பக்கம் எண் :

பெரியபுராணம்479


சிவமயம்

திருச்சிற்றம்பலம்
 

64. அப்பாலும் அடிச்சார்ந்தார் புராணம்
_ _ _ _ _
 

தொகை
 

 
"அப்பாலும் அடிச்சார்ந்தா ரடியார்க்கு மடியேன்”

- திருத்தொண்டத் தொகை (10)
 

வகை
 

 
வருக்க மடைத்துநன் னாவலூர் மன்னவன் வண்டமிழாற்
பெருக்க மதுரத் தொகைபிறை சூடிதன் பெய்கழற்கே
யொருக்கு மனத்தொடப் பாலடிச் சார்ந்தவ ரென்றுலகிற்
றெரிக்கு மவர்சிவன் பல்கணத் தோர்நஞ் செழுந்தவரே.

- திருத்தொண்டர் திருவந்தாதி (76)
 

விரி
 

4169. மூவேந்தர் தமிழ்வழங்கு நாட்டுக் கப்பால்
    முதல்வனா ரடிச்சார்ந்த முறைமை யோரும்
நாவேய்ந்த திருத்தொண்டத் தொகையிற் கூறும்
    நற்றொண்டர் காலத்து முன்னும் பின்னும்
பூவேய்ந்த நெடுஞ்சடைமே லடம்பு தும்பை
    புதியமதி நதியிதழி பொருந்த வைத்த
சேவேந்து வெல்கொடியா னடிச்சார்ந் தார்கள்
    செப்பியவப் பாலுமடிச் சார்ந்தார் தாமே. 1
 
     புராணம் :- இனி, நிறுத்த முறையானே, பதினொன்றாவாது, பத்தராய்ப் பணிவார்
சருக்கத்துள், ஏழாவது அப்பாலும் அடிச்சார்ந்தாரின் பண்களைக் கூறும் பகுதி.
 
     தொகை :- பொழிப்பு உரைத்துக் கொள்க.
 
     அப்பாலும் - இடத்தாலும் காலத்தாலும் அப்பாற்பட்ட என்பது விரிநூல்
இதனைப் பொருள் செய்தவாறு.
 
     வகை :- வருக்கம் அடைத்து - வரிசைப்பட அடைவுபடுத்தி; நன்னாவலூர்
மன்னவன்.....தொகை - நல்ல நாவலூர்த்தலைவராகிய நம்பிகள் வளப்பமுடைய
தமிழினாற் பெருகக் கூறிய அந்த இனிமையான திருத்தொண்டத் தொகையின் கண்ணே;
பிறை சூடிதன்......அவர் - பிறையினைச் சூடியவராகிய இறைவரது பெய்கழலுக்கே
ஒருப்பட்ட மனத்துடன் அப்பாலும் அடிசார்ந்தவர் என்று உலகில் விளங்க உரைத்த
அவர்கள்; சிவன்...செழுந்தவரே - சிவனது பல்கணத்தோர்களாகிய நமது உயர்ந்த
தவத்தை உடையவர்களேயாவர்.