| 
 
1230. கருவுடை யாருல கங்கள்வேவச்செருவிடை யேறியுஞ் சென்றுநின்று
 உருவிடை யாளுமை யாளுந்தானும்
 மருவிய வளநகர் மாற்பேறே. 3
 1231. தலையவன் றலையணி மாலைபூண்டுகொலைநவில் கூற்றினைக் கொன்றுகந்தான்
 கலைநவின் றான்கயி லாயமென்னும்
 மலையவன் வளநகர் மாற்பேறே. 4
 1232. துறையவன் றொழிலவன் றொல்லுயிர்க்கும்பிறையணி சடைமுடிப் பெண்ணொர்பாகன்
 __________________________________________________ நீறுபூசி உமையம்மையை ஒருபாகமாக
வைத்துள்ளவனும், தனக்கு ஒப்பு இல்லாதவனும் ஆகிய
சிவபிரானது வளநகர், மாற்பேறு. கு-ரை: பாறு - பருந்து. மாறிலி -
மாறுபாடில்லாதவன். 3. பொ-ரை: பிறப்புடைய
ஆன்மாக்களுக்குப் படைக்கப் பட்ட உலகங்களை
ஊழிக் காலத்தில் அழியுமாறு செய்பவனும், போரில்
வல்ல விடைமீது ஏறிவருபவனும் ஆகிய சிவபிரான்
மணம் புரிந்த அழகிய இடையினை உடைய உமையாளும்
தானுமாய்ச் சென்று நின்று பொருந்தி விளங்கும்
வளநகர் மாற்பேறாகும். கு-ரை: கருவுடையார் உலகங்கள் வேவ
பிறப்புடைய ஆன்மாக்களின் போக
நுகர்ச்சிக்காகப் படைக்கப்பெற்ற உலகங்கள்
அழிய. உரு - அழகிய. 4. பொ-ரை: எல்லோரினும்
மேம்பட்டவனும், அழகிய தலைமாலையைப் பூண்டு
உயிரைக் கொல்லும் விருப்பொடுவந்த கூற்றுவனைக்
கொன்று மகிழ்ந்தவனும், பல கலைகளையும் உலகிற்கு
அருளியவனும், கயிலாய மலையாளனுமாகிய சிவபிரானது
வளநகர் மாற்பேறாகும். கு-ரை: தலையணிமாலை - கபாலமாலை.
நவில் - விரும்பும். 5. பொ-ரை: பல்வேறு நெறிகளாய்
விளங்குபவனும், பழமையாக வரும் உயிர்களின்
பொருட்டு ஐந்தொழில்களைப் புரிபவனும், |