உ சிவமயம் திருச்சிற்றம்பலம் |
68. கோச்செங்கட் சோழ நாயனார் புராணம் _ _ _ _ _ |
தொகை |
| “தென்னவனா யுலகாண்ட செங்கணார்க் கடியேன்” | |
- திருத்தொண்டத் தொகை - (14) |
வகை |
| மைவைத்த கண்ட னெறியன்றி மற்றோர் நெறிகருதாத் தெய்வக் குடிச்சோழன் முன்பு சிலத்தியாய்ப் பந்தர்செய்து சைவத் துருவெய்தி வந்து தரணிநீ டாலயங்கள் செய்வித் தவன்றிருக் கோச்செங்க ணானெனுஞ் செம்பியனே. | |
| செம்பொன் னணிந்துசிற் றம்பலத் தைச்சிவ லோகமெய்தி நம்பன் கழற்கீழிருந்தோன் குலமுத லென்பர்நல்ல வம்பு மலர்த்தில்லை யீசனைச் சூழ மறைவளர்த்தான் நிம்ப நறுந்தொங்கற் கோச்செங்க ணானெனு நித்தனையே. | |
- திருத்தொண்டர் திருவந்தாதி - (81- 82) |
விரி |
4197. | துலையிற் புறவி னிறையளித்த சோழ ருரிமைச் சோணாட்டில் அலையிற் றரள மகிலொடுசந் தணிநீர்ப் பொன்னி மணிகொழிக்குங் குலையிற் பெருகுஞ் சந்திரதீர்த் தத்தின் மருங்கு குளிர்சோலை நிலையிற் பெருகுந் தருமிடைந்த நெடுந்தண் கான மொன்றுளதால். 1 |
புராணம் ;- இனி, நிறுத்த முறையானே, ஆசிரியர், பன்னிரண்டாவது மன்னியசீர்ச் சருக்கத்துள், நான்காவது கோச்செங்கட்சோழ நாயனாரது புராணங்கூறத் தொடங்குகின்றார். கோச்செங்கட்சோழரது வரலாறும் பண்பும்கூறும் பகுதி. |
தொகை ;- பாண்டிய அரசருமாயிருந்து உலகத்தை ஆண்ட கோச்செங்கட் சோழருக்கும் நான் அடியேன். |
தென்னவனுமாய் - என்க. சோழாராயிருந்து சோழ நாட்டினை ஆண்டதுடன் தென்னவனுமாய் என்று இறந்தது தழுவிய எச்சவும்மை விரிக்க. இவர் பாண்டிய நாட்டையும் தம் அடிப்படுத்தி ஆண்டனர் என்பது சரிதவரலாறு. இதுபற்றியே வகைநூலுள் “நிம்ப நறுந்தொங்கல்” என்று பாண்டியர்க்குரிய வேப்பமாலை |