பக்கங்களிலும் பறைசாற்றும்படி செய்தனர்; தாம் பெற்ற நிதிகளாலாகிய பயனைக் கொள்வாராகிய இடங்கழியார். 9 |
இந்த இரண்டு பாட்டுக்களும் தொடர்ந்து ஒரு முடிபு கொண்டன. |
4116. (வி-ரை) மெய்த்தவர் - காவலாளர் பிடித்துக் கொணர்ந்த மெய்யடியார்; களவு செய்தேயும் சிவன் அடியாரை அமுது ஊட்டுதல் வேண்டுமென்ற உறுதிப்பாட்டினால் களவினால் தமக்கு நேரிடக்கூடிய அரச தண்டனையினையும் மனங்கொள்ளாதவராதலின் மெய்த்தவர் என்றனர். தேச சேவை என்ற பெயரால் அரச தண்டனையினைப் பொருட்படுத்தாதோரை இந்நாளில் பெருந்தியாகிகள் - தவசிகள் - என்று கூறும் நிலையினைக் கண்டு இதன் உயர்வு கண்டு கொள்க. |
இருக்கும் வேன் மன்னர் - அரச கொலு வீற்றிருக்கும் வேலேந்திய மன்னர்1. |
அத்தன்.....செய்தேன் என்று இயம்புதலும் - அடியவர்களின் வீரங் குறித்தது; எறிபத்த நாயனார் - செருத்துணையார் - இவர்கள் அரசர்களிடம் விடுத்த விடைகள் ஈண்டு வைத்து ஒப்புக்காணத்தக்கன. (4104) |
மிக இரங்கி - அவ்வடியார் மனம் வருந்த வந்த நிலைக்கு மிக இரங்கினார்; அடியவரை அமுதூட்ட முட்டுப்பட்டபோது அவருக்கிருந்த மன நிலைக்கும், காவலாளார் பற்றியபோது வருந்திய நிலைக்கும் இரங்கினர் என்க. |
விட்டு - காவலாளரது காவலின்றும் விடுவித்து. |
இவரன்றோ எனக்குப் பண்டாரம் - இவ்வடியவரன்றோ எனது சேம வைப்பு. நெற்கூடு பண்டாரமாகாது; இவரே பண்டாரமாவார் என்பதாம்; என்னை? அது நெல்லைத் தன்னுள் கொண்டு வாளாவிருக்குமே யன்றிப் பயன்றராது; இவர் அவ்வாறன்றி அந்நெல்லைத் தம்முள் வைத்து அடியார்க்கமுதூட்டி அதனால் வரும் பயனை எனக்குத் தேடித்தருபவர் என்பது கருத்து. மேல் “படைத்த நிதிப் பயன் கொள்வார்” (4117) என்பது காண்க; ஓகாரம் உடன்பாட்டு வினா; உறுதி குறித்தது; “அஃதொருவன் பெற்றான் பொருள் வைப்புழி” (குறள்) என்ற கருத்தும், “தனக் குதவ வைக்குமிடம் அவ்வறம்” என்ற உரையும் காண்க. பண்டாரம் - நிதிச்சாலை; “பண்டாரத் தேயெனக் குப்பணித்தருள வேண்டும்” “பாதம்பணி வார்கள்பெறு பண்டம்” (நம்பி - தேவா) பண்டம் - பொருள்; அயலாரது பொருள் கவர்ந்து நல்வினை செய்யின் அதனால்வரும் அறம், பொருளுடையாரையும், தீவினை செய்யின் மறம் கவர்ந்தாரையும் சாரும் என்பது நீதி நூற் கருத்து, (ந - சிவ) |
என்பார் - என்பாராகி; முற்றெச்சம். |
என்பார் - பயன் கொள்வார் - பண்ணுவித்தார் என்று, வரும் பாட்டுடன் முடிக்க. 8 |
4117. (வி-ரை) நிறையழிந்த உள்ளத்தான் - ஆள் - உருபுஉடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. நிலையழிந்த உள்ளத்தோடும்; தமது அரசாட்சியில் அடியார்கள் சிவன் திருத்தொண்டுக்கு உடலின்றி வருத்தும் நிலையும் உளதாயிற்றே என்றும், உண்மை யடியாரை அறியாது காவலாளர் பிடிக்க நேர்ந்ததே என்றும், மனமழிந்தனர்; சிவதருமங்களைச் செல்வே அவரவரும் வேண்டியவாறு செய்யும்படி நிறுவுவது |
_______________ |
1 குறிப்பு :- இருக்கும் வேன் - என்பது இருக்கு வேள் என்றிருத்தல் கூடுமோ என்பது ஐயப்பாடு; “இருக்குவேளிர் மன்” (திருவந் - 65) என்ற வகைநூல் காண்க; இருக்குவேளிர் என்பது இம்மன்னரது மரபின் பெயர் என்பது சரித ஆராய்ச்சி யாளர் கல்வெட்டு ஆதரவுகளாற் கண்டது.. |