| 
 103. திருக்கழுக்குன்றம் பதிக வரலாறு: திருவிடைச்சுரத்தை வணங்கியபின்
சண்பைகாவலர் திருத்தொண்டர்களுடன், வண்டுகள்
செந்துருத்திப் பண்ணைப் பாடும்
திருக்கழுக்குன்றத்தையடைந்தார். அவ்வூரடியார்கள்
சுவாமிகளை எதிர்கொள்ள, சிவிகையினின்றும்
இறங்கி, திருமலையை வலங்கொண்டு செஞ்சடைப்
பெருமானைச் சிந்தை களிகூர வணங்கினார்.
ஒருகாலைக்கொருகால் பெருகி யெழுங்காதலினால்
வணங்கிக் ‘காதல்செய் கோயில் கழுக் குன்று‘
என்று பதிகக்கருத்தை வைத்துத் ‘தோடுடையான்‘
என்னும் இப்பதிகத்தை அருளிச்செய்தார். பண்: குறிஞ்சி பதிக எண்: 103 திருச்சிற்றம்பலம் 
1112. தோடுடையானொரு காதிற்றூய குழைதாழ ஏடுடையான் றலைகலனாக விரந்துண்ணும் நாடுடையா னள்ளிருளேம நடமாடும் காடுடையான் காதல்செய்கோயில் கழுக்குன்றே. 1 ___________________________________________________ 1. பொ-ரை: ஒரு காதில் தோடும்
பிறிதொரு காதில் தூய குழையும் தாழ்ந்து தொங்கத்,
தாமரை மலரில் தங்கும் பிரமனின் தலையோட்டை
உண்கலனாகக் கொண்டு இரந்துண்ணும் நாடுகளை
உடையவன். நள்ளிருள் யாமத்தில் மகிழ்வோடு
சுடுகாட்டில் நடனம் ஆடுபவன். அத்தகையோன்
விரும்பி உறையும் கோயில் திருக்கழுக்
குன்றமாகும். கு-ரை: ஒருகாதில் தோடுடையான்,
ஒருகாதில் குழைதாழ மலரும் அணிந்தவன்.
கபாலத்தில் இரந்துண்ணும் நாட்டை |