செயல் புலப்படுப்பா ரருளாலே உண்ணிறையும் பெருஞ்செல்வ முயர்த்தும்வினைச் செயலோவி மண்ணிலவ ரிருவினைபோன் மாண்டதுமாட் சிமைத்தாக. 8 |